பிள்ளைகளின் அறிவாற்றல் விருத்தி தொடர்பாக முதன் முதலில் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் சுவிற்சலாந்து தேசத்தவரான ஜீன் பியாஜே எனும் உளவியலாளர் ஆவார். இவரது கருத்துப்படி அறிதிறன் வளர்ச்சியானது தொடர்ச்சியானதாக மட்டுமன்றி வரிசைக்கிரமமாக அமைந்த பலபடிநிலைகளில் நிகழ்கிறது.

பியாஜேயின் அறிவாற்றல் விருத்திக் கொள்கையின்படி நுண்மதியானது வளர்ச்சியடையும் உயிரிக்கும் சூழலுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகள் காரணமாக மென்மேலும் சிக்கலான மற்றும் நெகிழ்ச்சியான பல கட்டங்களுக்கு ஊடாகக் கட்டியெழுப்பப்படுவதாகக் கருதப்படுகின்றது.

அறிவாற்றல் விருத்தியின் தொடக்கத்தையும் வளர்ச்சியையும் விவரிப்பதற்காக பியாஜே புதிய சொற்களஞ்சியமொன்றைப் பயன்படுத்தினார். 

  • திரளமைப்புக்கள் 
  • தழுவல்
  • ஒருங்கிணைப்பு
  • தன்மையாக்கல் 
  • சமநிலை
  • ஒழுங்கமைப்பு 


ஸ்கீமா- திரளமைப்புக்கள்

ஒருவர் புறவாரியாகக் காட்டும் செயற்பாடுகள் காரணமாக உள்ளார்ந்த ரீதியில் உளக்கட்டமைப்புகளில் மாற்றங்கள் நிகழும் இவ்வாறான உளக்கட்டமைப்புகள் நிதமும் மாற்றமடைந்த வண்ணமிருக்கும். இவ்வாறான உளக்கட்டமைப்புக்களை ஸ்கீமா அதாவது திரளமைப்புகள் எனக் கூறலாம். 

பிள்ளையொன்று பிறக்கும் போது உளவிருத்திக்குச் சாதகமான உளத்திரளமைப்புகள் அதாவது ஸ்கீமாக்களுடனேயே பிறப்பதாக பியாஜே கூறுகின்றார்.


தழுவல்

சமூகத்துக்கு இசைவடைதல் அதாவது தழுவல் என்பது ஒவ்வோர் அங்கியினதும் தன்மையாகும். உயிரிக்கும் சூழலுக்கும் இடையிலான இடைத்தொழிற்பாடுகள் காரணமாகவே இசைவடைதல் நிகழும் சிலபோது தனியாளிடமுள்ள திறன்களாகக் காணப்படுபவை முன்னர் இடம்பெற்ற இடைத்தொழிற்பாடுகளின் பெறுபேறுகளாகும். புதிய அனுபவங்களைப் போது தனியாளின் உளக்கோலங்களில் அதாவது திரளமைப்புக்களில் மாற்றம் ஏற்படும்.
உ-ம்:- ஓணான் நிறத்தை மாற்றுதல்.
தழுவல் செயன்முறை ஒன்றுடனொன்று தொடர்புடைய இரண்டு படிமுறைகளைக் கொண்டது.

  • தன்மயமாக்கல்
  • தன்னமைவாக்கல்


தன்மயமாக்கல்

புதியதொரு சந்தர்ப்பத்தை அடைந்த நிலையில் அதாவது அனுபவமொன்றினை எதிர்கொள்ளும் நிலையில் அப் புதிய சந்தர்ப்பத்தை விளங்கிக்கொள்வதற்காக அதுவரையில் காணப்படும் திரளமைப்புக்களைப்  பயன்படுத்துவதே தன்மயமாக்கல் ஆகும்.  

தன்மயமாக்கலின் போது புதிய அனுபவமொன்றை ஏற்கனவே உள்ள திரளமைப்பினுள் ஒன்றிணைக்கும் உளச் செயற்பாடாகும் இங்கு திரளமைப்பில் யாதேனும் மாற்றம் ஏற்படுவதில்லை. தாம் அறிந்து வைத்துள்ளவற்றின்படி விளங்கிக்கொள்வது மாத்திரமே நிகழுகின்றது.

  • உ-ம்:- பெண்கள் தலைமுடி வளர்ப்பர். வளர்த்திருந்தால் பெண் என நினைத்தல். ஆண் தலைமுடி


தன்னமைவாக்கல்

புதிய எண்ணக்கருவொன்றை விளங்கிக்கொள்வதற்காக தம்மிடத்தே உள்ள உளத் திரளமைப்புக்கள் போதுமானவையாக அமையாதபோது அதனை விளங்கிக் கொள்வதற்காக ஆர்வம் ஏற்பட்டு தமது உளத்திரளமைப்பை மாற்றிக் கொள்ள முயற்சித்தலே தன்னமைவாக்கம் அல்லது தன்னமைவாதல் எனப்படும்.

தன்னமைவாக்கலின் போது புதிய தகவல்களுக்குப் பொருத்தமானவாறு ஏற்கனவே காணப்பட்ட உளத்திரளமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

  • தலைமுடி நீளமாக வளர்த்த ஆணைப் பெண் 61631 நினைத்த பிள்ளை பின்னர் தவறான விளக்கத்தை மாற்றிக் கொள்ளுதல்.


Equibulium ( சமநிலை )

யதார்த்த நிலையை விளங்கிக் கொள்வதற்குத் தன்னமைவாக்கல் போதுமானதாக அமையாத போது அப்பிரச்சினையின் முன்னிலையில் உளச்சமனிலை கலையும். எனவே மீண்டும் உளச்சமனிலையை ஏற்படுத்திக் கொள்ள அவர் முனைவார். அப்போது புதிய அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளக் கூடியவாறாக திரளமைப்பை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டி ஏற்படும். இவ்வாறாக தன்னமைவாதலுக்கும் இடையே தன்மயமாக்கலுக்கும் சமனிலையைப் பாதுகாக்கும் சக்தியே சமனிலை எனப்படுகின்றது


பியாஜேயின் பிள்ளை விருத்திப் பருவங்கள்

1. புலனியக்கப்பருவம் பிறப்பு தொடக்கம் 02 வருட வயது வரை
2. தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவம் (02 வருடம் தொடக்கம் 07 வருடம் வரை )
3. தூல சிந்தனைப்பருவம் / பருப்பொருள் சிந்தனைப்பருவம் (07 வருடம் தொடக்கம் 11 வருடம் வரை )
4. நியம சிந்தனைப் பருவம் (12 வருடங்களுக்கு மேல் )


Piaget's Cognitive Development in tamil


துணையான செயற்பாட்டுப் பருவம் : குழந்தை தமது செயல்களின் விளைவுகள் தொடர்பாக கவனஞ் செலுத்தும் பருவம் இதுவாகும். இந்த நிலைமையை உறுதிப்படுத்தும் மிகச் சிறந்த ஓர் உதாரணம் விளையாட்டுப் பொருளொன்று தொடர்பாகப் பெறும் அனுபவங்களை மீண்டும் மீண்டும் செய்ய முயற்சித்தலாகும். பொருளின் நிரந்தரத்தன்மை தொடர்பான எண்ணக்கரு இதன் முலம் வளர்ச்சியடையும்.

அடிப்படையான தொழிற்பாட்டுப் பருவம் : தமது உடலின் உறுப்புக்களைப் பயன்படுத்தி சில நிகழ்வுகள் நிகழ இடமளிக்கப்படும். உதாரணம்-தற்செயலாகக் கையில் அளிக்கப்படும் எதனையும் வாயில் போட்டுக் கொள்ளுதல். பற்றுதல், சூப்புதல் ஆகிய இரண்டு கோலங்களும் ஒன்றிணைந்து செயற்படும்.

துணையான இணைப்புப் பருவம் : அறிவாற்றல் எனக் குறிப்பிடத்தக்க நடத்தைக் கோலங்கள் இப்பருவத்திலேயே வெளிக் கொணரப்படும். எதிர்பார்ப்புக்களோடு செயற்படுவதைக் காணலாம்.

புடை நிலை தொழிற்பாட்டுப் பருவம் : ஓரளவுக்கு கையாண்டு பார்த்தல்களில் ஈடுபவர். பொருள்களுடன் விளையாடுவதற்கு அவற்றைக் கையாளக் கூடிய புதிய முறைகளைக் கையாண்டு பார்ப்பர். நடக்கும் திறன் விருத்தி அடைவதோடு தேடலும் விருத்தியடையும்.

சிந்தித்தல் ஆரம்பிக்கும் பருவம் :  முன்னைய நடத்தைக் கோலங்கள் மீது புதிய நடத்தைக் கோலங்கள் கட்டியெழுப்பப்படுவதையும் அவற்றைப் பயன்படுத்துவதையும் இப்பருவத்தில் காணலாம். புதிய திறன்கள் காரணமாக முயன்று தவறுவதற்குப் பதிலாக ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட நடத்தைகளைக் காணலூர். புதிய நடத்தைக் கோலங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். உளச் செயற்பாட்டைப் பயன்படுத்துவதைக் காணலாம். இங்கு செயற்பட முன்னர் சிந்தனை செய்வது அவசியமாகின்றது.


2. தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவம் ( 02-07 ) (Pre Operational stage)

புலனியக்கப்பருவத்தின் முடிவுக்கும் தூல சிந்தனைப் பருவத்தின் தொடக்கத்துக்கும் இடையிலான பருவமே தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவமாகும். பியாஜே இவ்விருத்திப் பருவத்தை மேலும் இரு உப பிரிவுகளாகப் பிரித்துக் காட்டியுள்ளார். 

a. எண்ணக்கருவுக்கு முற்பட்ட காலம்- (2-4  Pre-operation Stage
b. ஆக்கச் சிந்தனைப் பருவம் (4-7 Intuitive Stage

இப்பருவத்தினர் காட்டும் சிறப்பான இயல்பு வெளி உலகத்தைக் குறியீடுகள் மூலம் காட்டும் திறனாகும்.இதன் தொடக்கத்தைப் போலச் செய்தலில் காணலாம். போலச செய்தலின் போது யாதேனுமொரு பொருளுக்காகப் பிறிதொரு பொருளைப் பயன்படுத்துவர். உயிரற்ற சடப் பொருள்களையும் உயிருள்ள பொருளாகக் கருதுவர்.

உதாரணம்- குழந்தைகள் உயிரற்ற பொம்மைகளைச் சிறு குழந்தைகளாகப் பாவித்துக் குளிப்பாட்டி, உடை அணிவித்து படுக்கையில் தம் பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள். குழந்தைகள் பொருள்களை ஒரேயொரு குறிப்பிட்ட சிறப்புப் பண்பின் அடிப்படையில் மட்டுமே வகைப்படுத்துவர். அளவு தொடர்பான காப்புத்தன்மை பற்றிய போதிய விளக்கம் காணப்படாது. சிந்தனையின் பின்திரும்பும் இயல்பு விருத்தியடையாது காணப்படும்.

தாய் தந்தையரைச் சர்வ வல்லமை படைத்தவராகவும். எங்கும் நிறைந்திருப்பவராகவும் நினைக்கும் மனநிலையில் இப்பருவக் குழந்தைகள் இருக்கும்.


விதிகளை முழுமையாகப் பின்பற்றி எந்த விளையாட்டையும் விளையாடத் தெரியாது. பொருள்களை ஏதேனும் வரிசையில் அடுக்கி வைக்கத் தெரியும். எண்களைப் பயன்படுத்தி இவ்வயதுக் குழந்தைகளால் எளிய குழந்தைகள் கணக்குப் பயிற்சிகளைச் செய்ய இயலும். இயலும் CTC களைச் செய்ய ,பிள்ளை யாதேனும் பிரச்சினைப் பற்றிச் சிந்திக்கும் போது அதன் ஓர் அம்சம் தொடர்பாக மாத்திரம் சிந்தனையைச் செலுத்தும். மொழிப் பயன்பாட்டுத் திறன் முறைமையானதாக அமைவதால் இப்பருவத்தில் சிந்தனை ஆற்றல் விருத்தியடையும்.

பியாஜேயின் கருத்துப்படி, அறிவாற்றல் விருத்தியின் பிரதானமான கருவி மொழியாகும். வயது ஏறத்தாழ 04 வருடங்களாகும் போது மொழி விருத்தி துரிதமாக நிகழும் மொழியைப் பயன்படுத்துவதால் சிந்தனையின் வேகமும் தன்மையும் வேறுபடும். இப்பருவப் பிள்ளைகளின் மற்றுமொரு சிறப்பியல்பு தன் முனைப்பான தன்மையாகும். தன்முனைப்பான தன்மை என்பது. தம்மைச் சூழவுள்ள ஏனையோரும் தாம் நினைப்பதைப் போன்றே, தாம் உணர்வதைப் போன்றே, தாம் காண்பதைப் போன்றே நினைக்கின்றனர், உணர்கின்றனர், காண்கின்றனர், என எண்ணிச் செயற்படுவதாகும்.3. தூல சிந்தனைப் பருவம் / பருப்பொருட் சிந்தனைப் ( 7-12 ) (concrete Operational Stage)

இப்பருவத்தின் சிந்தனையின் பிரதானமான இயல்பு அச்சிந்தனை பருப்பொருள்களை அதாவது தூலப் பொருள்களை அடிப்படையாகக் கொண்டிருத்தலாகும். செயல்களுடனன்றி அவ்வாறு செயல்களுடன் தொடர்புபடுத்தாத வகையில் தர்க்கரீதியில் தியில் மாத்திரம்  சிந்தல் சிந்தனையைச் செலுத்துவது சாத்தியமானதல்ல.

பொருள்களின் பல பண்புகள் பற்றிக் குழந்தையால் ஒரே நேரத்தில் சிந்திக்க முடிகிறது. எனவே பொருள்களின் மாறாத்தன்மையை அறிந்துகொள்ள முடிகிறது. தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவத்தில் விடையளிப்பதற்கு. விளக்குவதற்குச் சிரமப்பட்ட மாறாத்தன்மை எண்ணக்கருக்களை இப்பருவத்தில் விளங்கிக் கொள்வர்.சிந்தனையின் பின் திரும்பும் இயல்பு விருத்தியடையும்.

தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவத்தில் பிள்ளைக்கு யாதேனும் பொருளை ஒட்டு மொத்தமாகவும் அதன் பகுதிகளாகவும் கருத்திற் கொண்டு தர்க்கிக்க முடியாத போதிலும் பருப்பொருட் சிந்தனைப்பருவத்தல் அத்திறனைப் பெறும். காலப் படிமுறை தொடர்பான விளக்கமும் கால வரையறைகள் தொடர்பான விளக்கமும் ஒன்றிணைத்தல் இப்பருவத்தில் நிகழும் மற்றுமொரு அறிவாற்றல் திறனாய்வு அளவுப்படி வரிசைப்படுத்துதல், வகைப்படுத்துதல் போன்றவற்றில் இடம், காலம் சார்ந்த தொடர்புகள் பற்றிய திறன் பெற்றிருந்தாலும் முழுத்தெளிவு காணப்படாது. குற்றங்களை நோக்கத்தின் அடிப்படையில் இல்லாமல் அவற்றின் அளவின் அடிப்படையில் மதிப்பிட முயற்சி செய்வர். எந்த விளையாட்டையும் அதற்குரிய விதியை அனுசரித்து விளையாட முடிகிறது.நியம சிந்தனைப்பருவம் (வயது 12 வருடங்களுக்கு மேல்)" (Formal Operational Stage)

பருப்பொருட்களைப் பயன்படுத்திச் சிந்தனையில் ஈடுபட்ட இப் பருவத்தினர் இனிமேல் கருத்தியல் சிந்தனையில் ஈடுபடத் ssதொடங்குகின்றனர். இந்நிலையில் நேரே எதிரில் இல்லாதவை பற்றியும் புலன் தொடர்பற்றவை பற்றியும் குழந்தையால் சிந்திக்க முடியும். உடனடியான அப்போதைய நிலைமையைக்காட்டிலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள், கற்பனை நிலைமைகள் போன்றவை பற்றியும் சிந்திக்க இயலும். விஞ்ஞானிகளைப் போன்றே செய்ய வேண்டியவை பற்றியும், செய்து முடித்தவை பற்றியும் பதிவு செய்து சோதனைகள் செய்து பார்ப்பர்.

நியம சிந்தனைப் பருவத்தில் உள்ள கட்டிளைஞன் நிகழ்தகவைப் பற்றியும் அவற்றுக்கும் உண்மை நிலைக்கும் இடையிலான தொடர்புகள் பற்றியும் கவனஞ் செலுத்துவான்.

இப்பருவப் பிள்ளையினால் அதாவது கட்டிளைஞனினால் விஞ்ஞான முறையை நடைமுறைப்படுத்த முடியும். கருதுகோள் அமைத்து மாறிகளைக் கட்டுப்படுத்தி உளரீதியில் பரிசோதனைகளைத் திட்டமிடவும் அக்கருதுகோள்களைப் பார்க்க முடியும். எந்த ஒரு விளையாட்டும் அல்லது சமூக அமைப்பு முறையும் பலர் கூடி ஒப்புக் கொள்ளும் ஒரு நியதியால் ஏற்படுகின்றது என்பதனைப் புரிந்து கொள்வதனால் தேவைக்குத் தகுந்தாற்போல விதிமுறைகளை மாற்றியமைத்துக் கொள்ள முயற்சி செய்வர்.

பொதுமைப்படுத்துவதற்கும் சூத்திரங்களை அமைப்பதற்கும் வெளியுலக உதாரணங்களின்றி சிக்கலான எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்ளவும் ஆற்றல் பெறுவர். குற்றங்களை அவற்றின் அளவின் அடிப்படையில் மதிப்பிடாமல் குற்றங்களின் நோக்கத்தைக் கொண்டே மதிப்பிட முயற்சி செய்வர். எந்தக் கருத்தினையும் பிறர் நோக்கிலிருந்து சிந்திக்க முயற்சி செய்வர். உளச் சார்புச் சோதனைப் பிரச்சினைகள், கணிதப் பிரச்சினைகள் போன்றவற்றை மனக்கணக்காகத் தீர்ப்பதற்கு உள்ளத்தில் திட்டமிட்டு தர்க்கம் புரிய முடியும்.பியாஜே கோட்பாட்டில் கல்விப் பயன்கள்

மாணவனுடைய அறிவுத்திறனுக்கேற்ப பாடம் கற்பிக்கும் நிலை அமைதல் வேண்டும். புதிய கருத்துக்களைக் கற்கத் தொடங்குமுன் அக்கருத்துக்களைக் கற்பதற்குரிய முதிர்ச்சியும், ஆயத்தமும் குழந்தை பெற்றிருக்க வேண்டும்.

அறிதிறன் வளர்ச்சி நிலைகளைத் துரிதப்படுத்த இயலாது. ஆசிரியர் ஒவ்வொரு நிலைத் தேர்ச்சியையும் ஊக்குவிக்கத்தக்க அனுபவங்களை இணைத்துக் கற்பித்தல் வேண்டும். 

குழந்தையின் நிலைக்கேற்ற அனுபவங்களைப் பள்ளி தந்து உதவுதல் வேண்டும். பருப்பொருட்களினூடாகக் கற்பிப்பது பயனுடையதாகும்.

ஒழுக்க வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் இணைந்தவை. சுமார் 11 வயதில்தான் செயலின் பின் அமைந்த நோக்கத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

பள்ளி, கல்வி ஏற்பாடு, கற்பித்தல் முறைகள் ஆகியன அறிதிறன் வளர்ச்சி நிலையுடன் இணைக்கப்படல் வேண்டும்

தானே கண்டறியும் முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். செய்யும் செயல்களின் வழியே அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது.

வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயல்கள் மாணவர்களின் சுய ஆற்றலுக்கு உதவும் வகையில் அமைதல் வேண்டும்.

குழந்தைகளை அளவில் சிறிய முதிர்ந்தவர்களாகப் பாவித்தலாகாது. குழந்தைகளின் சிந்தனையும், செயல் முறையும் முதிர்ந்தவரின் சிந்தனை மற்றும் செயலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அதற்கேற்ப கல்விமுறை அமைய வேண்டும். 

அறிவு வளர்ச்சியானது வரிசை முறையாகவும், படிப்படியாகவும் வளரக்கூடியது. ஒவ்வொரு பருவத்துக்குமுரிய அறிவு வளர்ச்சிக்கான கருத்துக்களை முழுமையாகக் கற்றபின்னரே அடுத்த அறிவு வளர்ச்சிக்குரிய பாடக் கருத்துக்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும்.

பிள்ளைகளிடம் ஏற்படுகின்ற எண்ணக்கருக்களின் வகை, தரம் மற்றும் இயல்புகள் என்பவற்றில் தனியாள் வேறுபாடுகள் உள்ளன. என்பதும், உள விருத்தியானது எல்லோரிடமும் ஒரே சீராக முன்னேறுவதில்லை என்பதையும் ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எண்ணக்கரு உருவாக்கத்தில் மொழியின் செல்வாக்கு மிக உயர்வானது. ஆசிரியர் மாணவர் இடைவினையில் மொழிப் பிரயோகம் முக்கிய பங்கு பெற வேண்டும்.

குழந்தையின் அறிதிறன் வளர்ச்சியில் பாடப்பொருள் அனுபவங்களைப் போன்றே கல்வித் துணைச் செயல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

Post a Comment

Previous Post Next Post