Students with special needs in tamil

வகுப்பறையில் நடைமுறைப்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் செயல்முறையின் மூலம் பயன்பெற முடியாத அளவுக்கு கற்றல் குறைபாடுடைய பிள்ளைகளே விசேட மாணவர்கள் எனப்படும்.


கற்றல் இடர்பாட்டிற்கான காரணங்கள் ?

1. உடல் குறைபாடு
2. உளக் குறைபாடு
3.சமூகச் சூழ்நிலை
4. குடும்பப் பின்னணி
5. ஆசிரியர் -வகுப்பு-பாடசாலை
6.போர் - வன்செயல்


1. உடல் குறைபாடு

  • செவிப்புலன் குறைபாடு
  • கண்பார்வைக் குறைபாடு
  • பேச்சுக் குறைபாடு
  • அங்கவீனம், போசாக்கின்மை

2. உளக் குறைபாடு

  • மன அழுத்தம், நெருக்கீடு
  • அன்பு, காப்பு, கணிப்புக் குறைதல்
  • உளவியல் தேவைகள் பூர்த்தியாகாமை

3.சமூகச் சூழ்நிலை

  • வறுமை
  • சமூகக் கட்டமைப்பு
  • பிரதேசம் சார் பழக்கவழக்கம்
  • சரியான வழிகாட்டலின்மை

4.குடும்பப் பின்னணி

  • பெற்றோர் பிரிந்திருத்தல்
  • பெற்றோர் இழப்பு
  • பெற்றோரின் தவறான நடத்தை
  • அறியாமை
  • அசிரத்தை /கவனயீனம்

5.ஆசிரியர் - வகுப்பு-பாடசாலை

  • பாரபட்சம்
  • தண்டனை
  • ஊக்குவிப்பின்மை
  • ஆசிரியர் அசிரத்தை
  • பொருத்தமான கற்றலின் மை
  • பிள்ளையைப் புரியாமை

6.போர் - வன்செயல்

  • இடம்பெயர்வு
  • கற்றல் உபகரணங்கள் இழப்பு
  • சில காலம் கல்வி இழத்தல்
  • வரவு ஒழுங்கின்மை



விசேட தேவையுடைய மாணவர்களின் இயல்புகள்

  • உடல்சார்ந்த பிரச்சினை உள்ள மாணவர்கள்
  • உள்ளம் சார்ந்த பிரச்சினை உள்ள மாணவர்கள்
  • நடத்தைக் கோளாருடைய மாணவர்கள்
  • கற்றல் இடர்பாடுடைய மாணவர்கள்
  • மீள்திறன் கூடிய மாணவர்கள்



பார்வைக் குறைபாடுள்ள பிள்ளைகள் ?


பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளில் காணப்படும் பிரச்சினைகள்
  • குருட்டுத் தன்மை
  • தூரப்பார்வை
  • கிட்டிய பார்வை குறும்பார்வை
  • நிறக்குருடு
  • பார்வையில் அசாதாரண நிலைகள்

பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளில் அவதானிக்கக் கூடிய விடயங்கள்.
  • கண்களை சுருக்கி விரித்துப் பார்த்தல்.
  • வகுப்பறையில் நடமாடுவதற்கு தடுமாறுவார்.
  • கண்களை ஒரு பக்கமாக திருப்பிப் பார்த்தல்.
  • கண்கள் உட்புறமாக/ வெளிப்புறமாக காணப்படுதல்.
  • கண்களில் நீர் வடிதல்.
  • அடிக்கடி தலைவலி ஏற்படல்.
  • கண்கள் சிவப்பு நிறமாகக் காணப்படுதல்.
  • ஏதாவது ஒரு பொருளையோ எழுத்துக்களையோ திடீரென இனங்காண முடியாமை


பார்வைக் குறைபாடுள்ள பிள்ளைகளை வழிநடத்துவதில் ஆசிரியரின் பொறுப்புகள் ?

குறிப்பிட்ட மாணவன் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உதவுதல்.

வகுப்பறையில் உள்ள கற்றல் - கற்பித்தல் சாதனங்களையும் ஆசிரியரையும் இலகுவாக பார்க்கக் கூடிய விதத்தில் மாணவரை அமர்த்துதல்.

பார்வைக் குறைபாடுள்ள பிள்ளைக்கு தெளிவாகப் பார்க்கக் கூடிய ஒளி விளங்கக்கூடியவாறு வகுப்பறையில் அமர்த்துதல்.

வீட்டு வேலைகளையும் அதிகளவு பயிற்சிகளையும் வழங்குவதைத் தவிர்த்தல்.

இழிவு படுத்தல், ஏளனம் செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு குறிப்பிட்ட மாணவன் உள்ளாவதைத் தடுக்க விசேட கவனம் செலுத்துதல்





கேட்டல் குறைபாடுள்ள பிள்ளைகள் ?

இவ்வாறான பிள்ளைகள் இரு வகைப்படுவர்.
  • பூரண செவிட்டுத் தன்மை யுள்ள பிள்ளைகள்
  • கேட்கும் தன்மை குறைவான பிள்ளைகள.


கேட்டல் குறைபாடுள்ள பிள்ளைகளின் இயல்புகள்.
  • எப்போதும் கவனமின்றி இருத்தல்.
  • பயன்படுத்தும் சொற்களஞ்சியம் மிக வரையறுக்கப்பட்டது.
  • இவ்வாறான மாணவர்களின் காதில் சீழ் வரும்.
  • கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க முடியாமை.
  • அசாதாரண முறையில் உரத்த குரலில் பேசுதல்.
  • ஏனையோர் பேசும்போது அருகில் சென்று அவர்களை பார்த்துக் கொண்டிருத்தல்.


கேட்டல் குறைபாடுடைய பிள்ளைகளை வழிகாட்டுவதற்கான ஆசிரியரின் பொறுப்புக்கள்

வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள உதவுதல்.

கேட்டல் குறைபாடுடைய பிள்ளைகளுக்குள் ஆசிரியர் மிகத் தெளிவாகக் கதைத்தல்.

குறிப்பிட்ட குறைபாடுள்ள பிள்ளையுடன் உரையாடும் சந்தர்ப்பங்களில் பிள்ளையின் முகத்தை நோக்கி தெளிவாக ஒலி கேட்க கூடியவாறு சொற்களை உச்சரித்தல்.

பிள்ளையின் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் விருத்தி செய்யும் செயன்முறைகளையும் பின்பற்றுதல்.

கேட்டல் குறைபாடுள்ள உபகரணங்களை உபயோகிக்க மாணவர்கள் அவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.




பேச்சுக் குறைபாடுள்ள பிள்ளைகள் ?

பேச்சு குறைபாட்டின் வகைகள்.
  • உச்சரிப்புக் கோளாறு
  • திக்குதல்
  • குரல் நலிவாக இருத்தல்.



பேச்சுக் குறைபாடுடைய பிள்ளைகளை இனங் காண்பதற்குப் பயன்படுத்தக்கூடிய இயல்புகள்.

யாதேனும் எழுத்துக்குப் பதிலாக பிறிதொரு எழுத்தை உச்சரித்தல்.

சொற்களை உச்சரிக்கும் போது சில சொற்களின் ஒலி விட்டுப் போதல்.

சில சொற்களில் வேறு ஒலிகளை சேர்த்து உச்சரித்தல். சில சொற்களை விகாரப்படுத்தி உச்சரித்தல்.

சொல்லின் முதல் எழுத்துக்களை மீண்டும் மீண்டும் உச்சரித்தல்.




உச்சரிப்புக் கோளாருடைய பிள்ளைகளை வழி நடத்துவதற்கான ஆசிரியரின் பொறுப்புகள்.

பிள்ளையின் மீது பாதகமான வகையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை நீக்குதல்.

சரியான ஒலியை செவிமடுப்பதற்கு பிள்ளைகளுக்கு பயிற்சியளித்தல்.

நாளாந்தம் பயன்படுத்தும் பேச்சுப் பிரயோகங்களின் போது சரியான உச்சரிப்பை பழக்குதல்.

சரியான உச்சரிப்பைப் பிரயோகிப்பதற்கான உள்ளார்ந்த ஊக்களை மாணவரிடத்தே ஏற்படுத்தல்



திக்குதல் குறைபாடுள்ள பிள்ளைகளை வழிநடத்துவதில் ஆசிரியரின் பொறுப்புகள்.

குறிப்பிட்ட பிரச்சினைக்குரிய மாணவருடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தல்.

குறிப்பிட்ட பிரச்சினைக்குரிய மாணவனின் வேறுபாடுகளை இனங் கண்டு வழிநடாத்துதல். தனியாள்

வகுப்பறையில் உள்ள ஒத்துழைப்பைப் பெற்று நடப்பதற்காக வழிகாட்டல் ஏனைய மாணவர்களின் அம்மாணவன் இணைந்து

அம்மாணவனுக்கு பேச்சு செயற்பாடுகளை வழங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 




உள ரீதியான குறைபாடுகள்

அறிவாற்றல் திறன்கள், பொருத்தப்பாடுடைய நடத்தைகள் தொடர்பாக விசேட தேவைகளுடைய பிள்ளைகள் உளம் சார்ந்த குறைபாடுடைய பிள்ளைகள் எனப்படும்.

இவர்களுடைய பிரச்சினைகள் வாழ்க்கையில் ஏனைய அம்சங்களிலும் செல்வாக்குச் செலுத்தும்.

பொதுவாக 70 ஐ விடக் குறைந்த நுண்மதி ஈவைக் கொண்ட பிள்ளைகள் உளம் சார்ந்த கொண்டவர்களாகக் குறைபாடைக் கருதப்படுகின்றனர். 



உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் இயல்புகள்.

நினைவாற்றல் குறைவாக இருக்கும்.

குறிப்பிட்ட விடயத்தில் கவனம் வைத்திருப்பது கடினம்.

பரீட்சைப் பெறுபேறுகள் குறைவாக காணப்படும்.

எப்போதும் தனிமையை நாடுவர்.

பொருத்தமற்ற நடத்தைக் கோலங்கள் காணப்படும்.

பிரச்சினை தீர்க்கும் திறன் மிகக்குறைவாக் காணப்படும்.




உளம் சார்ந்த பிரச்சினைகள் உள்ள மாணவர்கள் தொடர்பாக ஆசிரியர்களின் பொறுப்புக்கள்.

வகுப்பிலுள்ள ஏனைய மாணவர்களிடையே சாதக மனப்பாங்கை ஏற்படுத்த வேண்டும்.

உளம் சார்ந்த பிரச்சினைகள் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் ஆற்றல் கற்றல் வேகம் என்பவற்றிற்கு நடவடிக்கைகளைத் திட்டமிடல். அமைய கற்பித்தல்

பிள்ளையின் தனியாள் வேறுபாடுகளை இனங்கண்டு திறன்களை வளர்ப்பதுடன் தன்னம்பிக்கையை ஏற்படுத்தல்.

குழுச் செயற்பாடுகள் மூலம் சமூகத் திறன்களை வளர்த்தல்.

பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்கும் முறையில் கற்பித்தல் சாதனங்களைத் தயாரித்தல்.



 
ஒழுக்கம் / நடத்தைப் பிரச்சினை உள்ள பிள்ளைகள்

ஒழுக்கம் அல்லது நடத்தை பிரச்சினை பிள்ளைகள் மூன்று வகைப்படுவர். உள்ள

மூர்க்கத்தனமான நடத்தையுள்ள தனிப்பட்ட பிள்ளைகளும் பிள்ளைகளும்

கவனக்குறைவு அல்லது அதி தொழிற்பாடுள்ள பிள்ளைகள்

மனவெழுச்சி  மிக்க/ அதிபர உணர்ச்சிமிக்க பிள்ளைகள்




மூர்க்கத்தனமுடைய பிள்ளைகள்

மூர்க்கத்தனமான / தனிப்பட்ட மாணவர்கள் வகுப்பறையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள். நடத்தைகளை காட்டுவதில்
• பெளதீக சூழல் சார்ந்த காரணிகள்
• குடும்பம் சார்ந்த காரணிகள்
• பாடசாலை சார்ந்த காரணிகள்


பௌதீக சூழல் சார்ந்த காரணிகள்
  • அதிக சனத்தொகை கொண்ட பிரதேசம் 
  • கைத்தொழில் மயமான பிரதேசம் 
  • சேரிப் புறமான பிரதேசம்

குடும்பம் சார்ந்த காரணிகள்
  • குடும்பப் பின்னணி
  • தந்தையின் போதைவஸ்துப் பாவனை
  • தாய் தந்தை முரண்பாடு


பாடசாலை சார்ந்த காரணிகள்.
  • ஆசிரியர்கள் மாணவர்களிடத்தே பாகுபாடு பார்க்கின்றமை.
  • ஒழுங்கான முறையான சட்ட திட்டங்கள் காணப்படாமை.
  • ஆசிரியர்களைக்கிடையில் இணக்கப்பாடு காணப்படாமை.
  • ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே சிறந்த இடைத் தொடர்பின்மை.
  • பாடசாலையில் மாணவர்களுக்கு சீரான கற்பித்தல் நிகழாமை.
  • பாடசாலையில் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை.


மூர்க்கத்தனமான/ தனிப்பட்ட நடத்தை உடைய மாணவர்கள் தொடர்பாக ஆசிரியர்களின் பொறுப்புக்கள்

மாணவரை கொள்ளல். ஆசிரியருக்கு அருகே அமர்த்திக்

நல்ல நடத்தைகளை மாணவரிடையே வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல்.

குறிப்பிட்ட மாணவர்களின் திறன்கள்,ஆற்றல்களை இனங்கண்டு அவற்றை மேம்படுத்த தேவையான சந்தர்ப்பங்களில் ஆலோசனை வழிகாட்டல் சேவைகளை வழங்குதல்.





கற்றல் இடர்பாடுடைய பிள்ளைகள்

இவ்வாறான பிள்ளைகள் இரு வகைப்படுவர். முதன்மையான கற்றல் இடர்பாடு 
சிறப்பான கற்றல் இடர்பாடு


முதன்மையான கற்றல் இடர்பாடு
முதிர்ச்சியை அடையப்குறிப்பிட்ட பெற்றிருத்தல். 
வீட்டிலும் பாடசாலையிலும் குறித்த தேர்ச்சியை அடைவதற்கான சரியான வழிகாட்டல் கிடைக்கப் பெறாத பிள்ளைகள் இதில் உள்ளடங்கும்.


முதன்மையான கற்றல் இடர்பாடு ஏற்படுவதற்கான காரணங்கள்.
ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் இல்லாமை. பெற்றோரால் சரியான முறையில் வழிகாட்டப்படாமை. பிள்ளை பாடசாலைக்கு வருகை தராமை.



சிறப்பான கற்றல் இடர்பாடுடைய பிள்ளைகள் !

முதன்மையான எழுத்து வாசிப்பு கணிதச் செயற்பாடுகள் நுண்மதி மட்டம் என்பவற்றைக்கிடையே ஒன்றுக்கொன்று எதிரான தன்மையை கொண்டுள்ள பிள்ளைகள் இவ்வகையில் சார்ந்ததாகும். 

பிள்ளையின் மூளை சார்ந்த நரம்பு சார்ந்த பிரச்சினைகளும் புறக் காட்சிக் கோளாறுகளும் இப்பிரச்சினைக்கு காரணமாக அமையலாம்.



மீத்திறன் உடைய பிள்ளைகள் (Gifted Children)

வகுப்பறையில் உள்ள எல்லா பிள்ளைகளும் போல் தோற்றத்திலும் வயதிலும் சமமானவர்களாக காணப்பட்டபோதிலும் அறிவு மட்டம் ஆற்றல்கள் பல்வேறு திறனுக்கேற்ப சில பிள்ளைகள் ஏனைய பிள்ளைகளைவிட விருத்தியுடையவர்களாகக் காணப்படும் பிள்ளைகள் இதில் உள்ளடங்குவர்.


மீத்திறனுடையோர் ஏன் மீத்திறன் விசேட தேவையுடைய பிள்ளைகளில் உள்ளடக்கப் படுகின்றனர்.

சாதாரண வகுப்பறைகளில் இருக்கும் அறிவு, திறன், மனப்பாங்கு, பிரயோகம் என்பவற்றில் அதீத ஆற்றலுடையோரை சரியான முறையில் வழிப்படுத்த வேண்டியிருப்பதனால் இவர்களை விசேட தேவையுடைய பிள்ளைகள் எனக் கருதப்படுகின்றது. 



மீத்திறனுடைய பிள்ளைகளின் வகைகள்.
  • ஞானிகள்
  • மேதைகள்
  • திறனியல்புடையோர்
  • ஆக்கத்திறனுடையோர்
  • உள்ளார்ந்த திறனுடையோர்


மீத்திறனுடைய மாணவர்களது நடத்தை இயல்புகள்.
  • தர்க்க ரீதியான சிந்தனை
  • பிரச்சினைகளை இலகுவான முறையில் தீர்க்கும் ஆற்றல்.
  • எண்ணக்கரு சிந்தனை
  • புதிய கருத்துக்களுக்கு விரைவாக துலங்கல்.
  • உயர் நுண்மதி ஈவு
  • கற்பிக்கும் விடயங்களை இலகுவாக விளங்கிக் கொள்ளல்.
  • சிக்கலான வற்றையும் இலகுவாக இனங்காணல்,
  • சுதந்திரமாக செயற்படல்.
  • வாசிப்பில் விருப்பம்
  • முன்வருதல், தலைமைத்துவப் பண்புகள் காணப்படுதல்.
  • வெற்றிகரமான சமூகப் பண்புகள் காணப்படல்.


மீத்திறனுடைய பிள்ளையின் விருத்திக்கு ஆசிரியரின் பங்களிப்பு

வகுப்பறையில் சாதாரண செயற்பாடுகளுக்கு அப்பால் செயற் திட்டங்களில் ஈடுபடுத்தல்.

நாளாந்த வாராந்த பத்திரிகைகளிலும் வகுப்பறை மட்டத்திலும் நூலக செயற்பாடுகளிலும் விருப்பத்துடன் செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்குதல்.

தலைமைத்துவத்தினூடாக தெரியாதவர்களுக்கு கற்பிக்க உதவுதல்.

மாணவர்களது திறமையை மேலும் விருத்தி செய்ய இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்களிப்புச் செய்ய சந்தர்ப்பம் வழங்குதல்.

° சாதாரண கலைத்திட்ட செயற்பாடுகளுக்கு மேலதிகமாக தேடலில் ஈடுபடுத்தல். 





உட்படுத்தல் கல்வி / உள்ளடக்கக் கல்வி

மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளை இனங்கண்டு அதற்கேற்ப பொருத்தமான கற்றல் சூழலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை முதன்மையாகக் கொண்ட பாடசாலையையும் பெற்றோரையும் அரசையும் உள்ளடக்கிய சூழலையும் கொண்ட கற்பித்தல் களம் உட்படுத்தல் கல்வி எனப்படும்.

விசேட தேவையுடைய மாணவர்களின் உரிமையை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கை இதுவாகும்.

விசேட தேவையுடைய மாணவர்களுக்கேற்ப ஒழுங்குபடுத்தி வகுப்பறையை கற்பித்தல் இங்கு இடம் பெறுகின்றது. 



உட்படுத்தல் கல்வியின் இயல்புகள்.
  • இதில் அனைத்து மாணவர்களும் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டிருப்பர்.
  • தேவையுடையவர்களுக்கு விசேட செலுத்தப்படும். கவனம்
  • தனியார் வேறுபாடுகள் தொடர்பாக மாணவர்களுக்கு உடன்பாட்டை ஏற்படுத்தல்

1 Comments

  1. விசேட தேவையுடைய பிள்ளைகள் பற்றி மேலும் படிக்க விரும்பின் எங்களையும் பார்வையிடுங்கள் https://mindtopper.com/what-are-children-with-special-needs/

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post