Skip to main content

STEAM EDUCATION ( நீராவிக்கல்வி )

 STEAM கல்வி என்பது, நியஉலகின் (Real world) பரச்சினைகள் பற்றி பரந்துபட்டு சிந்திப்பதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒன்றிணைந்த கற்றல் அணுகுமுறையாகும்.

விஞ்ஞானம் (Science), தொழில்நுட்பம் (Technology), பொறியியல் (Engineering), கலை (Arts) மற்றும் கணிதம் (Mathematics) ஆகியதுறைகளின் கூட்டிணைவாகும்.

Georgette Yakman என்பவர் STEAM கல்வியை முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார். STEAM என்பது எழுதப்பட்ட கலைத்திட்டம் ஒன்றல்ல. இதுவொரு கற்றல் அணுகுமுறையாகும். (Learning approach).


STEM கல்வி மற்றும் STEAM கல்வி இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு.

STEM கல்வி மற்றும் STEAM கல்வி இரண்டுமே விஞ்ஞான எண்ணக்கருக்களை அணுகுவதற்கான வழிமுறையாகும்.

ஆனால், STEM கல்வி, பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வன்திறன்களை (Hard skills) மட்டும் பிரயோகிக்கின்றது. ஆனால் STEAM கல்வி பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வன்திறன்களை (Hard skills) மற்றும் மென்திறன்கள் (Soft skills) இரண்டையும் பிரயோகிக்கின்றது.

மேலும் STEAM கல்வி, STEM எண்ணக்கருக்களை புரிந்துகொள்வதற்காக கூட்டுணர்வை (Collaboration) ஊக்கப்படுத்துகின்றது.


STEAM கல்வியின் இயல்புகள்

21 ஆம் நூற்றாண்டின் பணியாட்களிற்கு தேவையான திறன்களான பிரச்சனை விடுவித்தல் (Problem solving) மற்றும் திறனாய்வுச்சிந்தனை (Critical thinking) என்பவற்றை கட்டியெழுப்புவதற்கான கல்விசார் மாதிரிகையாக (Educational Model) STEAM கல்வி கருதப்படுகின்றது.

எதிர்காலத்தில் மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கு STEAM கல்வி அவசியமாகும். STEAM கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், விஞ்ஞானம் (Science), பொறியியல் (Engineering) மற்றும் ஆய்வு (Research) ஆகிய பரந்துபட்ட துறைகளில் மாணவர்களை, வேலைவாய்ப்புக்காக தயார்ப்படுத்துகின்றன.

STEAM துறையில் கற்றவர்கள், பரந்துபட்ட தொழில்துறையில், வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்


STEAM கல்வியின் நன்மைகள்

  • நியஉலகின் (Real world) பிரச்சனைகளை வெளிக்காட்டுகிறது. 
  • நேரடிக்கற்றலை (Hands on learning) உள்ளடக்குகிறது.
  • (Independent exploration) ஊக்குவிக்கின்றது.
  • கூட்டுணர்வை கற்பிக்கிறது.
  • கல்வியில் சமத்துவத்தை ஊக்குவிக்கிறது.
  • (Developing soft skills) தொடர்பாடல் (communication) ພໍ (Critical thinking) படைபாற்றல் (Creativity) (Problem solving) एं (Collaboration) ஈடுபாடு (Engagement) மற்றும் ஊக்கல் (Motivation)
  • கற்றல் அனுபவங்களை தனியுரிமையாக்குதல் (Personalizing learning experiences )


STEAM கல்வி கற்பித்தல் முறைகள்

செயற்றிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கற்றல் (Project-based learning). ( கணக்கீட்டு சிந்தனை) மார்க்கர் இடைவெளிகள். STEAM கற்றல் செயற்பாட்டுக்கான உதாரணங்கள்

  • • DIY பொறியியல்
  • • பாலம் கட்டும் சவால்கள் பொறியியல் யோசனைகளை ஆராய்கின்றன
  • • எரிமலையை உருவாக்குங்கள் (அறிவியல்)
  • • ஆப்பிள் ஆக்சிஜனேற்றம் (அறிவியல்)

Comments

Popular posts from this blog

கலைத்திட்டம் ( Curriculum ) என்றால் என்ன ?

    கலைத்திட்டம் வரைவிலக்கணம்  கலைத்திட்டம் என்பது பாடசாலையிலோ குழுவாகவோ , தனியாகவோ , ஆசிரியருடனோ , ஆசிரியர் இன்றியோ நிறைவு செய்து கொள்ளத்தக்கவாறு பாடசாலையினால் திட்டமிடப்பட்டு நெறிப்படுத்தப்படும் சகல அனுபவங்களும் ஆகும் " கலைத்திட்டத்தின் மறுபெயர்கள்  பாட விதானம் கல்வி ஓடும் பாதை  பயில்களம்  அறிவூர்தி  கல்விக்கட்டுமானம்  கலைத்திட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்  உலக அறிவுகள் ( உலகமயமாக்கலும் அதன் தாக்கமும் )  கல்வியில் கோட்பாடுகள் ( சமூகவியல் , கல்வித்தத்துவம். . )  அரசியல் நிலமைகள்   பொருளாதாரக் காரணிகள்  கலாசார விழுமியங்கள் கலைத்திட்டத்தின் பண்புகள் . 1. தற்போதை சமூகத் தேவைகளை நிறைவு செய்தல்  2. எதிர்கால சமூகத் தேவைகளை நிறைவு செய்தல்  3.பண்பாட்டைக் பாதுகாத்தலும் , வளப்படுத்துலும் .  4.சமநிலையான ஆளுமையை விருத்தி செய்தல்  5. தனியாளிடத்தில் ஆக்கத்திறன் , மதினுட்பத்திறன்களை விருத்தி செய்தல்  6. தொழிலில் ஈடுபடுவதற்குத் தேவையான அடிப்படைத் திறன்களை விருத்தி செய்தல்  7. தனியாளினதும் சமூக...

கல்வி உளவியல் ( பியாஜேயின் அறிவாற்றல் விருத்தி )

பிள்ளைகளின் அறிவாற்றல் விருத்தி தொடர்பாக முதன் முதலில் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் சுவிற்சலாந்து தேசத்தவரான ஜீன் பியாஜே எனும் உளவியலாளர் ஆவார். இவரது கருத்துப்படி அறிதிறன் வளர்ச்சியானது தொடர்ச்சியானதாக மட்டுமன்றி வரிசைக்கிரமமாக அமைந்த பலபடிநிலைகளில் நிகழ்கிறது. பியாஜேயின் அறிவாற்றல் விருத்திக் கொள்கையின்படி நுண்மதியானது வளர்ச்சியடையும் உயிரிக்கும் சூழலுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகள் காரணமாக மென்மேலும் சிக்கலான மற்றும் நெகிழ்ச்சியான பல கட்டங்களுக்கு ஊடாகக் கட்டியெழுப்பப்படுவதாகக் கருதப்படுகின்றது. அறிவாற்றல் விருத்தியின் தொடக்கத்தையும் வளர்ச்சியையும் விவரிப்பதற்காக பியாஜே புதிய சொற்களஞ்சியமொன்றைப் பயன்படுத்தினார்.  திரளமைப்புக்கள்  தழுவல் ஒருங்கிணைப்பு தன்மையாக்கல்  சமநிலை ஒழுங்கமைப்பு  ஸ்கீமா- திரளமைப்புக்கள் ஒருவர் புறவாரியாகக் காட்டும் செயற்பாடுகள் காரணமாக உள்ளார்ந்த ரீதியில் உளக்கட்டமைப்புகளில் மாற்றங்கள் நிகழும் இவ்வாறான உளக்கட்டமைப்புகள் நிதமும் மாற்றமடைந்த வண்ணமிருக்கும். இவ்வாறான உளக்கட்டமைப்புக்களை ஸ்கீமா அதாவது திரளமைப்புகள் எனக் கூறலாம்.  பிள்ளைய...

Special needs ( விசேட தேவையுடைய மாணவர்கள் ? ?

  வகுப்பறையில் நடைமுறைப்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் செயல்முறையின் மூலம் பயன்பெற முடியாத அளவுக்கு கற்றல் குறைபாடுடைய பிள்ளைகளே விசேட மாணவர்கள் எனப்படும். கற்றல் இடர்பாட்டிற்கான காரணங்கள் ? 1. உடல் குறைபாடு 2. உளக் குறைபாடு 3.சமூகச் சூழ்நிலை 4. குடும்பப் பின்னணி 5. ஆசிரியர் -வகுப்பு-பாடசாலை 6.போர் - வன்செயல் 1. உடல் குறைபாடு செவிப்புலன் குறைபாடு கண்பார்வைக் குறைபாடு பேச்சுக் குறைபாடு அங்கவீனம், போசாக்கின்மை 2. உளக் குறைபாடு மன அழுத்தம், நெருக்கீடு அன்பு, காப்பு, கணிப்புக் குறைதல் உளவியல் தேவைகள் பூர்த்தியாகாமை 3.சமூகச் சூழ்நிலை வறுமை சமூகக் கட்டமைப்பு பிரதேசம் சார் பழக்கவழக்கம் சரியான வழிகாட்டலின்மை 4.குடும்பப் பின்னணி பெற்றோர் பிரிந்திருத்தல் பெற்றோர் இழப்பு பெற்றோரின் தவறான நடத்தை அறியாமை அசிரத்தை /கவனயீனம் 5.ஆசிரியர் - வகுப்பு-பாடசாலை பாரபட்சம் தண்டனை ஊக்குவிப்பின்மை ஆசிரியர் அசிரத்தை பொருத்தமான கற்றலின் மை பிள்ளையைப் புரியாமை 6.போர் - வன்செயல் இடம்பெயர்வு கற்றல் உபகரணங்கள் இழப்பு சில காலம் கல்வி இழத்தல் வரவு ஒழுங்கின்மை விசேட தேவையுடைய மாணவர்களின் இயல்புகள் உடல்சார்ந்த பிரச்ச...