இலக்கு நோக்கிய நடத்தையை தொடங்கி வைப்பதற்கும். தொடங்கிய நடத்தை தொடர்ந்து இயங்குவதற்கும். இறுதியில், இந்நடத்தை முடிவு பெறுவதற்கும் காரணமாக இருப்பது ஊக்கமாகும். இவ்வாறு ஊக்கம் என்ற செயல் அதாவது ஊக்குவித்தல் நடைபெற தூண்டும் காரணிகளை ஊக்கிகள் (Motives) என்று குறிப்பிடுகிறோம். திட்டவட்டமான சில செயல்களில் ஓர் உயிரியின் நடத்தை அமைய ஊக்கிகள் அதனைத் தூண்டுகின்றன. இவ்வூக்கிகள் உயிரியின் உள்ளிருந்து செயல்பட்டு அதன் நடத்தையைக் கட்டுப்படுத்தும். இவ்வூக்கிகள் உடல் சார்ந்தவையாகவோ, உள்ளத்தைச் சார்ந்தவையாகவோ இருக்கலாம்
ஊக்கல் என்றால் என்ன?
• ஊக்கியைக் குறிக்கும் (Motivation) என்ற ஆங்கிலச் சொல் 'Moveer's'என்ற லத்தீன் சொல்லில் இருந்து பிறந்தது. இதன் அர்த்தம் முன்னேறிச் செல்லுதல் என்பதாகும். ஆகவே ஊக்கி என்பது உயிரி செயற்படுதல் என்ற அர்த்தத்தில் பாவிக்கப்படுகின்றது. மனிதனுடைய ஊக்கி மயப்பட்ட நடத்தையில் இலக்கு நோக்கி செயற்படுவது தான் முதன்மையான மனப்பான்மையாக அமைகிறது. குறிப்பாக பசி, தாகம், பாலுணர்வு, வியர்ப்பு தன்மை, சாதனை, அதிகாரம், காதலும் நட்பும், ஆவல், பயம் போன்ற அடிப்படை ஊக்கிகள் உடலியல் உந்து தேவை காரணமாக ஏற்படுகின்றது..
ஊக்கத்தின் இயல்பு ?
1. நமது செயல்களுக்குத் தேவையான சக்தியைத் திரட்டியளிக்கிறது.
2. ஏற்புடைய பல்வேறு நடத்தை முறைகளில் குறிப்பிட்ட ஒரு நடத்தை முறையினைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.
3. இத்தகைய நடத்தைக்குப் பின்னர் அமையும் இலக்கானது எய்தப்படும் வரை அந்நடத்தை திசைமாறாமல் இயங்கத் துணை புரிகிறது.
4. கற்பவரது கவனம் தொடர்ந்து செயல்படத் துணைபுரிகிறது.
5. கற்பவரிடத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும் ஆர்வத்தினைத் தூண்டுகிறது.
ஊக்கல் பற்றிய வரைவிலக்கணம் ?
• கலாநிதி லவல் (Lovel) என்பவர் ஊக்கல் என்பது குறிப்பிட்ட தேவைகளின் ஊடாகத் தோன்றி அத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செயற்படும் உள்ளார்ந்த ஒரு செயற்பாடாகும் எனக் குறிப்பிடுகின்றார்.
Talman என்பவர் “உயிரிகள் இலக்கினை அடைய மேற்கொள்ளச் செய்யும் போக்கே ஊக்கியாகும்" என்கிறார்.
Hebb என்பவர் “ஓர் உயிரியினைச் செயலாற்றத் தூண்டும் நிகழ்ச்சியே ஊக்கி” என்கிறார்.
G.M.Blair & others(1947) உள்ளார்ந்த ஆற்றல்களை அல்லது தேவைகளை அவரது சூழலில் காணப்படும் பொருள்களின்பால் வழிப்படுத்தும் ஒரு செயன்முறையாகும்." என்கிறார்.
J.W.Atkinson(1966) பெறுபேற்றைப் பெறுவதற்காக ஆட்களை வழிப்படுத்தும், உந்தும் போக்காகும்." எனக் கூறுகிறார்.
Ball (1977) என்பவர் "மனித நடத்தையைத் தூண்டி, நெறிப்படுத்தி மனித நடத்தையை முன்னெடுத்துச் செல்லும் உந்து சக்தியாகும்" என்கிறார்.
ஊக்கத்தின் பணிகள் ?
• எந்த ஒரு செயலிலும் ஊக்கம் அதிகரித்துக் காணப்பட்டால், அதைச் செய்வதில் அதிக ஆர்வமும், அதை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். ஏதோ ஒரு வகை ஊக்கி எல்லா கற்றல் நிலைமைகளிலும் இருத்தல் இன்றியமையாதது என்கிறார் கெல்லி (Kelly) என்பவர். பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்களது கற்பித்தல் முயற்சி பலதடவை எதிர்பார்க்கப்படும் பயனை அளிக்காமல் வீணாவதற்கு மாணாக்கர்களிடம் போதிய ஊக்கம் இன்மையே காரணமாகும். இதன் விளைவாக மாணவர்கள் ஆர்வமின்றி, இயந்திரம் போல்கற்றலில் செயல்படுவர். மாணவர்களது திறமைக்கும். அவர்களது வகுப்பறைக் கற்றல், அடைவுக்குமிடையே காணப்படும் பெரும் இடைவெளி ஊக்கத்துடன் தொடர்புடையது ஆகும்.
ஊக்கிகளின் வகைகள் ?
1. இயல்பான ஊக்கிகள் (Biogenic)
- இயல்பாக காணப்படும் ஊக்கிகள், உடல் தேவைகளுடன் இணைந்த ஊக்கிகள் என்றும், முதன்மை ஊக்கிகள் என்றும் அழைப்பர். மனிதன் உயர் வாழ்வதற்குப் பசி, தாகம், ஒட்சிசன், உறக்கம், வலியினின்றும் விடுபடுதல், ஓய்வு, பாலுணர்ச்சி ஆகிய தேவைகள் நிறைவுறுதல் இன்றியமையாதது. இவற்றுடன் இணைந்த ஊக்கிகள் மனித நடத்தைக்குக் காரணிகளாக அமையும் மிக வலுவான ஊக்கிகளாகும்.
2. அனுபவ ஊக்கிகள் (Sociogenic)
- மனிதன் வளர்ச்சியுறும் போது சமூக வாழ்வில் பெறும் அனுபவங்கள் வாயிலாக எழும் ஊக்கிகள், இரண்டாம் நிலை ஊக்கிகள் எனப்படுகின்றன. சமுதாயத்தில் பிறருடன் தொடர்பு கொள்வது மனத்தேவைகள் நிறைவு பெறப் பல சமயங்களில் இன்றியமையாததாகிறது.
3. சமூக ஊக்கல்
- பிறருடைய அன்பு, கவனம், கணிப்பு ஆகியவற்றைப் பெறும் வகையில் நடத்தை மாற்றமடைதல்
ஊக்கலின் அவசியம் ?
• விழிப்புணர்வு ஏற்படுத்தல்
• செயல்களைச் செய்தல்
• மாணவரின் விருப்பு, கவனம், ஆர்வம் என்பவற்றைப் பேணல்
• மாணவர் சக்தியைக் கற்றலை நோக்கி வழிப்படுத்தல்
• இலக்குகளை அடைவதற்கு
• அடைவு மட்டத்தை மேம்படுத்தல்
ஊக்கலின் வகைகள் ?
அகவூக்கல்
- அதிக விருப்பம்
- தன்னாதிக்கம்
- நோக்கம்
- சுயாட்சி நோக்கம்
- வெகுமதி
- தண்டனை
- இழப்பீடு
- தோல்வி /தண்டனை பற்றிய பயம்
ஊக்கலின் முக்கியத்துவம் ?
• மாணவனின் ஆர்வம், கவனம் என்பவற்றை தூண்ட முடியும்
• கற்றலில் நேர் மனப்பாங்கை ஏற்படுத்தல்.
• ஆசிரியர் தனது கற்பித்தல் பணியை மேற்கொள்ள முடியுமாக இருத்தல்
• மாணவரின் இடைவிலகலைத் தவிர்த்தல்
• வினைத்திறனான கற்றல், கற்பித்தல்
ஊக்கல் கொள்கைகள் ?
1. மானுட வழிக் கொள்கை
ஏப்ரகாம் மாஸ்லோ, மக்டூகல்
2. சமூகக் கற்றல் கொள்கை
எல்பிரட் பண்டுரா
3. உளப்பகுப்பாய்வுக் கொள்கை
சிக்மன்ட் பிராய்ட்
4. பண்பாட்டுக் கோளக் கொள்கை
1. மானுட வழிக் கொள்கை - மாஸ்லோ
மானிட சிந்தனா பள்ளியைச் சேர்ந்த ஆபிரகாம் மாஸ்லோ மனிதனது தேவைகள் நிறைவேற்றப்படும் பொழுதுதான் வாழ்வின் உச்ச நிலையாகிய தன்னியல் நிறைவை ஒருவரால் அடைய முடியும் என வலியுறுத்தினார். இவர் மனிதன் ஏறுமுக வரிசையிலான தேவைகளுடன் பிறந்துள்ளான் என்றும் நம்பினார். மனித தேவைகளை ஏழு தொகுதிகளுள் அடக்கி, அத்தொகுதிகளை அவற்றின் ஆற்றலின்படி ஏறு நிரலில் அமைத்தார். ஒருவனுக்கு ஒரு தேவை நிறைவு செய்யப்பட்ட பின்னரே நிரலிலுள்ள அடுத்த தேவை எழுகின்றது என்பது இவரது கொள்கையாகும்.
1. உடலியல் தேவை
பசி. தாகம் ஒட்சிசன், கழிவகற்றல்.நித்திரையும் ஓய்வும். பாலியல், வலியைத் தவிர்த்தல் போன்ற உடலியல் தேவைகள் மற்றைய தேவைகளை விட வலிமையானவை. அவை ஒருவனிடம் எழுமாயின் ஏனைய தேவைகள் பின்னணிக்குச் சென்று விடும். இவ்வகைத் தேவைகள் ஓரளவுக்கேனும் நிறைவு பெற்றால்தான் অভিক্টর உயர்நிலை செயற்படுதல் சாத்தியமாகும்.
2. காப்புத் தேவைகள்
உடலியல் தேவை தணிந்ததும் நிரலில் அடுத்துள்ள பாதுகாப்புத் தேவை எழும் அப்போது ஒருவனின் சகல திறன்களும் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் தேடவே பயன்படுத்தப்படும் என்பதே மாஸ்லோவின் எடுத்துக்காட்டாகும். அதாவது இந்தக் காப்புத் தேவையானது உடல் ரீதியான பாதுகாப்புப் பெறுவதைக் குறிக்கும். அபாயம், அச்சுறுத்தல், சுரண்டிப் பறித்தல் போன்றவற்றுக்கு எதிரான ஒரு பாதுகாப்புத் தேவையையும் இது குறிக்கும்.
3. அன்புத் தேவைகள்
ஒருவனுடைய உடலியல் தேவைகள், காப்புத் தேவைகள் பூர்த்தியாகிய பின்னரே அன்புத் தேவை எழுகின்றது. பிறரது அன்பிற்கும், பரிவிற்கும் ஏங்குவதும், தானும் அவர்களுள் ஒருவன் என நினைப்பதும் மனிதனின் அடிப்படையான இயல்பு. தன்னைப்பற்றிய தற்கருத்தும் சமுதாயத்தில் தனது பங்கு பற்றிய உண்மையுணர்வும் ஒருவனுக்கு ஏற்பட, பிறரது ஏற்பு இன்றியமையாததாகும். தனது நண்பர்களைத் தேடிக்கொள்ளவும், சமூக உறவு நிலையைப் பேணவும், சமூகத்தோடு இணைந்து கொள்ளவும் இது உதவுகின்றது.
4. கணிப்புத் தேவைகள்
தன்னம்பிக்கை, சுதந்திர உணர்வு, பலசாலியாகத் திகழ விரும்புதல், தேர்ச்சியும் திறனும் பெற்று சகலகலா வல்லவனாகத் திகழ முயற்சி செய்தல் போன்றவை இதனுள் அடங்கும். தான் மற்றவர்களிடம் பெரியவனாக கருதப்படல் வேண்டும், பிறரால் பாராட்டப்பட வேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். சிலர் மற்றவர்களின் மீது அதிகாரம் செலுத்தியும் கணிப்பைப் பெற்றுக் கொள்கின்றனர். இக் கணிப்புத் தேவைகள் தணிக்கப்படாவிடின் அது தாழ்வுச் சிக்கலுக்கு வழிகோலுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
5. அடைவூக்கத் தேவைகள்
அறிந்து கொள்ள முயலுதல், புரிந்து கொள்ள விழைதல், செயற்பட முனைதல் போன்றவை இதனுள் அடங்கும். செய்திகளின் மூலத்தோடு தொடர்பு கொள்ளுதல், எவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என அறிந்திருத்தல், பொருள்கள், குறியீடுகள், நிகழ்வுகள் பற்றித் தெரிந்திருத்தல் ஆகியவை அறிந்து கொள்ள முயலும் அறிவுத் தேவையுள் அடங்கும். தொடர்புகளைப் பற்றி அறிதல், செயல்முறைகளை அறிதல், பலவகை அறிவுசார் செயல்களை இணைத்தல் ஆகியவை புரிந்து கொள்ள விழைதல் தேவையில் அடங்கும். அடைவுத் தேவை என்பது அறிவாற்றல் தேவையைச் சார்ந்தது.
6. அழகுணர் தேவைகள்
தூய்மை, அழகு, முறைமை, கலை, இலக்கியச் சுவை ஆகியவை அழகியல் தேவைகள் ஆகும். கீழ்நிலை அடிப்படைத் தேவைகள் நிறைவு பெறாதவர்கள் அழகியல் தேவைகளைப் பற்றிச் சிறிதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
7. தன்னிறைவுத் தேவைகள்
ஒருவன் எவ்வளவு செயல்திறன் உடையவனாக இருந்தாலும் அதற்கேற்ப அதிகபட்ச வளர்ச்சி பெறுவதனையே தன்னாற்றல் நிறைவுபெற உதவும் தேவைகள் என்கின்றனர். ஒருவரின் அதி உச்ச திருப்தியைக் குறிக்கும். அதாவது இது ஒருவன் தன்னிடமுள்ள உள்ளார்ந்த ஆற்றல்களை விருத்தி செய்து சுய நிறைவு பெறுவதாகும். ஒருவன் என்ன நிலையை அடைய ஆற்றலுடையவனாக உள்ளானோ அந்நிலையை அவன் அடைய வேண்டும். அது நிறைவேறும் வரை ஒருவனிடம் அதிருப்தியும் அமைதியின்மையும் காணப்படும்.
2. சமூகக் கற்றல் கொள்கைகள்
1. கேர்ட் லெவினின் களக் கொள்கை
2. மார்க்கிரட் மீட்டின் பண்பாட்டுக் கோலக் கொள்கை
3. பண்டுராவின் அவதானக் கற்றல் கொள்கை
எல்பிரட் பண்டுரா ( அவதானத்தின் ஊடான கற்றலில் நான்கு படிமுறைகள் உண்டு )
1. அவதானம்
2. கிரகித்தல்
3. ஆக்கம்
4. ஊக்கலும் மீளவலியுறுத்தலும்
3.உளப்பகுப்பாய்வுக் கொள்கை
சகல தனியாட்களின் நடத்தைகளுக்கும் அடிப்படையாக அமைவது இயல்பூக்கங்களாகும். இவை ஆசைக்குச் சமனான ஒரு விசேட சக்தியாகும்.
இது இரண்டு வகைப்படும்.
1. வாழ்க்கை இயல்பூக்கம்
2. மரண இயல்பூக்கம்
இக் கொள்கை சிக்மன்ட் புரொய்ட் என்பவரால் முன்வைக்கப்பட்டது. மனித ஊக்கலில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பகுதி நனவிலி நிலையில் உருவாகின்றது. மனிதரில் ஊக்கல் நிகழும் விதத்தை விளக்குவதற்காக நனவிலி உள்ளம் (Unconscius mind), कंक (Repression) मा प्रकល់का புரொய்ட் பயன்படுத்தியுள்ளார். நிறைவேறாத பாலியல் ஆசைகள் மற்றும் விரும்பத்தகாத அல்லது மகிழ்ச்சியளிக்காத நிகழ்வுகளை நனவு நிலையிலிருந்து நீக்குவதே ஒடுக்குதல் மூலம் நிகழ்கின்றது. இவ்வாறு ஒடுக்கப்படுபவை நனவிலி மனதில் பதிந்து காணப்படும். இவற்றை நிறைவு செய்ய பிள்ளை முனையும். இவ்வாறாக நனவிலி உள்ளத்தில் அடங்கியுள்ள ஊக்கல் உந்துகையினால் மனிதன் வழிநடத்தப்படுகிறான்.
4. பண்பாட்டுக் கோளக் கொள்கை
நியுகினியில் வாழும் மற்றொரு பழங்குடியினரான முண்டுகுமோர் மக்களின் வாழ்க்கை முறை அரபேஷ் மக்களின் வாழ்க்கை முறைக்கு முற்றிலும் எதிரானதாகவுள்ளது. பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு காட்டுவதில்லை. பிள்ளைகள் முதிர்ச்சியடையுமுன்னர் தாய்ப்பால் நிறுத்தப்படும். வீட்டிலுள்ள ஆண்களுக்குப் பகைவனின் "தலைகளை வேட்டையாடுதலை" குறிக்கோளாகக் கொண்டு பிள்ளைகள் சண்டையிடுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இதனால் சண்டைகளும், குழப்பங்களும், கொலைகளும், அவலமும் சாதாரணமாக நிகழும் இச்சமூகத்தில் வாழும் பிள்ளைகள் வாழ்விலே அக்கறை எதுவுமின்றி ஏமாற்றும் மனப்பாங்கு. தீய நடத்தைகள் ஆகியவற்றைக் கொண்டு காணப்படுகின்றனர்
நியுகினி என்ற தீவிலுள்ள அரபேஷ் என்ற மலைச் சாதியினரின் சமூகத்திலே குழந்தைகள் மிக அன்புடனும் பாசத்துடனும் வளர்க்கப்படுகின்றனர். பிள்ளைகளுக்கு ஐந்து வயதுவரை தாய்ப்பால் கொடுப்பர். அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் இன்றி அவர்கள் வளர்கின்றனர். ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டு முன்னேற வேண்டுமென்ற வேட்கை அவர்களிடம் இல்லை. இவ்வாறான சூழலில் வளரும் பிள்ளைகளிடம் போரூக்கம் குறைவடைவதால் வன்செயலின்றி சமூக ஒற்றுமையுடன் அவர்கள் வாழ்கின்றனர் என எடுத்துக்காட்டினர். இவ் ஆய்வுகளில் இருந்தே மனித நடத்தைகளுக்கான ஊக்கம் என்பது "பிள்ளைகளின் வளர்ப்பு முறையிலேயே தங்கியுள்ளது" எனக் கண்டறிந்தனர்.
Post a Comment