Skip to main content

Posts

Showing posts from February, 2024

23 குழந்தைகள் கூடுதல் பணம் சம்பாதிக்க சிறந்த வணிக யோசனைகள் ?

 குழந்தைகளுக்கான வணிக யோசனைகளைக் கண்டறிவது, அவர்கள் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்குவது, பொறுப்பாக இருப்பது மற்றும் சிறு வயதிலிருந்தே பணத்தைப் புரிந்துகொள்வது பற்றி அறிந்து கொள்வதற்கான சிறந்த வழியாகும். இலக்குகளை நிர்ணயிப்பது, பணத்தைக் கையாள்வது மற்றும் தங்கள் சொந்த கூடுதல் வருமானத்தைப் பெறுவதில் மகிழ்ச்சியை எப்படி உணருவது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் . கோடையில், பள்ளிக்குப் பிறகு அல்லது வார இறுதி நாட்களில், ஒரு சிறு வணிகம் தொடங்குவது வேடிக்கையாகவும் கல்வியாகவும் இருக்கும். கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக நான் சிறுவயதில் பலவிதமான விஷயங்களைச் செய்தேன், அவர்கள் அனைவரும் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார்கள். குழந்தைகள் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன, நீங்கள் கீழே கற்றுக்கொள்வீர்கள். குழந்தைகள் தொடங்குவதற்கான சிறந்த வணிக யோசனைகள் இங்கே. . 1. கலை மற்றும் கைவினைப்பொருட்களை விற்கவும் உங்கள் குழந்தை ஆக்கப்பூர்வமாக இருப்பதையும், தங்கள் கைகளால் பொருட்களை உருவாக்குவதையும் விரும்பினால், கலை மற்றும் கைவினைப்பொருட்களை விற்பனை செய்வது அவர்களுக்கு ஒரு சிறந்த வணிக யோசனையாக இருக்கும்.  இது ...

சர்வதேச சூழலமைவில் உள்ளடக்கல் கல்வி (lactasive Estication. The International Context) ?

சகல பிள்ளைகளும் தனியார் வேறுபாடுகள் அல்லது பண்புகளை கருத்திற் கொள்ளாமல் பாடசாலையில் உள்ளடக்கப்படல். சகல பிள்ளைகளும் பாடசாலை உள்ளடக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி சம அடிப்படையில் கற்றல் செயலொழுங்கிலும் உள்ளடக்கப்படல். உள்ளடக்கல் கல்வி என்றால் என்ன? உட்படுத்தல் கல்வியானது சமவாய்ப்பு என்ற அடிப்படையில் ஒவ்வொரு பிள்ளையும் கல்வியில் பங்குபற்றவதற்கான உரிமையினையும் சகல மாணவர்களும் கற்கவும் கல்வியில் நன்மை பெறவும் உறுதி செய்கின்றது. ஆகவே உட்படுத்தல் கல்வி எண்ணக்கரு சாதாரண பாடசாலைகளில் குறைபாடுடைய பிள்ளைகளை உள்வாங்குவதுடன் தொடர்புபட்ட போதிலும் பரந்த நோக்கில் கல்வியுரிமை மறுக்கப்பட்டவர்களும் கல்வியின் பிரதான நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் ஆபத்தில் உள்ளோருக்கும் வழிகாட்டலை வழங்குகிறது. உட்படுத்தல் கல்வி என்ற எண்ணக்கருவானது சகல பிள்ளைகளையும் பிரதான பாடசாலை நீரோட்டத்தினுள் கொண்டு வருவதைக் குறிக்கும்.  உட்படுத்தல் என்பது பாடசாலைகளில் பங்குபற்றுவதற்கான சிறுவரது உரிமை பற்றியதாகும்.  சிறந்த பல நலனோம்பல்களுடன் இலவசக் கல்வி அளிக்கப்பட்ட போதிலும் தற்போது பலவீனமான குழுக்கள் இடம்பெறுவதில் எல்லோருக்கும்...

Attitudes ( மனப்பான்மைகள் )

மனப்பான்மை என்ற கருதுகோள் சமூக உளவியலில் முக்கியமான ஒன்றாகும். சமூக மனப்பான்மைகள் மனிதனுடைய நடத்தையை திசைதிருப்பவதிலும், வழிநடாத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொருத்தமான சமூக மனப்பான்மைகளை அமைத்துக் கொள்வதிலிருந்து ஒருவன் தலைவனாகவோ, தொழிலாழியாகவொ ஆகின்றான். பிறவியிலேயை மேற்கண்டவாறு யாரும் பிறப்பதில்லை மனப்பான்மை பற்றி சில அறிஞர்களின் வரையறைகள் வருமாறு. G.W. Allport: மனப்பான்மை என்பது அனுபவங்களின் மூலமாக ஒன்று படுத்தப்பட்ட மன மற்றும் நரம்புகள் சார்ந்த ஒரு ஆயத்தநிலை. Newcomb: மனப்பான்மை என்பது செயல் தூண்டுதல், உணர்ச்சியை எழுப்புதலுக்கான ஒரு ஆயத்த நிலை என குறிப்பிடுகின்றார். Sargent and Williamson: தனிமனிதர்கள் பொருட்கள் அல்லது சூழ்நிலைகள் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்து கொள்ள செய்கின்ற ஒருங்கிணைந்து கற்றறிந்த ஒரு போக்கு. மனப்பான்மை பற்றிய தற்பொழுதைய விளக்கமானது மனிதர்கள், பொருட்கள் அல்லது முக்கிய செய்திகள் ஆகியவற்றை பற்றிய பொதுவான மதிப்பீடே மனப்பான்மை மன வலியுறுத்தப்படுகின்றது. சமூக மனப்பான்மையின் சிறப்புக் கூறுகள். சமூக அக்கறைகளின் தனித்துவமான அம்சங்கள் சூழ்நிலையின் ஒரு...

தப்பெண்ணமும் வேற்றுமை காணுதலும்

  சமூக உளவியலில் தப்பெண்ணமும் வேற்றமை காணுதலும் மிக முக்கியமாக கருதப்படுகின்றது. உளவியல் வல்லுணர்கள் இச்சொற்களை வேறுபடுத்திக் காட்டுகின்றார்கள், பொதுவாக தப்பெண்ணம் என்பது ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த மனிதர்களைப் பற்றி எதிர்மறையாக கொண்டிருக்கும் மனப்பான்மையாகும். மாறாக வேற்றுமை காணுதல் என்பது இத்தகைய மனிதர்கள் மேல் எதிர்மறையாக செயல்படுதலாகும். தப்பெண்ணம் என்பது ஒரு குழுவின் உறுப்பினர்களைப் பற்றிய எதிர்மறையான மனப்பான்மை என்ற 93 பொதுவான நேர்மறையான மனப்பான்மையையும் உள்ளடக்கியதாகும். முற்றக் குழவின் உறுப்பினர்களைப் பற்றி எதிர்மறையான மனப்பான்மை கொண்டிருக்கும் மக்கள் தங்கள் குழுவின் உறுப்பினர்களைப் பற்றி நல்ல மனப்பான்மையை கொண்டுள்ளனர். எனவே தப்பெண்ணம் என்பது ஒரு குழுவின் உறுப்பினர்களைப் பற்றிய எண்ணமே தவிர தனிமனிதர்களின் குணங்களைப்பற்றிய எண்ணம் அல்ல. தப்பெண்ணம் என்பது நன்கு ஆராயப்படாமல் துரிதமாக எடுக்கப்படும். என குறிப்பிடலாம். மனப்பான்மையை போன்று தப்பெண்ணமும் 3 மூலக்கூறுகளை உடையது. ஆவை: 1. நேசத்தன்மை தப்பெண்ணம் கொண்டுள்ள மனிதன் ஒரு குறிப்பிட்ட குழுவின் மேல் கொண்டுள்ள எதிர்மறையான உணர்வ...

Policy dissemination ( கொள்கைபரப்பல் )

கொள்கை பரப்பலானது தற்கால சமூகத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. மனிதர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், போராட்டங்களை உருவாக்கவும் சிக்கல்களை தீர்க்கவும் இதனால் முடியும். கொள்கை பரப்பல் என்பதற்கு பொதுவாக கெட்ட பெயர்தான் உண்டு. இது கடந்த காலத்தில் ஏற்பட்டதாகும். போர் மேகங்கள் சூழ்ந்த காலத்தில் ஒரு நாடு இதனை மிகவும் வலிமையுடன் பிற நாடுகள் மீது சுமத்தும் தூண்டுதல் முறைகளைப் பயன்படுத்தி மக்களது எண்ணங்களை மாற்றி அதன் மூலம் அவர்களது நடத்தையை மாற்றுவதை கொள்கை பரப்பல் எனலாம். ஒரு தனிமனிதரோ. குழுவோ திட்டம் தீட்டி தகுந்த முறைகளைப்பயன்படுத்தி பொதுமக்கள் கருத்தினையும் எண்ணங்களையும் மாற்றியமைக்க கொள்கை பரப்பல் மூலம் முயல்வதுண்டு. L.W.Bubi எனும் அறிஞர் கூறுவதாவது 'கருத்தேற்றத்தினை ஒழுங்கான முறையில் பயன்படுத்திப் பொதுமக்களது மனப்பான்மையைக் கட்டுப்படுத்தவும் அதன் மூலம் அவர்களது நடத்தையை கட்டுப்படுத்தவும் அதற்கு முயலும் தனி மனிதரோ அன்றி மனிதர்களோ எடுத்துக்கொள்ளும் முயற்சியோ கொள்கைபரப்பல்" கொள்கைபரப்பும் விதங்கள். கொள்கை பரப்பல் இரு வகைப்படும். நேரடியாக கொள்கை பரப்பல்,மறைமுகமாக கொள்...

Social Preception ( புலன் காட்சி )

சமூகம், புலன்காட்சி என்பது நம்மைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றி புரிந்து கொள்ளும் செயற்பாங்காகும். நம்முடைய அன்றாட வாழ்வில் இது மிக அவசியமாகும். மற்றவர்களை நாம் புரிந்து கொள்ளும் போது அவர்களுடைய குணங்களையும், நோக்கங்களையம் புரிந்து கொள்கின்றோம். இத்தகைய சமூகப்புலன்காட்சி நமது நடத்தையைப் பாதிக்கின்றது. எனவே சமுகப்புலன் காட்சியைப் பற்றி அறிந்து கொள்ளல் சமூக உளவியல் வல்லுணர்களுக்கு மிக அவசியமாகும். நாம் மற்றவர்களுடன் பழகும் பொழுது அவர்களைப் பற்றி உளப்பதிவுகளை (Impression) ஏற்படுத்திக் கொள்கின்றோம். உதாரணமாக இரண்டு புதிய மாணவர்கள் ஒரு கல்லாரி விடுதியில் ஒரே அறையில் தங்க நேரிடும் பொழுது முதல் முறையாக சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரு ஆண்டு முழுவதும் பலமணி நேரங்கள் ஒன்றாக கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் பொழுது ஒருவருடைய ஆளுமை மற்றவரை பாதிக்கலாம். இருவரும் சந்தித்த முதல் 5 நிமிடங்களில் ஒருவரைப்பற்றி மற்றவர் கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். மற்றவர் எப்படிப் பழகக் கூடியவர்? ஏந்த வகையான இசையை விரும்புபவர்? இரவு காலங்களில் எவ்வளவு நேரம் கண் விழித்திருப்பார்? போன்றவற்றை தெரிந்து கொ...

சமூக உளவியலின் ஆராய்ச்சி முறைகள் ( Methods of Social Psychology )

தனிமனிதர்களுடனும், குழுக்களுடனும் தனிமனிதன் கொள்ளும் உறவுமுறைகளை அறிவியல் பூர்வமாக கற்பதில் சமூக உளவியல் கவனம் கொள்கிறது. சமூக அறிவியல்களில் அது வளர்ந்து வரும் ஓர் அறிவியலாகும். தனிமனிதர்களின் மனித நடத்தையை ஆராய்வதில் அறிவியல் முறைகளை அது பயன்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை. எனவே சமூக உளவியல் மேற்கொள்ளும் ஆராய்ச்சி முறைகளை அறிந்திருப்பது அவசியமாகும். ஆரம்பகால சிந்தனையாளர்கள் சமூக தொடர்பு முறைகளை அனுமானிக்கும் போது மனிதன் இயல்புத்தன்மையை வாழ்க்கையின் பிற உண்மைகளைப் போன்றும் இயற்கையை விபரிப்பது போன்றும் விபரித்தனர். தற்கால சமூக உளவியலாளர்கள் மனித நடத்தை முறைகளைக் கட்டுப்படுத்த வருமுன் உரைக்கவும் வேண்டும் என்பதனால் அவற்றை அறிந்து உயர்ந்து கொள்ள அறிவியல் முறைகளைப் பின்பற்றுகின்றனர். அதன் அணுகுமுறை தத்துவரீதியிலானதாகவும் செய்முறைக் குட்பட்டதாகவும் உள்ளது. அறிவியல் முறையிலான எல்லாவகை துறைகளும் 3 நிலைகளில் வளர்ச்சி அடைந்தன. 1. தத்துவம் உருவாக்கும் நிலை 2. தரவுகளை உற்று நோக்கி குறிப்பெடுத்துக் கொள்ளல் 3. சோதனை சாசையும் ஆராய்ச்சி நிறுவனங்களும் ஆராய்ச்சி நடத்துவதற்கான ஆராய்ச்சி கூடங்களை ஏற்படுத்த...

Social Psychology ( சமூக உளவியல் )

 உளவியல் பல நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு சொல்லாகும். விசேடமாக இலங்கையில் 60 வருடங்களுக்கு முன்பிருந்து பலர் இச்சொல்லை கையாண்டுள்ளமை புலப்படுகின்றது. கிரேக்கத்திலிருந்தே உளவியலின் வரலாறு உளவியலின் வளர்ச்சியானது ஆரம்பமாகின்றது. அவ்வாறே தொடங்கி மெய்யியலிலிருந்து உடற்கூற்றியல், இயற்பியல் எனப் பல படிவங்களை கடந்து வந்துள்ளது. மருத்துவவியல், வரலாறு முழுவதும் மக்கள் உளவியல் பிரச்சினைகளுடன் தொடர்புபட்டு வருகின்றனர். உளவியல் வரலாறு குறித்துப் பேசுகின்ற நூல்கள் ஹிப்போக்ரட்டீஸ்னதும், பிளட்டோவினதும், அரிஸ்டோட்டினதும் கருத்துக்களாகிய கிரேக்க மெய்யியலாளர்களின் கருத்துக்களை ஆராய்கின்றது. அதிலும் குறிப்பாக தற்கால உளவியல் சார் உடலியல் ஆய்வின் முன்னோடியான கிரேக்க மருத்துவரான ஹிப்போக்கிரடிஸ் வைத்திய உளவியல் துறைகளில் காட்டிய அக்கறைகளில் உள்ளத்துக்கும் உடலுக்குமிடையிலான தொடர்பு குறித்த சிக்கல்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. பிளட்டோ "கருத்துக்களின் உலகம்" (World of Ideas) இருந்து வருவதாக கொடுத்த விளக்கம் உளவியல் சார்பானதாகும். இதனூடாக ஆத்மாக்களின் இருப்பிடமான தெய்வீக இடம...

Post Traumatic Stress Disoder - PTSD ( தகைப்பிற்குப் பிற்பட்ட உளவடுக் கோளாறு ) ?

வாழ்க்கையில் திடீர் என ஏற்படக்கூடிய விபரீதமான, கொடூரமான, விபத்துக்கள், அனர்த்தங்கள் ஆகியன அனேக மக்களில் உளப்பாதிப்பை உருவாக்குகின்றன. இதன் விளைவாக ஏற்படும் உள்ககோளாறுகள் PTSD எனப்படும். Ex அண்மையில் ஏற்பட்ட சுனாமி. சுனாமி, பூகம்பம், சூராவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்தம், கலவரம், விபத்து, சித்திரவதை போன்ற செயற்கை நிகழ்வுகள் என்பவுைம் உளவடுவை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் PTSD க்கு ஆளாகின்றனர். ஒருவர் PTSD க்கு உட்பட்டுள்ளாரா என்பதை அவரின் உடலிலும், உள்ளத்திலும் வெளிப்படும் குணங்குறிகளைக் கொண்டு இளங்கண்டு கொள்ளலாம். ஆரம்ப நிலையில் அதிர்ச்சியினால் உள்ளமும், உடலும் அசந்த செயலற்று காணப்படுவதுடன் மயக்க நிலையும் ஏற்படலாம், அல்லது நிகழ்ந்தவற்றை முற்றாக மறுத்தல் அதன் தாக்கத்தை மிகக் குறைத்துக் கணித்தல் எனப்படும் 'உண்மை மறுத்தல்' ஏற்படலாம். அதிர்ச்சியும், உண்மை மறத்தலும் உளவியல் தற்காப்பு பொறி முறைகள் எனப்படும். இதில் பின்வரும் அறிகுறிகள் காணப்படும். அதிர்ச்சி, கடுமையான தொடர்ச்சியான பதகளிப்பு உணர்ச்சி மறுத்து போன ...

Private Intelligence ( தனியாள் உளவளத்துணை ) ?

உளவளத்துணையின் அடிப்படை அம்சமாக இருப்பது தனியாள் அபிவிருத்திக்கு கை கொடுப்பதாகும். இதில் பின்வரும் அடிப்படை நோக்கங்கள் காணப்படுகின்றன. தனியாள் நலன்களை மேம்படுத்துதல் மனிதனை மனிதனாக மதித்தல் தனி நபர் கௌரவத்தினை அடிப்படையாக கொண்டிருத்தல் உளவளத்துணை ஒன்றுன் ஒன்று தொடர்புபட்ட செயல் முறையாக இருத்தல் உளவளத்துறை செயல் முறை இலக்கை நோக்கி செல்லல். அதிக சந்தர்ப்பங்களில் தமது வாழ்க்கை பற்றியும் பிரச்சினைகள் பற்றியும் அறிவு ரீதியான முறையில் நோக்குவதால் பல்வேறு பிரச்சினைகள், சச்சரவுகள் ஏற்பட இடமுண்டு. ஆனால் உளவளத்துணை நடவடிக்கைகளினூடக தனியாள் நலன்கள் கட்டாயமாக கவளிக்கப்படல் வேண்டும். அதும்டுமல்லாது ஒரு மனிதனை மனிதனாக மதித்தல் இங்கு நடைபெறுகின்றது. இங்கு கட்டணையிடல் என்னும் செயல் முறை நடைபெறக் கூடாது. பின்வரும் பண்புகள் உளவனத் துணையாளர்களிடம் காப்படல் வேண்டும். மோசடியற்ற, நேர்மையான ஒருவராக இருத்தல் விரோத மனப்பான்மை அற்றவர் நிபந்தனையற்ற சாதக எண்ணங்களையும். கண்காணிப்பையும் விருத்தி செய்து கொள்ளல் மற்றவர்களின் உணரவை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவராக இருத்தல் சுய அடைவிற்கு உள்ளாதல் சேவை நாடியை கருத்துள...