தேர்ச்சி என்பது அறிவு, திறன்,மனப்பாங்கு, விழுமியம் சார்ந்த ஓர் உயர்ந்த மட்ட இயலுமையாகும். தேர்ச்சியில் இவ்வம்சங்கள் பல்வேறு மட்டங்களில் இருக்க முடியும்.
சில தேர்ச்சிகள் கூடியளவு திறன் சார்ந்தவையாகவும் வேறு சில தேர்ச்சிகள் அறிவு மற்றும் மனப்பாங்கு கூடியளவு சார்ந்தவையாகவும் இருக்க முடியும்.
- அடிப்படைத் தேர்ச்சிகள்
- புகு நிலைத் தேர்ச்சிகள்
- அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள்
- விருப்புக்குரிய கற்றல் தேர்ச்சிகள்
எதிர்பார்க்கும் தேர்ச்சியை அடைவதற்கான வழிகாட்டல்
- கற்றல் இடர்பாடுகளைக் குறிப்பாகக் கண்டறிதல்
- இடர்பாடுகளுக்கான விசேட செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல்
- ஊக்குவிப்பும் துாண்டலும்.
- விசேட செயற்பாடுகளில் ஈடுபடுத்தல்
- ஆசிரிய ஆலோசகரின் வழிகாட்டல்
வகுப்பாசிரியரின் தொழில்சார் பொறுப்புக்கள்
- அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சியில் நிபுணத்துவமுடையவர்
- அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சியைக் கணிப்டும் முறைகளை அறிந்திருத்தல்.
- பாண்டித்தியத்தை தொடர்ச்சியாகக் கணிப்பீடு செய்தல்
- பாண்டித்தியத்தை அடையாத மாணவர்களின் இடர்பாடுகளைக் கண்டறியும் ஆற்றல்.
- முன்மாதிரிக் கணிப்பீட்டுக் கருவிகளைத் தயாரிக்கும் ஆற்றல்.
- கணிப்பீட்டுப் படிவத்தைக் கையாளும் ஆற்றல்
- அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சியைக் கலைத்திட்டத்துடன் தொடர்புபடுத்துதல்
- பகுப்பாய்வு செய்யும் ஆற்றல்
- ஆவணப்படுத்தல்
- அறிக்கையிடல்
அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளின் பாண்டித்தியத்தை உறுதிப்படுத்துவதில் தொழில்சார் பொறுப்புக்கள்.
பாண்டித்தியத்தை அடைந்துள்ளனர் என இனங்காணப்பட்ட மாணவர்களை விருப்பிற்குரிய கற்றல் தேர்ச்சிகளுக்கு வழிப்படுத்துதல்.
பாண்டித்தியத்தை அணுகியுள்ளனர் என இனங்காணப்பட்ட மாணவர்களை பாண்டித்தியத்தை அடைவதற்கு வழிப்படுத்துதல்.
பாண்டித்தியத்தை அடையவில்லை என இனங்காணப்பட்ட மாணவர்களை எதிர்பார்க்கப்படும் தேர்ச்சிக்கு இட்டுச்செல்வதற்கு வழிகாட்டல்
ஆரம்பப் பிரிவுத் தலைவரின் தொழில்சார் பொறுப்புக்கள்.
- கணிப்பீடு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தல்.
- கணிப்பீடு பற்றிய விளக்கத்தை வழங்குதல்
- கணிப்பீட்டு அறிக்கையைப் பேணுவதற்கும். புள்ளி வரைபை இற்றைப்படுத்துவதற்கும் ஊக்குவித்தல்.
- ஒவ்வொரு வகுப்பிற்குமுரிய கணிப்பீட்டு அறிக்கை. உரிய அட்டவணை தொடர்பான தகவல்களை பகுப்பாய்வு செய்து அதிபருக்கு அறிக்கையிடல்.
- அதிபரின் அறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அட்டவணையை மாதமொருமுறை இற்றைப்படுத்தல்.
- அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சி வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்.
அதிபரின் தொழில்சார் பொறுப்புக்கள்.
- கணிப்பீட்டுக் கலாசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தலைமைத்துவத்தை வழங்குதல்.
- தொழில்சார் ஆசிரியர் அபிவிருத்தி
- இணைப்பாக்கம்
- மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாணவர் அடைவுமட்டத்தை பகுப்பாய்வு செய்து தகவல்களைப் பேணுதல்
- புள்ளிவரைபை அலுவலகத்தில் காட்சிப்படுத்தல்
- இற்றைப்படுத்தல்
- மேற்பார்வைத் திட்டத்தினடிப்படையில் மேற்பார்வை செய்தல்.
- அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சி செயலொழுங்கின் சிறப்பான செயலாற்றலுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- பண்புசார் கணிப்பீட்டுக் கலாசாரத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குதல்.
- அறிக்கையிடல்.
அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளின் நடைமுறைச் செயற்பாடுகள்
1. அத்தியாவசிய கற்றல் தேர்ச்சி வழிகாட்டி
2. முன் திட்டம்
3. தேர்ச்சிக் கருவி
4. தேர்ச்சிப் பயிற்சிக் கொப்பி
5. மாதாந்த சரி வரிப்படம்
6. மாதாந்த குற்று வரிப்படம்
7. பாண்டித்திய அடைவுப் பதிவேடுகள்
8. பாண்டித்தியத்தை எய்தாத மாணவருக்கான வழிகாட்டல் செயற்பாடுகளும் குறிப்புகளும்
மாணவர்களுக்குரிய அத்தியாவசியக்கற்றல் தேர்ச்சிக்கான கணிப்பீட்டுக் கருவி தயாரித்தல்
1. தேர்ச்சி
2. திகதி
3. பாடம்
4. விடயம்
5. பாண்டித்தியத்தைத் தீர்மானிப்பதற்கான நியமங்கள்
6. பாண்டித்தியத் தீர்மானம்
அத்தியாவசியக்கற்றல் தேர்ச்சிக்கான கருவி தயாரித்தல்
1.தேர்ச்சி
2. தன்மை
3. பாடம்
4. விடயம்
5. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிப் பக்கம்
6. எதிர்பார்க்கப்படும் வரையறை
7. காலம்
8. முன்னாயத்தம்
9. கருவி
10. செயலொழுங்கு
11. பாண்டித்தியத்தைத் தீர்மானிப்பதற்கான நியமங்கள்
12. ஏதிர்பார்க்கப்படும் பாண்டித்திய மட்டத்தை அடையாத மாணவர்களுக்கான வழிகாட்டல்.
Post a Comment