சோழர் காலம்

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதற் பதினான்காம் நூற்றாண்டு வரையும் உள்ள காலப்பகுதி தமிழிலக்கிய வரலாற்றிலே சோழர் காலப்பகுதி எனப்படும். அது ஏறக்குறைய நானூறு ஆண்டுகளைக் கொண்டது.


அரசியல் நிலை

விஜயாலயன் என்னும் சோழ அரசன் முதன் முதலாகப் பல்லவரிடமிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றி அதனைத் தனது தலைநகராகக் கொண்டு தனியாட்சி செய்ய ஆரம்பித்தான். அவனுக்குப் பின் அவன் மகன் முதலாம் ஆதித்தன் பல்லவராட்சிக் குட்பட்டிருந்த நாடுகளை எல்லாம் கைப்பற்றி ஆண்டான். இவ்வாறு சோழ வம்சத்தினரின் ஆட்சி வளர்ந்து வந்தது. ஆதித்தன் மகன் பராந்தகச் சோழன் பாண்டியரோடு போர் செய்து பாண்டிய நாட்டையும் தனது ஆட்சிக்குட்படுத்தினான். அவனுக்குப்பின் ஆண்ட அரசர்களுள் இராஜராஜச் சோழனுடைய காலத்திற் சோழராட்சி உயர்நிலை எய்திற்று. கடற்படை, தரைப்படைகளைப் பெருக்கி அவற்றின் உதவி கொண்டு தமிழ் நாட்டின் வடக்கிலும் மேற்கிலுமுள்ள பல நாட்டரசர்களோடு போர் புரிந்து அவர்களை வென்று அந்நாடுகளையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தினான். பின் ஈழ மண்டலத்தையும் கிழக்கிந்தியத் தீவுகள் பலவற்றையும் தனதாக்கினான்.

அவன் மகன் இராஜேந்திரச் சோழனுடைய ஆதிக்கம் கங்கைநாடு தொடக்கம் யாவா, சுமாந்திராத் தீவுகள் வரையும் சென்றிருந்தது. அவன் கங்கைகொண்ட சோழன் என்றும் அழைக்கப்பட்டான். தமிழரசர்களின் ஆட்சி முறை உச்ச நிலையடைந்தது. அவன் காலத்தில் எனலாம். அவன் காலத்திற்குப் பின் சோழ நாட்டைச் சிறப்பாக ஆண்ட சோழ அரசர்களுட் பாராட்டத் தகுந்தோர் முதலாம் குலோத்துங்க சோழனும் இரண்டாம் குலோத்துங்க சோழனும் ஆவர். இரண்டாம் குலோத்துங்கனுடைய காலத்திற்குப் பின் சோழராட்சி வலிகுன்றிப் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மூன்றாம் இராஜராஜ சோழனது ஆட்சிக் காலத்தோடு முடிவடைந்தது. சோழராட்சி நிலைதளர அவருக்குத் திறை கொடுத்து ஆண்டு வந்த பாண்டியர் தலையெடுத்தனர். அவர்களுள் ஆற்றல் மிக்க சுந்தரப்பாண்டியன் ஆட்சி செய்த காலத்திலிருந்து பாண்டியர் தனியாட்சி செய்யலாயினர். அக்காலம் முதல் அவராட்சி சிறப்பாக நடைப்பெற்றது. அவராட்சியும் பதினான்காம் நூற்றாண்டிலே தளர்ச்சியுறத் தொடங்கிற்று.


சமய நிலை

நாட்டு நலத்தையே பெரிதாக மதித்து ஆட்சி புரிந்த சோழப் பெருமன்னர் எல்லாச் சமயங்களையும் ஒப்பு மதித்து ஆதரித்து வந்தமையால் அக்கால பகுதியில் சமயப்பகை மூளாதிருந்தது. அரசரும் அரச குடும்பத்தினரும் எல்லாச் சமயங்களுக்கும் வேண்டிய உதவிகள் பலவற்றையும் செய்து வந்தனரெனினும் அவர்கள் சைவராயிருந்தமையின் சைவத்தையே சிறப்பாக வளர்த்து வந்தனர். பழைய சைவக் கோயில்களைப் புதுப்பித்தும், நாயன்மாரின் பாராட்டைப் பெற்ற பல இடங்களிற் கருங்கற் கோவில்களைப் புதியனவாய்க் காட்டியும், அவற்றில் நித்திய பூசை முதுலியன நடைபெறுவதற்கு வேண்டிய பொருள்களை உதவியும் பலவாறு சைவத்தைப் போற்றி வந்தமையால் இக்காலத்திற் சைவம் சிறப்பாக வளர்ந்து வந்தது.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் பல்லவர் காலத்தில் ஏற்றிவைத்த பக்தி விளக்கைச் சோழர் காலத்தில் வாழ்ந்த அடியார்களும் பிறரும் சுடர்விட்டெரியச் செய்தனர் எனக்கூறுதல் மிகையாகாது. சைவ வைணவ ஆலயங்களில் நடைபெற வேண்டிய கருமங்கள் குறைவின்றி நடைபெறுவதற் பொருட்டு மக்கள் பலர் மானியமாக நிலங்கள் பலவற்றை விட்டதுமன்றி வேறு பல பொருட்களைக் கொடுத்தும் அவற்றை ஆதரித்து வந்தனர். ஆலயங்களிலே தேவாரங்களையும் திவ்விய பிரபந்தங்களையும் ஒதுதற்கு வேண்டிய வசதிகளை மக்கள் செய்து வந்ததிலிருந்து பல்லவர் காலத்தில் எழந்த பக்திப் பாடல்களுக்குச் சோழர் காலத்திலிருந்த பெருமதிப்பு ஒருவாறு புலனாகும். மேலும் இக்காலத்தில் சமண, பௌத்த சமயங்களும் தத்தம் வழிகளில் வளர்த்தற்கேற்ற வசதிகள் யாவற்றையும் பெற்று தழைக்கலுற்றன எனலாம்.


சோழர் காலத்தில் தமிழ் இலக்கியம் பல்வேறுப்பட்ட துறைகளிலும் அடைந்த வளர்ச்சி.

1. காப்பியத்துறை.
2. சிற்றிலக்கியத்துறை.
3. சித்தாந்தத் துறை.
4. இலக்கணத்துறை.
5. உரை நடை
6. தொகுப்பு முயற்சிகள்.
7. நிகண்டு நூல்களின் வருகை.


காப்பியத்துறை

தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிகமான காப்பியங்கள் தோன்றிய காலம் இக்காலமேயாகும். ஏனெனில் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் பயப்பது பெருங்காப்பியம் எனப்படும் இவற்றுள் ஏதாவது ஒன்று குறைந்தால் அது சிறுகாப்பியம் எனப்படும். இந்த வகையில் சோழர் காலத்தில் தோன்றிய காவியங்களை பின் வருமாறு வகைப்படுத்தலாம்.

  • பெருங்காப்பியங்கள் : வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி
  • மாபெருங் காப்பியங்கள் : கம்பராமாயணம், பெரிய புராணம், கந்தபுராணம்
  • சிறு காப்பியங்கள் : உதயகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி

 மேற்குறிப்பிட்டவாறு அதிகமான காப்பியங்கள் இதற்கு முற்பட்ட காலங்களில் தோன்றாத காரணத்தால் இக்காலத்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியத்துறையில் வளர்ச்சியடைந்த காலம் எனலாம்.


சிற்றிலக்கியத் துறை

சிற்றிலக்கிய வடிவங்கள் பல பல்லவர் காலத்தில் தோன்றி விட்டாலும் சோழர் காலத்தில் தான் இவை பூரண வளர்ச்சி கண்டனவெனலாம். ஏனெனில் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு தன்மையும் பூரணமாக உள்ளடக்கப்பட்டிருந்தால் அது பெருங்காப்பியம் எனப்படும். இவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தால் அது சிறுகாப்பியம் எனப்படும். ஆனால் இவை இரண்டும் அல்லாமல் இவை இரண்டுக்குமான பல்வேறுப்பட்ட தன்மைகளையும் தன்னகத்தே கொண்டு படைக்கப்பட்டவை சிற்றிலக்கியங்கள் எனப்படும். இக்காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்களுக்கு எடுத்தக் காட்டாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.

  •  கலிங்கத்துப்பரணி
  • மூவருலா
  • குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
  • தக்கையாகப்பரணி
  • நளவெண்பா


 சித்தாந்தத் துறை

பல்லவர் காலத்தில் வைதீக சமயங்கள் பக்தி உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சமயப் பிரசாரத்தை மேற்கொண்டன. பிற சமயங்களின் தாக்குதல்கள் காரணமாகவும் உணர்ச்சிக்கு அறிவுரீதியான விளக்கத்தின் தேவை ஏற்பட்டதன் காரணமாகவும் உணர்ச்சிக்கு தத்துவம் தேடும் சூழ்நிலை சொழர் காலத்தில் ஏற்படுகின்றது. இத்தேவை பல்லவர் கால இறுதிப் பகுதியிலேயே ஆரம்பித்து விட்டதெனலாம். இதனை சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரங்களிற் காணலாம்.

இத்தகைய தேவையைப் பூர்த்திசெய்து கொடுக்கும் தகைமைகளையும் சவால்களையும் தன்னகத்தே கொண்ட காலமாக சோழர் காலம் காணப்படுகிறது. பக்தி உணர்ச்சிக்குத் தத்துவ தரிசனம் கொடுப்பதற்குச் சோழரக்காலச் சமூக வாழ்க்கை உயர்ந்ததொரு புலக்காட்சியாக அமைகின்றது. அதாவது சோழ வேந்தனுக்கும் அவன் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சாதாரண குடிமகனுக்கும் இடையிலான உறவகளை அடிப்படையாக வைத்தே இக்காலச் சித்தாந்த நூல்கள் தோற்றம் பெறுகின்றன எனலாம். சிறப்பாக சைவ சித்தாந்த நூல்களைக் குறிப்பிடலாம். பின்வருவன இக்காலத்தில் தோன்றிய சித்தாந்த நூல்களாகும்.

1. திருவுந்தியார்
2. சிவஞான சித்தியார்
3. திருக்களிற்றுப்பாடியார்
4. வினா வெண்பா
5. திருவருட்பயன்
6. உண்மை நெறி விளக்கம்
7. சிவஞான போதம்
8. போற்றிப் பஃறொடை
9. சங்கற்ப நிராகரணம்
10. கொடிக்கவி
11. நெஞ்சுவிடுதாது
12. உண்மை விளக்கம்
13. இருபா இருபஃது


இலக்கணத்துறை

இக்காலத்தில் தமிழ்ச் சமூதாயத்தில் ஏற்பட்ட வளர்ச்சி தமிழ் மொழியின் அமைப்பிலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஏனெனில் சோழர்களின் படையெடுப்புக்களால் வடமொழி அல்லாத பிறமொழிகளின் கலப்பு தமிழில் ஏற்படலாயிற்று. மேலும் வடமொழியின் தாக்கத்தாலும் தமிழ் மொழி பல மாறுதல்களைப் பெற்றது. இவ்வாறான மாற்றங்களைக் கவனத்திற் கொண்டு தமிழ் மொழியமைதியை எடுத்துக்கூற பல இலக்கண நூல்கள் தோன்றினவெனலாம். அவை பின்வருமாறு

1. யாப்பருங்கல விருத்தி
2. யாப்பருங்கலக் காரிகை
3. வீரசோழியம் (எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு)
4. நேமிநாதம் (எழுத்து, சொல்)
5. நன்னூல் (எழுத்து, சொல்)
6. நம்பியப் பொருள் (அகத்திணை இலக்கணம்)
7. தண்டியலங்காரம் (அணியிலக்கணம்)
8. வச்சணந்திமாலை (யாப்பு)


உரை நடை

இக்காலத்தில் பழம் பெருமையை எடுத்துக் காட்டுவதற்காகவும் விளக்கத்தை இலகுப்படுத்துவதற்காகவும் அதிகமான உரைநடை நூல்கள் எழுந்தனவெனலாம். அதாவது செய்யுளில் எழுதப்பட்ட நூல்களுக்கே இக்காலத்தில் உரை நடை எழுதப்பட்டது எனலாம். உதாரணமாக

  • வீரசோழிய உரை
  • யாப்பருங்கல் உரை
  • திருக்குறள் பரிமேலழகர் உரை 
  • தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை
  • தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை


தொகுப்பு முயற்சிகள்

சோழர் கால இலக்கிய உலகைப் பார்க்கும் போது பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தொகுக்கும் ஒரு தன்மையினையும் காணக்கூடியதாக உள்ளது. ஏனெனில், நிகழ்காலப் பெருமைகளோடு இறந்தகால இலக்கியச் செழுமைகளையும் தமிழர் தம் வாழ்வின் முக்கிய அம்சங்களையும் பேண வேண்டும் அல்லது தொகுக்க வேண்டும் என்ற உணர்வு சோழர் காலத்தில் தான் காணப்பட்டது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. தேவார திருமுறைகள் : நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டது.
2. நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் : நாதமுனிகளால் தொகுக்கப்பட்டது.

மேலும் பெரிய புராணத்தையும் இவ்வகையில் நோக்கலாம். இதில் கடந்தகால சைவ நாயன்மார்களில் வரலாற்றினைத் தொகுக்கும் முயற்சியைக் காணக்கூடியதாக உள்ளது.



நிகண்டு நூல்கள்

இன்று ஒரு சொல்லின் பொருளை அறிய அகராதிகளைப் பயன்படுத்துவது போல ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் தமிழ் மக்கள் சொற்களின் பொருளைக் குறிக்கும் நிகண்டு நூல்களைப் பயன்படுத்தினர். இந்நிகண்டு நூல்கள் செய்யுள் வடிவில் எவரும் எளிதில் மனப்பாடம் செய்யும் வகையில் இயற்றப்பட்டவையாகும். இம்முயற்சி சோழர் காலத்திற்கேயுரிய தனித்துவமான அம்சமாகும். எடுத்துக்காட்டாக இக்காலத்தில் தோன்றிய நிகண்டு நூல்கள் எனப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்
  1. திவாகரம்
  2. பிங்கல நிகண்டு
  3. சூடாமணி நிகண்டு
  4. ஆசிரிய நிகண்டு
  5. உரிச்சொல் நிகண்டு
  6. கயாதர நிகண்டு
  7. அகராதி நிகண்டு



சோழர் காலத்தில் தமிழ் இலக்கியத்துறை பல்வேறுப்பட்ட வழிகளில் சாதனைகள் படைப்பதற்குக் காரணமாகவிருந்த வழிகள் என பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்

1. மன்னர்களும் பெரும் வள்ளல்களும் புலவர்களும் ஆதரவு கொடுத்து ஊக்குவித்தமை. அல்லது புலவர்களுக்கு பட்டங்கள் வழங்கியமை எடுத்துக்காட்டாக கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தைக் கம்பனுக்குச் சோழ அரசன் கொடுத்தமை, சடையப்ப வள்ளல் கம்பனை ஆதரித்துக் காத்தமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

2. போர்கள் அற்ற ஓர் அமைதியான காலமாக ஆரம்பகாலச் சோழர் காலம் விளங்கியமையும் மன்னர்கள் தமது கட்டுப்பாட்டில் பல பிரதேசங்களை வைத்திருந்தமையும்.

3. வடமொழிச் செல்வாக்குக் காரணமாகப் பெரும் இலக்கியங்களைப் படைப்பதற்குக் கதை, கரு போன்றவை மிக இலகுவாகக் கிடைத்தமை.

4. முன்னைய கால இலக்கியங்களைத் தொகுப்பவர்களுக்கு இக்கால மன்னர்கள் ஆதரவு கொடுத்தமை.

மக்களும் இதனை விரும்பினர், வரவேற்றனர இதனால் இக்காலத்தில் இலக்கியங்கள் பெருகின எனலாம்

5. இக்காலத்தில் மக்களின் ஈடுபாடு புலவர்களின் ஆக்க இலக்கியங்களின் பக்கம் திரும்பியிருந்தமையால்

அவர்களை மகிழ்விக்க அதிகமான இலக்கியங்கள் தோற்றம் பெற்றன எனலாம்.

6. சோழர் கால இறுதிப்பகுதியில் பெரும் போர்களை இக்காலப் புலவர்கள் காண நேர்ந்ததன் விளைவாக இக்காலத்தில் பல இலக்கியங்கள் தோன்றின. எடுத்துக்காட்டாக கலிங்கத்துப்பரணியைக் குறிப்பிடலாம்.

7. இக்காலக் கல்வி வளர்ச்சியும் பொருளாதார சமய வளர்ச்சிகளும் பெரும் இலக்கியங்கள் தோன்றக் காரணமாக இருந்தன எனலாம்.

8. பெரும் பெரும் புலவர்கள் இக்காலத்தில் வாழ்ந்தமை. எடுத்துக்காட்டாக கம்பர். சேக்கிழார். ஒட்டக்கூத்தர், சயங்கொண்டனார், புகழேந்திப் புலவர்

9. புலவர்களுக்கிடையே ஏற்பட்ட போட்டி காரணமாகவும் இக்காலத்தில் இலக்கியங்கள் பெருகின எனலாம்.




காப்பியத்திற்கான இலக்கணம்

தமிழில் காப்பிய இலக்கண நூலும் பெருமளவு காப்பியங்களும் தோன்றிய காலமாகச் சோழர்காலம் காணப்படுகிறது. இக்காலத்தில் தோன்றிய முதல் அணி இலக்கண நூல் “தண்டியலங்காரம்" ஆகும். இந்நூல் வடமொழியில் இருந்த அணியிலக்கண நூலான காப்பிய தர்சனம்" என்ற நூலை பின்பற்றி தமிழில் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் காப்பிய இலக்கணம் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது.

வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றிலொன்று ஏற்புடைத்தாகி முன்வர இயன்று நாற்பொருள் பயக்கும் நடைநெறித்தாகி தன்னிகரில்லாத் தலைவனை உடைத்தாய் மலை கடல் நாடு வளநகர் பருவம் இரகடர் தோன்றலேன்று இணையன புணைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல் புனல் விளையாடல் தேன்பிழி முதுக்கனி சிறுவரைப் பெறுதல் புலவியில் புலத்தல் கலவியில் களித்தல் என்று இன்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரம் தூது செவிகள் வென்று சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையில் விளக்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்புக் கற்றோர் புனையும் பெற்றிய தென்பு...."

மேற்குறிப்பிட்ட சூத்திரத்திற்கமைய ஒரு காவியம் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

  • வாழ்த்துதல், தெய்வம் வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்பன நூலின் முகப்பில் கூறப்பட வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று வந்தால் போதுமானது. இவை மூன்றும் வரவேண்டும் என்பதில்லை. மூன்றும் வந்தாலும் குற்றம் அன்று.
  • நூலின் பயன் அறம், பொருள். இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் பயப்பதாய் இருத்தல் வேண்டும். வர்ணனை மலை, கடல், நாடு, நகர், பருவம் சூரியோதயம், சந்திரோதயம் முதலியன பற்றி இயற்கை வரணனைகள் இடம்பெறல் வேண்டும்.
  • கதைப்பின்னணி தன்னிகரில்லாத் தலைவனைக் கொண்டு இருப்பதோடு அவன் திருமணம் பூஞ்சோலையில் மகளிருடன் இன்புறுதல், அவர்களுடன் நீர நிலைகளில் நீராடல், அவர்களுடன் புணர்தல், கலத்தல், மக்களைப் பெறுதல் முதலியவை இடம்பெறல் வேண்டும்.

மேலும், அவன் முடி சூடி அரசனாதல், மந்திரலோசனை புரிதல், பகை அரசனிடம் தூது அனுப்புதல் படையெடுத்துச் செல்லுதல், போர் புரிதல், வெற்றி பெறல் முதலியவற்றையும் உடையதாய் இருத்தல் வேண்டும்.
  • நூலின் அமைப்பு சந்தி, சதுக்கம், இலம்பகம், பரிச்சேதம் ஆகியவற்றுள் ஏதாவது ஒரு முறையில் நூல் பகுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
  • நூலில் நவரசங்களும் இடம்பெற வேண்டும். (நவரசம் காதல், வீரம், சிரிப்பு, கோபம், வியப்பு, இழிப்பு, சோகம், பயம், சாந்தம்)


சோழர் காலத்தில் அதிகமான காப்பியங்கள் தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள்.

. சோழர் காலத்தில் காணப்பட்ட சமூகச் சூழலும் உலகியலும் இறையியலும் இணைந்து சென்றமையேயாகும். ஏனெனில், சங்ககால சமூகத்தில் உலகியல் வாழ்க்கை முதலிடம் பெற்றது. சங்கமருவிய காலத்தில் உலகியல் பழிக்கப்பட்டு அறயியல் முதலிடம் பெற்றது. பல்லவர் காலத்தில் அறயியல் பழிக்கப்பட்டு இறையியல் சமூகத்தில் முதலிடம் பெற்றது. ஆனால் சோழர் காலத்தில் ஒன்றுக்கு ஒன்று முரணாக காணப்பட்ட உலகியலும் இறையியலும் சமூகத்தில் இணைந்து காணப்படுகின்றன. காவியங்களில் உலகியலும் இறையியலும் இணைந்து காணப்பட வேண்டும். இதனால் தான் காவியங்களிலும் உலகியலும் இறையியலும் இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய இலக்கியப் படைப்புக்களுக்குச் சோழர் காலத்தில் நிலவிய உலகியலும் இறையிலும் நிறைந்த சமூகச்சூழல் காரணமாக அமையலாயிற்று.

. காவியங்களைப் பாடுவதற்கு பெருங்கதைகள் தேவை. அதே வேளை பெருங்கதைகளைக் கொண்ட காவியங்களைப் பாடும் போது அவற்றைக் கேட்டு ரசிப்பதற்கு அக்கதைகள் ஏற்கனவே மக்களுக்கு அறிமுகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், இங்கே பல்லவர் காலத்தில் எழுச்சிபெற்ற வைதீக சமயங்கள் தம் சமயப் பிரசாரத்தின் பொருட்டு வடமொழியில் இருந்த இதிகாச புராணக் காப்பியக் கதைகளை எடுத்துக் கையாண்டது இதனால் தான் சோழர் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு இக்கதைகள் நன்கு பரிச்சயமாக அமையலாயிற்று. ஏனெனில் இத் தன்மையால் தான் காவியங்கள் பாடுவதற்குச் சோழர்காலப் புலவர்களுக்கு நீண்ட கதைகள் கிடைத்தது. இக்கதையை ரசிப்பதற்கு ஏற்கனவே கதை மக்களுக்குத் தெரிந்திருந்தது. இதன் காரணமாகவும் இக்காலத்தில் காவியங்கள் தோன்றின எனலாம்.

காவியங்களில் நாட்டு, நகர, ஆற்று, வரணனைகள் இடம்பெற வேண்டும். இப்படிப்பட்ட நாட்டு, நகர, ஆற்றுச் சிறப்புக்களைவ வரணிப்பதற்கு இக்காலப் புலவர்களுக்கு வளமொடு விளங்கிய சோழர் கால தமிழ் நாடு காட்சிப்பொருளாயிற்று. எடுத்துக்காட்டாக கம்பராமாயணத்தில் களனி நாட்டை வர்ணிக்கப் புகுந்த கம்பன் " காவிரி நாடென்ன களனி நாடே" எனக் கூறிச் செல்கின்றான்.

. காவியங்களை பாடுவதற்கு பல்துறை அறிவு வேண்டும். இத்தகைய பல்துறை அறிவைப் பெறக்கூடிய காலமாகச் சோழர் காலம் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக சீவகசிந்தாமணியில் சீவகனை அரவம் தீண்டியமையைப் பற்றிக் கூறவந்த திருதக்கதேவர் அரவம்களின் வகைகளையும், விஷங்களின் வகைகளையும் அவற்றிற்கான மருந்துகளின் வகைகளையும் கூறிச் செல்கின்றார்.

காவியங்கள் உயர்ந்ததோர் ரசனைக்கு உரியவை. இத்தகைய உயர்ந்ததோர் ரசனை சோழர் காலத்தில் காணப்பட்டது. இந்த உயர்ந்த ரசனையைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே சோழர்காலத்தில் காவியங்கள் பாடப்பட்டன.

. காவியங்கள் கற்பனையுலகின் சஞ்சரிப்பாகும் ஏனெனில் இரம்யமான காட்சிகளையும், இரம்யமான வர்ணனைகளையும் அதீதமாகக் கொண்டவை. இத்தகைய காவியங்களைப் பாடுவதற்குக் கற்பனையில் மூழ்க வேண்டும். கற்பனையில் மூழ்குவதற்கு ஏற்ற சமூக வாழ்க்கை சோழர் காலப் புலவர்களுக்குக் கிடைத்தது. ஏனெனில், இக்காலத்தில் மன்னர்களும் வள்ளல்களும் புலவர்களை ஆதரித்துக் காத்தனர். இதனால் தான் தம் சொந்த வாழ்க்கை பற்றிய கவலை இல்லாமல் புலவர்கள் காவியங்களைப் பாடினர். எடுத்தக்காட்டாக கம்பனை சடையப்ப வள்ளல் ஆதரித்துக் காத்ததோடு அவனுக்கு ஏடு கிழித்துக் கொடுப்பதற்கும் ஒருவனை நியமித்து இருந்தார்.

சோழர் காலத்தில் பெரும் புலவர்கள் பலர் வாழ்ந்ததனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட போட்டியும் காவியங்கள் தோன்றுவதற்கு ஒரு காரணமாக அமைந்ததெனலாம். எடுத்துக்காட்டாக இக்காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்கள் என பின்வருவோரைக் குறிப்பிடலாம். கம்பர் ஒட்டக்கூத்தர். சேக்கிழார். ஒளவையார், புகழேந்தி

. இக்காலத்தில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் காவியங்களை படித்தனர். மெலும் தரமான காவியங்களைப் படைத்த புலவர்களைப் புகழ்ந்தனர். அதே வேளை மன்னர்களும் புலவர்களுக்குப் பட்டங்களைக் கொடுத்து கௌரவித்தனர். எடுத்துக்காட்டாக சோழ அரசன் கம்பருக்கு கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தைக் கொடுத்தான்.

மேற்குறிப்பிட்ட தன்மைகளே சோழர் காலத்தில் காவியங்கள் தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் எனலாம்.





சோழர் கால இலக்கியப் பண்புகள்.


உலகியல் போற்றும் பண்பு :  சோழப் பெருமன்னர் நாட்டு நலன் கருதி ஆட்சி செய்தமையாலும் செல்வச் செழிப்பு, பொருள் வளம் முதலியன சிறந்து விளங்கியமையாலும் கல்வியறிவு, பண்பாடு என்பன வளர்ச்சியுற்றுக் காணப்பட்டமையாலும் சமுதாயச் சிறப்புப் பற்றியும் மன்னரின் ஆட்சிச் சிறப்பு பற்றியும் பல இலக்கியங்கள் எடுத்துக் கூறின. எடுத்துக்காட்டாக கம்பராமாயணம், நளவெண்பா கலிங்கத்துப்பரணி போன்றவற்றை குறிப்பிடலாம்.

உலகியலையும் இறைவழிப்பாட்டையும் உணர்த்தியமை :  தமிழிலக்கிய வரலாற்றில் சோழர் காலம் வரையுள்ள இலக்கியங்கள் ஒன்றில் உலகியலைப் போற்றிய அல்லது இறையியலைப் போற்றிய, ஆனால், சோழர் கால இலக்கியங்கள் உலகியலையும் இறையியலையும் ஒன்றாக வைத்திருப்பது இக்கால இலக்கியம் பண்பின் சிறப்பியல்பு எனலாம். உதாரணமாக கம்பராமாயணத்தில் இராமனை இறைவனாகவும் மனிதனாகவும் பார்ப்பது இத்தன்மையை வெளிப்படுத்துகின்றது.

வடமொழி மரபுக்கமையப் பல காவியங்கள் தோன்றியமை :  தன்னிகரில்லா தலைவன் ஒருவனுடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதன் மூலம் மக்களுடைய நல்வாழ்விற்கு இன்றியமையாத அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற் பொருளையும் பேரிலக்கியம் காவியம் எனப்படும். அது பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என இருவகைப்படும். சிலப்பதிகாரம், மணிமேகலை தவிர்ந்த பெருங்காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் சோழர் காலத்திலேயே தோற்றம் பெற்றன.

சிற்றிலக்கியங்கள் பல தோன்றியமை :  சயங்கொண்டனார் இயற்றிய கலிங்கத்துப்பரணி, ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா. குலோதுங்க சோழன் பிள்ளைத்தமிழ், புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பா முதலியவை சோழர் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்களுக்குள் சிலவாகும். வளம் மிக்க இலக்கியங்களாக விளங்கும் அவை தமிழிலக்கிய வரலாற்றில் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன.

பழமை போற்றும் பண்பு :  சோழர் காலப் புலவர்கள் பழமையைப் பல வழிகளிலும் போற்றினர். தம் முன்னோர் இயற்றிய இலக்கியங்களைத் தேடித் தொகுத்தும், இசை வகுத்தும், உரை எழுதியும் மக்கள் மத்தியில் அவற்றை அறியவைப்பதில் சோழர் காலத்தவர்கள் அயராது உழைத்தனர். நம்பியாண்டார் நம்பி தேவார திருமுறைகளைத் தொகுத்ததையும், நாத முனிகள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்ததையும் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

சைவ சித்தாந்த நூல்களின் தோற்றம் :  சைவ சமய உண்மைகளை ஆராயும் சித்தாந்த சாஸ்திரங்கள் பல இக்காலப் பகுதியில் தோற்றம் பெற்றமை இக்கால இலக்கியப் பண்புகளுள் ஒன்று. தோத்திரங்களும் சாஸ்திரங்களும் சைவத்தின் கண்கள் என்பர். பல்லவர் காலத்தில் தோத்திரங்கள் பல தோன்றி மக்களை இறை பக்தியில் ஈடுப்படுத்திச் சமய உணர்வு பெற வழிவகுத்தன. அச்சமய உணர்வினால் ஏற்பட்ட நம்பிக்கையை வலுவூட்டுவதற்குச் சமய உண்மைகளை ஆராய்ந்து கூறும் சித்தாந்த சாஸ்திர நூல்கள் தோன்றலாயின. அவை மெய்கண்ட சாஸ்திரங்கள் எனப்படும்.

தமிழ் உரைநடை வளர்ச்சியடைந்தமை :  உரையாசிரியர்கள் பலர் தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றுக்கும் இலக்கண நூல்கள் பலவற்றுக்கும் உரைகளை எழுதியமையால் தமிழ் உரைநடை சோழர் காலத்தில் பெரு வளர்ச்சி கண்டது. இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர் முதலியோர் எழுதிய உரை விளக்கங்கள் பிற்காலத்தவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளன. இவ்வாறாக தமிழ் உரைநடை வளர்ச்சியிலும் சோழர் காலப்பகுதி சிறந்து விளங்கியதெனலாம்.

புகழ் பாடுதல : மன்னர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடும் மரபு சங்க காலத்தில் காணப்பட்ட ஒரு முக்கிய பண்பாகும். இப்பண்பு சங்கமருவிய காலத்திலும் பல்லவர் காலத்திலும் மிக அருகியே காணப்பட்டது. இருப்பினும் சோழர் காலத்தில் மீண்டும் மன்னர்களையும் கொடை வள்ளல்களையும் புகழ்ந்து பாடும் பண்பு தோன்றுகின்றது. எடுத்துக்காட்டாக குலோதுங்க சோழன் பிள்ளைத்தமிழ், மூவருலா போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

9. யாப்புக்கள் :  இக்காலப் பகுதியில் தாழிசை, துறை, விருத்தம், என்பன பெருவழக்குப் பெற்ற யாப்பு முறைகளாய் அமைகின்றன. தாழிசை யாப்பு நாட்டார் பாடல் மரபை ஒட்டியது. தாழிசையிலே சந்த வேறுபாடுகளைப் புகுத்தி உணர்ச்சி, பொருள், நிகழ்வு என்பவற்றில் வேறுபாடுகளைக் காட்டும் பண்பு இக்காலத்தில் காணப்படுகிறது. இருப்பினும் பெருவாரியாக விருத்தயாப்பே பயன்படுத்தப்படுகிறது.



பல்லவர்கால இலக்கியங்கள் சோழர் காலத்திற்கு வழிகாட்டியமை

  • பல்லவர் காலம்
  • சோழர் காலம்
  • பக்தி நெறி காலம்
  • காவிய காலம்

பல்லவர் காலம் : பக்தியை பாடுபொருளாகக் கொண்டு ஏராளமான இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.
சோழர் காலம் : காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என்பவற்றின் ஊடாக பக்திசா கருத்துக்கள் பரப்பப்பட்டன.

பல்லவர் காலம் :  பதிகங்களின் ஊடாக தத்துவ கருத்துக்கள் போதிக்கப்பட்டன.
சோழர் காலம் : அவற்றின் தாக்கமே சித்தாந்த சாத்திரங்களின் தோற்றமாகும்.

பல்லவர் காலம் : பதிகங்களில் புராண, இதிகாச கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றன. 
சோழர் காலம் : கம்பராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம் போன்ற புராண, இதிகாசங்கள் தோற்றம் பெற்றன.

பல்லவர் காலம் : பக்தியியக்கத்தின் செயற்பாட்டில் நாயன்மார்களினது பங்களிப்பு பிரதானமானது. 
சோழர் காலம் : பக்தியியக்கத்தை முன்னின்று வளர்த்த நாணன்மார்களது பெருமையினை பெரியபுராணம் பேசுகின்றது. 

பல்லவர் காலம் : நாயன்மார்களால் அதிகமான தேவார பதிகங்கள் பாடியருளப்பட்டன. 
சோழர் காலம் : நம்பியாண்டார் நம்பியால் திருமுறைகளாக தொகுக்கப்பட்டது

பல்லவர் காலம் : ஆழ்வார்களால் ஏராளமான பாசுரங்கள் பாடப்பட்டன. 
சோழர்காலம் : நாதமுனி என்பவரால் நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டது.

பல்லவர் காலம் : உலா, வெண்பா, பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கிய வடிவங்கள் கையாளப்பட்டன. (திருக்கைலாய ஞான உலா, பாரத வெண்பா, பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழ்) 
சோழர்காலம் : மூவருலா, நளவெண்பா, குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கியங்கள் தோற்றம் பெற்றன. 

பல்லவர் காலம் : பெருங்கதை என்ற காப்பிய இலக்கியத்தின் தோற்றம்.
சோழர் காலம்  : பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்பவற்றின் தோற்றம்.

பல்லவர் காலம் : மன்னர்கள் புகழ்பாடும் நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம், பாண்டிக் கோவை போன்ற இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.
சோழர் காலம் : கலிங்கத்துப்பரணி, மூவருலா, குலோத்துங்க பிள்ளைத்தமிழ், காப்பியங்கள் என்பன மன்னன் புகழ் பாடுகின்றன.

பல்லவர் காலம் : வடமொழி கலப்பு ( மணிப்பிரவாளநடை)
சோழர் காலம்  : வடமொழி கலப்பு ( மணிப்பிரவாளநடை)

பல்லவர் காலம் : உரைநடை வளர்ச்சி (இறையனார் அகப்பொருளுரை, ஸ்ரீபுராணம், கயசிந்தாமணி)
சோழர் காலம் : தொல்காப்பியம், வீரசோழியம், திருக்குறள் போன்ற நூல்களுக்கு உரை எழுதப்பட்டது.

பல்லவர் காலம் : சங்கயாப்பு, பாட்டியல் நூல், புறப்பொருள் வெண்பா மாலை போன்ற இலக்கண நூல்களின் தோற்றம்
சோழர் காலம் : நன்னூல், வீரசோழியம், நேமிநாதம் உட்பட ஏராளமான இலக்கண நூல்கள் தோற்றம் பெற்றன.

பல்லவர் காலம் : பதிகங்கள் பாடுவதற்கு விருத்தம், தாழிசை, துறை போன்ற யாப்பினங்கள் பயன்படுத்தப்பட்டன.


சோழப் பேரரசு


Chola Empire in tamil



தலைநகரம்
  • முற்காலச் சோழர்கள்: ( பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம், உறையூர், திருவாரூர் )
  • இடைக்காலச் சோழர்கள்: ( தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் )
  •  பிற்காலச் சோழர்கள்: ( கங்கைகொண்ட சோழபுரம், பழையாறை, தாராசுரம் )
மொழிகள் : (தமிழ், சமஸ்கிருதம் )
சமயம் ( இந்து, சைவம், வைணவம்)
அரசாங்கம் ( முடியாட்சி )

அரசன்
( டி.பி.848-871 - விசயாலயச் சோழன்
கி.பி.1246- 1279 - மூன்றாம் இராஜேந்திர சோழன் )

வரலாற்றுக் காலம் ( சங்க காலம், மத்திய காலம் )
உருவாக்கம் ( கி.மு. 400 )
இடைக்காலச் சோழர்களின் எழுச்சி ( கி.பி.848 )
குலைவு ( டி.பி.1279 )

பரப்பளவு
டி.பி.1050  ( 36,00,000 கிமீ² )
கணிப்பு (13,89,968 சதுர மைல்)

தற்போதைய பகுதிகள் 
( இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், மாலைத்தீவுகள், தாய்லாந்து, கம்போடியா )



சோழர் காலம் தமிழரின் செவ்வியல் காலம்

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால வெண்கலச்சிலை.. சிவனின்அர்த்தநாரீசுவரர் தோற்றம்சோழர் காலத்தில் கலை இலக்கியம் சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தைத் தமிழரின் செவ்வியல் காலம் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது.

கோயில் கட்டிடங்களும் கற்சிற்பங்களும் வெண்கலச் சிலைகளும் இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும் வணிகமும் அவர்களுடைய பண்பாட்டுத் தாக்கங்களைப் பல நாடுகளிலும் உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே.


கலைகள்

சோழர்காலத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. சோழர்களின் நகரம் உள்ளாலை புறம்பாடி என்ற இரு பிரிவாக இருந்தது. நகரங்கள் மிகப்பெரியவை. பல மாடிவீடுகள் கொண்டவை. இன்ன இடத்தில் இன்ன வகையான வீடுகள் தான் கட்டலாம் என்றும் இன்னவர்கள் இத்தனை மாடிகளுடன்தான் வீடுகள் கட்ட வேண்டும் என்றும் விதிகள் இருந்தன. பல அங்காடிகள் இருந்தன. இவர்களின் கட்டடக்கலை உன்னதத்தை விளக்குவன சோழர் அமைத்த கோவில்களே ஆகும். சோழர்காலக் கட்டிடக்கலை பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விசயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால் முதலாம் இராசராசனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரியவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும் ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதால் இராசராசன் காலத்திலும் அவன் மகனான இராசேந்திர சோழன் காலத்திலும் தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. கி.பி. 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் சோழர்கள் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.


தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் கி.பி 1200

சோழர் காலம் கல்லாலும் வெண்கலத்தாலும் ஆக்கப்பட்டச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய சிவனின் பல்வேறு தோற்றங்கள் விஷ்ணு மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும் பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும் ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும் 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும் கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள் ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.


சோழர் காலத்தில் கல்வி சமஸ்கிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள். இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால் சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில் தொழில் பயிலுனர் முறைப்படி அறிவூட்டப்பட்டது.


மொழி

சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம் வணிகம் இலக்கியம் சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்கீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது".


இலக்கியம்

சோழர் காலம் தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும்.இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ் உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும் அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும் ஏராளமான கோயில்களின் உருவாக்கமும் இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும் புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன.இராசராச சோழன் காலத்தில் தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. சமண பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன. ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும் தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும் இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும் கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார்.செயங்கொண்டாரரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். இரண்டாம் குலோத்துங்க சோழன் பெற்ற கலிங்கத்து வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்நூல், இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஓட்டக்கூத்தர் என்னும் புலவர்குலோத்துங்க சோழ உலா என்னும் நூலையும் தக்கயாகப் பரணி மூவருலா என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சேக்கிழாரின் பெரிய புராணமும் இக்காலத்ததே. சோழர் காலத்தில்தான் திருப்பாவை திருவெம்பாவை போன்றவை சோழ நாடெங்கும் ஓதப்பட்டன. சோழர் காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சத்தை எட்டியது.

சைவ சித்தாந்த நூல்களும் இக்காலத்தே மலர்ந்தன. மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். வாகீச முனிவரின் ஞானாமிர்தம் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் எழுதிய திருவுந்தியார் அருள்நந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞான சித்தியார் உமாபதிசிவாச்சாரியாரின் எட்டு நூல்கள் என சைவ சித்தாந்த அறிவு சோழர் காலத்தில் உருவாகி முறையான வடிவம் பெற்றது.


சமயம்
சோழர் இந்து சமயத்தை சிறப்பாகச் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். எனினும் பிற மதங்களையும் ஆதரித்தனர். சைவம் வைணவம் என்ற இரு மதங்களும் சோழர் காலத்தில் சிறந்திருந்தது. ஏராளமான சைவ வைணவ மடங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு சாற்று முறை செய்ய வரியில்லா நிலங்கள் பணியாளர்கள் எனப்பெரும் பொருள் செலவிடப்பட்டது. இம்மடங்களில் உணவிடுதல் வழிப்போக்கருக்கு உப்பு விளக்கெண்ணெய் வழங்குவது நோய்க்கு மருத்துவம் செய்வது ஆகியன் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் சிந்தனை பக்திநெறியில் செல்ல இவை வழிவகுத்தன. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைணவர் பால் சிறப்பாக இராமானுசர் தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராசேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள்.



சோழர்கள் மு.யு. நீலகண்ட சாஸ்திரி பாகம் இரண்டு - பக்கம் 870.

இலக்கிய வளர்ச்சி பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலமான நானூறு ஆண்டுகள் தமிழக வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றிக் கூறப்படுகிறது. போர்கள், நாடுகளை வென்று கைப்பற்றல், கோயில் பணி என்றிருந்த காலத்தில் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும் ஏற்றம் பெற்றன. பிற்காலச் சோழ மன்னர்கள் அளித்த பேராதரவின் காரணமாகத் தமிழில் இறவாப் புகழ் பெற்ற எண்ணிலாத இலக்கியப் படைப்புகள் தோன்றின. பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய இலக்கியங்களைப் பெருங்காப்பியங்கள். சிறுகாப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்கள், உரை நூல்கள் என வகைப்படுத்திக் காணலாம்.


பெருங்காப்பியங்களும், சிறுகாப்பியங்களும்

சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியவை ஐம்பெருங்காப்பியங்கள் என்று கூறப்படுகின்றன. இவற்றுள் சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய மூன்று பெருங்காப்பியங்களும் பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றியவை ஆகும். சீவகசிந்தாமணியும், வளையாபதியும் சமண சமயம் சார்ந்த காப்பியங்கள். சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர் ஆவார். இவர் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு. இந்நூலிற்கு மணநூல் என்ற வேறொரு பெயரும் உண்டு. இந்நூலில் மொத்தம் 3145 செய்யுள்கள் உள்ளன. இவையாவும் விருத்தப்பா என்னும் பாவகையில் அமைந்தன. இவர் பயன்படுத்திய இப்பாவகையைக் கொண்டே கம்பர், சேக்கிழார் போன்றோர் தமது காப்பியங்களைப் டைத்தனர்.

குண்டலகேசி பெளத்த சமயம் சார்ந்த பெருங்காப்பியம் ஆகும். இதனை இயற்றியவர் நாதகுத்தனார். பெரிய புராணம் சைவசமயம் சார்ந்த பெருங்காப்பியம் ஆகும். இதனை இயற்றியவர் சேக்கிழார். கம்பராமாணம் வைணவ சமயம் சார்ந்த பெருங்காப்பியம். இதனை இயற்றியவர் கம்பர். சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம், நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படுகின்றன. இவை அனைத்தும் பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றியவை ஆகும். மேலும் இவை எல்லாமே சமணப் புலவர்களால் எழுதப்பட்டவை ஆகும். இவற்றுள் சிறந்தது சூளாமணி. இதனை இயற்றியவர் தோலாமொழித் தேவர். நளவெண்பா, திருவிளையாடற் புராணம் ஆகிய காப்பிய நூல்களும் பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றின.


சிற்றிலக்கியங்கள்

உலா, பிள்ளைத்தமிழ், பரணி, கோவை போன்ற சிற்றிலக்கிய வகைகளில் பல நூல்கள் தோன்றின. ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி, ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணி, பொய்யாமொழிப் புலவர் பாடிய தஞ்சைவாணன் கோவை ஆகியவை பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் ஆகும்.

இலக்கண நூல்கள்

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன தமிழில்ஐந்திலக்கணம் எனப்படும். பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றியநன்னூல், நேமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் எழுத்தும் சொல்லும் பற்றியவை. இவற்றுள் நன்னூல் புகழ் பெற்றது. இதனை எழுதியவர் பவணந்தி முனிவர். நாற்கவிராச நம்பி என்பவரால் எழுதப்பட்ட நம்பியகப் பொருள்அகப்பொருள் சார்ந்த இலக்கண நூல் ஆகும். இந்நூலில் இடம் பெற்றுள்ள அகப்பொருள் துறைகளுக்குத் தஞ்சைவாணன் கோவைப் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டன. யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம் ஆகிய இரு நூல்கள் யாப்பிலக்கணம் பற்றியவை ஆகும். இவற்றை இயற்றியவர் அமிர்தசாகரர் ஆவார்.

புத்தமித்திரர் என்பவர் எழுதிய வீரசோழியம் என்னும் இலக்கண நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கணங்களையும் பற்றியதாகும். தமிழ் மொழியில் சொற்களைப் பொருள் அடிப்படையில் தொகுத்தளிக்கும் நூல்கள் நிகண்டு எனப்படும். திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு ஆகியன நிகண்டு நூல்களில் குறிப்பிடத்தக்கன.


உரை நூல்கள்

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், திருக்குறள்போன்ற பழைய இலக்கண, இலக்கியங்களுக்கு முதன்முதலில் உரை நூல்கள் வெளிவந்தது பிற்காலச் சோழர் காலத்திலேயே ஆகும்.

இளம்பூரணர், சேனாவரையர்,பேராசிரியர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். கல்லாடர்.சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு முழுமைக்கும், எட்டுத்தொகையில் ஒன்றான கலித்தொகைக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதினார். மேலும் இவர் சீவக சிந்தாமணி முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்.

சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் என்பவர் அறியதோர் உரை வரைந்துள்ளார். சிலப்பதிகாரக் கருவூலத்தைத் திறக்கும் திறவுகோல் இவரது உரையாகும்.திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர். மணக்குடவர் ஆகியோர் பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர். மேலே கூறப்பட்ட நூல்களேயன்றிச் சோழர் காலத்தில் கற்களில் பொறிக்கப்பட்ட மன்னர்களின் மெய்க்கீர்த்திகளும் சிறந்த இலக்கியங்களாக விளங்குகின்றன. இராசராசேசுவர நாடகம், இராசராச விசயம் முதலிய நாடக நூல்கள் இயற்றப்பட்டன. ஆனால் அவை நமக்குக் கிடைக்காமல் போயின.

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின்திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர். அங்கிருக்கும் இறைவனானநடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.

நாயன்மார் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில்அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார். ஜ1ஸ

நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.


பெரியபுராணம்

சேக்கிழாரால், பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது.
நாயன்மாரின் பட்டியல்.

நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்). அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.

"எண் பெயர் குலம் பூசை நாள் நின்ற நெறி
1 அதிபத்தர்பரதவர் ஆவணி ஆயில்யம்
2 அப்பூதியடிகள் அந்தணர் தை சதயம்
3 அமர்நீதி நாயனார் வணிகர் ஆனி பூரம்
4 அரிவட்டாயர் வேளாளர் தை திருவாதிரை
5 ஆனாய நாயனார் இடையர் கார்த்திகை ஹஸ்தம்
6 இசைஞானியார் ஆதி சைவர் சித்திரை சித்திரை
7 இடங்கழி நாயனார் வேளிர் ஐப்பசி கார்த்திகை
8 இயற்பகை நாயனார் வணிகர் மார்கழி உத்திரம்
9 இளையான்குடிமாறார் வேளாளர் ஆவணி மகம்
10 உருத்திர பசுபதி நாயனார் அந்தணர் புரட்டாசி அசுவினி
11 எறிபத்த நாயனார் மரபறியார் மாசி ஹஸ்தம்
12 ஏயர்கோன் கலிகாமர் வேளாளர் ஆனி ரேவதி
13 ஏனாதி நாதர் சான்றார் புரட்டாசி உத்திராடம்
14 ஐயடிகள் காடவர்கோன் காடவர் ஐப்பசி மூலம்
15 கணநாதர் அந்தணர் பங்குனி திருவாதிரை
16 கணம்புல்லர் செங்குந்தர் கார்த்திகை கார்த்திகை
17 கண்ணப்பர் வேடர் தை மிருகசீருஷம்
18 கலிய நாயனார் செக்கார் ஆடி கேட்டை
19 கழறிற்றறிவார்மரபறியார்- அரசன் ஆடி சுவாதி
20 கழற்சிங்கர்மரபறியார்- அரசன் வைகாசி பரணி
21 காரி நாயனார் அந்தணர்மாசி பூராடம்
22 காரைக்கால் அம்மையார் வணிகர் பங்குனி சுவாதி
23 குங்கிலியகலையனார் அந்தணர் ஆவணி மூலம்
24 குலச்சிறையார் மரபறியார் ஆவணி அனுஷம்
25 கூற்றுவர்களப்பிரர் ஆடி திருவாதிரை
26 கலிக்கம்ப நாயனார் வணிகர் தை ரேவதி
27 கோச்செங்கட் சோழன்மரபறியார்- அரசன் மாசி சதயம்
28 கோட்புலி நாயனார் வேளாளர் ஆடி கேட்டை
29 சடைய நாயனார் ஆதி சைவர் மார்கழி திருவாதிரை
30 சண்டேஸ்வர நாயனார் அந்தணர் தை உத்திரம்
31 சக்தி நாயனார் வேளாளர் ஐப்பசி பூரம்
32 சாக்கியர் வேளாளர்
33 சிறப்புலி நாயனார் அந்தணர்
34 சிறுதொண்டர் மாமாத்திரர்
35 சுந்தரமூர்த்தி நாயனார் ஆத சைவர் மார்கழி பூராடம்
36 செருத்துணை நாயனார் வேளாளர் ஆவணி பூசம்
37 சோமசிமாறர் அந்தணர் வைகாசி ஆயிலியம்
38 தண்டியடிகள் செங்குந்தர் ஜஸஜ்7ஸ பங்குனி சதயம்
39 திருக்குறிப்புத் தொண்டர் ஏகாலியர்  சித்திரை சுவாதி
40 திருஞானசம்பந்தமூர்த்தி அந்தணர்  வைகாசி மூலம்
41 திருநாவுக்கரசர் வேளாளர் சித்திரை சதயம்
42 திருநாளை போவார் புலையர் புரட்டாசி ரோகிணி
43 திருநீலகண்டர் குயவர்  தை விசாகம்
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர் வைகாசி மூலம்
45 திருநீலநக்க நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
46 திருமூலர் இடையர் ஐப்பசி அசுவினி
47 நமிநந்தியடிகள் அந்தணர் வைகாசி பூசம்
48 நரசிங்க முனையர் முனையர் புரட்டாசி சதயம்
49 நின்றசீர் நெடுமாறன் அரசர் ஐப்பசி பரணி
50 நேச நாயனார் சாலியர்  பங்குனி ரோகி
51 புகழ்சோழன்மரபறியார்- அரசன் ஆடி கார்த்திகை
52 புகழ்த்துணை நாயனார் ஆதி சைவர் ஆனி ஆயிலியம்
53 பூசலார் அந்தணர்  ஐப்பசி அனுஷம்
54 பெருமிழலைக் குறும்பர் குறும்பர்
55 மங்கையர்க்கரசியார் மரபறியார்-அரசர் சித்திரை ரோகிணி
56 மானக்கஞ்சாற நாயனார்வேளாளர் மார்கழி சுவாதி
57 முருக நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
58 முனையடுவார் நாயனார் வேளாளர் பங்குனி பூசம்
59 மூர்க்க நாயனார் வேளாளர் கார்த்திகை மூலம்
60 மூர்த்தி நாயனார் வணிகர் ஆடி கார்த்திகை
61 மெய்ப்பொருள் நாயனார் வேளாளர் கார்த்திகை உத்திரம்
62 வாயிலார் நாயனார் வேளாளர் மார்கழி ரேவதி
63 விறன்மிண்ட நாயனார்வேளாளர் சித்திரை திருவாதிரை


வகைப்பாடு
காலம், குலம், நாடு, இயற்பெயர் காரணப்பெயர் 67631 பல வகைகளில் நாயன்மார்களை வகைப்படுத்துகிறார்கள். இவ்வாறான ஒப்புமை நோக்குமை நாயன்மார்களைப் பற்றிய புரிதல்களை அதிகப்படுத்த உதவுகின்றன. நாயன்மார்களின் வரலாறுகளை ஆய்வு செய்யவும். அவற்றில் உள்ள சேர்க்கைகளையும், உண்மைகளையும் புரிந்து நோக்கவும் இவ்வாறான வகைப்பாடு உதவுகின்றன.


சமயக் குரவர்கள்
நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.




சிவன் கோவிலில் உள்ள 63 நாயன்மார்

பாலினம்
நாயன்மாரில் பெண்கள்
அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள்.கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார்நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன்நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவிஇசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.


மரபு
நாயன்மார்களை மரபு அடிப்படையில் நோக்கும் போது. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், ஆதி சைவர், மரபுக்கொருவர் மரபு கூறப்படாதவர் வகைப்படுத்துகின்றனர். என அரசர், அரச மரபினர் ( 12 பேர்)
  • சேரர் - சேரமான் பெருமான்
  • சோழர் - கோச்செங்கட் சோழர், புகழ்ச் சோழர்
  • பாண்டியர் நெடுமாறர், மங்கையர்க்கரசியார்
  • பல்லவர் கழற்சிங்கர், ஐயடிகள் காடவர் கோன்
  • களப்பிரர் - கூற்றுவ நாயனார்
  • சிற்றரசர் -மெய்பொருள் நாயனார் நரசிங்க முனையரையர், பெருமிழலைக் குறும்பர், இடங்கழி நாயனார் சிற்றசர்கள்
  • மெய்பொருள் நாயனார் திருக்கோவலூர் (நடுநாடு)
  • நரசிங்க முனையரையர் திருநாவலூர் (நடுநாடு)
  • பெருமிழலைக் குறும்பர் பெருமிழலை (சோழநாடு)
  • இடங்கழி நாயனார் - கொடும்பாளர் (கோனாடு)


நாடு.
நாடுகளில் அடிப்படையில் நாயன்மார்களை நோக்கும் போது பெருவாரியான அடியார்கள் சோழ நாட்டினை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சேர,பாண்டிய நாடுகளோடு, மலைநாடு, தொண்டைநாடு, நடுநாடு. வடநாடு ஆகிய நாடுகளில் உள்ளோரும் நாயன்மார்களாக இருந்துள்ளார்கள். சோழ நாட்டிற்கு அடுத்தபடியாக தொண்டை நாட்டில் எட்டு நாயன்மார்கள் உள்ளார்கள்.
  • சேர நாடு - 2 நாயன்மார்
  • சோழ நாடு - 37 நாயன்மார்
  • தொண்டை நாடு - 8 நாயன்மார்
  • நடு நாடு -7 நாயன்மார்
  • பாண்டிய நாடு -5 நாயன்மார்
  • மலை நாடு - 2 நாயன்மார்
  • வட நாடு - 2 நாயன்மார்

முக்தி தலங்கள்
நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முறையில் முக்தி அடைந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள், சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்து ஒரு நாயன்மார்கள், அடியாரை வழிபட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்து ஒரு நாயன்மார்கள்.

குருவருளால் முக்தியடைந்தவர்கள்
திருஞானசம்பந்தர்.

1. திருநாவுக்கரசர்
2. திருமூலர்
3. நின்றசீர் நெடுமாறர்
4. மங்கையற்கரசியார்
5. குலச்சிறையார்
6. திருநீலகண்டயாழ்ப்பாணர்
7. பெருமிழலைக்குறும்பர்
8. கணம்புல்லர்
9. அப்பூதியடிகள்
10. சோமாசிமாறர்


கோயில்கள்.
அவதாரத் தலங்கள்

நாயன்மார்கள் பிறந்த தலங்களை நாயன்மார் அவதாரத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஐம்பத்தி எட்டு (58) தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மற்றவை பாண்டிச்சேரி (காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற வீதத்திலும், கேரளா மாநிலத்தில் இரண்டு இடங்களிலும் அமைந்துள்ளன.

நாயன்மார் தலங்கள்
  • நாயன்மார்களுக்கு தனிக்கோயில்கள் அரசர்கள் காலத்தில் எடுக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை இருபத்து ஒன்பதாகும்.
  • இராஜேந்திர பட்டனம் திருநீலகண்ட யாழ்ப்பாணர் கோயில் இராஜேந்திர பட்டனம் விருத்தாசலம் வட்டம். கடலூர் மாவட்டம்.
  • சேங்கனூர் சண்டேசுர நாயனார் கோயில்- சேய்நல்லூர் - திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
  • திருப்பெருமங்கலம் ஏயர்கோன் கலிகாம நாயனார் கோயில் திருப்புன்கூர், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்.
  • சாத்தனூர் திருமூலதேவ நாயனார் கோயில் திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.


ஜாவாவில், பிராம்பாணன் என்னும் இடத்திலுள்ள திராவிடக் இந்துக்கோயில். கட்டிடக்கலையின் செல்வாக்குத் தெளிவாகத் தெரிகிறது.
Chola Empire in tamil

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், கி,பி 1200

Chola Empire in tamil


Chola Empire in tamil

Chola Empire in tamil

Chola Empire in tamil






0 Comments