கலைத்திட்டம் வரைவிலக்கணம் 

கலைத்திட்டம் என்பது பாடசாலையிலோ குழுவாகவோ , தனியாகவோ , ஆசிரியருடனோ , ஆசிரியர் இன்றியோ நிறைவு செய்து கொள்ளத்தக்கவாறு பாடசாலையினால் திட்டமிடப்பட்டு நெறிப்படுத்தப்படும் சகல அனுபவங்களும் ஆகும் "


கலைத்திட்டத்தின் மறுபெயர்கள் 

  • பாட விதானம்
  • கல்வி ஓடும் பாதை 
  • பயில்களம் 
  • அறிவூர்தி
  •  கல்விக்கட்டுமானம் 


கலைத்திட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

  •  உலக அறிவுகள் ( உலகமயமாக்கலும் அதன் தாக்கமும் )
  •  கல்வியில் கோட்பாடுகள் ( சமூகவியல் , கல்வித்தத்துவம். . ) 
  • அரசியல் நிலமைகள் 
  •  பொருளாதாரக் காரணிகள் 
  • கலாசார விழுமியங்கள்


கலைத்திட்டத்தின் பண்புகள் .

1. தற்போதை சமூகத் தேவைகளை நிறைவு செய்தல் 
2. எதிர்கால சமூகத் தேவைகளை நிறைவு செய்தல் 
3.பண்பாட்டைக் பாதுகாத்தலும் , வளப்படுத்துலும் . 
4.சமநிலையான ஆளுமையை விருத்தி செய்தல் 
5. தனியாளிடத்தில் ஆக்கத்திறன் , மதினுட்பத்திறன்களை விருத்தி செய்தல் 
6. தொழிலில் ஈடுபடுவதற்குத் தேவையான அடிப்படைத் திறன்களை விருத்தி செய்தல் 
7. தனியாளினதும் சமூகத்தினதும் விருத்திக்கும் தேவையான அறிவு . திறன் , மனப்பாங்கு , ஆற்றல் ஆகியவற்றை இளம் சந்ததிக்கு வழங்குதல்



 பாடசாலை கலைத்திட்டத்தின் நோக்கம் 

உற்பத்தி திறன் மிக்க பூரண மனிதனை உருவாக்குவது அல்லது ஒரு சிறந்த பிரஜையை உருவாக்குவது . 

  • தனி மனிதனை விருத்தி செய்தல் 
  • மனித உள ஆற்றல்கள் , அறிவாற்றலகளை விருத்தி செய்தல் 
  • தனி மனிதனை சமூகத்துக்குப் பயனுடைய ஒருவராக விருத்தி செய்தல்
  •  சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான மனித உழைப்பைப் பெறல் 
  • மனித இனத்தின் தொடர்ச்சியான அபிவிருத்திக்கு உதவுதல் 
  • மனித உரிமைகள் பற்றி விழிப்பூட்டல்
  •  வாழ்நாள் கற்றலுக்கு வழிப்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை வழங்குதல் 


ஒரு சிறந்த கலைத்திட்டத்தின் நியதிகள் 

  1. கலைத்திட்டம் தொடர்ந்து மாற்றத்திற்குள்ளாக வேண்டும் . 
  2. கலைத்திட்டம் மாணவர் தேவைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் . 
  3. கலைத்திட்டம் ஒரு நீண்டகால முயற்சியின் முடிவு 
  4. கலைத்திட்டம் பல விபரங்களின் ஒரு கூட்டுத்தொகுதி 
  5. கலைத்திட்டம் சமூகத்திலுள்ள ஏனைய நிகழ்ச்சித் திட்டங்களுடன் கூட்டிணைகின்றது . 
  6. கலைத்திட்டம் கல்வித்தரத்தைக் கொண்டிருக்கின்றது . 
  7.  கலைத்திட்டம் இயக்கத் தன்மையுடையதாக இருத்தல் .



 கலைத்திட்டத்திற்கும் பாடத்திட்டத்திற்கும் உள்ள வேறுபாடு 

 கலைத்திட்டம் 

  • ஒரு பாடசாலை முறைமையில் என்ன கற்பிக்கப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டலை வழங்குகின்றது .
  • இது பல்வேறு கற்கை நெறிகளைக்கொண்டது .
  • ஒரு குறிப்பிட்ட தேர்ச்சி அல்லது  தகைமையை அடைவதற்காக வடிவமைக்கப்படும்.

பாடத்திட்டம்

  • கற்க வேண்டிய தலைப்புக்களைக்  கொண்ட ஒரு பட்டியல் .   
  •  ஒரு கற்கை நெறி பற்றிய உரு ,  வரையும் கால அளவும் ஆகும் .
  • இது கற்கை நெறியின் குறிக்கோள்கள் ,எதிர்பார்க்கைகள் மதிப்பீடுகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும் .   , 



பூரண கலைத்திட்டம் ( Total Curriculum ) 
Total Curriculum

1. முறைசார் கலைத்திட்டம் ( Formal Curriculum ) 
2. முறையில் கலைத்திட்டம் ( Informal Curriculum )
 முறையில் கலைத்திட்டம் ( Informal Curriculum 
1. இணைக் கலைத்திட்டம் ( Co - Curriculum ) 
2. மறை கலைத்திட்டம் ( Hidden Curriculum ) 
இணைந்த கலைத்திட்டம் ( Co - Curriculum ) 
1.புறக் கலைத்திட்டம் ( Extra Curriculum ) ( மீன்பிடித்துறையில் உள்ள நுட்பங்களை அறிய வைத்தல் )


கலைத்திட்டத்தின் பிரதான கூறுகள் 

  • நோக்கங்கள் 
  • உள்ளடக்கம்  
  • முறையியல் 
  • மதிப்பீடு 

அடிப்படை தத்துவம் 

  1. இலட்சிய கோட்பாட்டு வாதம் 
  2.  யதார்த்த வாதம் 
  3. பயன்பாட்டு வாதம் 
  4. இயற்கை வாதம்
  5.  இருத்தலியல் வாதம்
  6. பின்நவீனத்துவ வாதம் 


 இலட்சிய கோட்பாட்டு வாதம் . 

  • சோக்கரட்டீஸ் , பிளேட்டோ , அரிஸ்ரோட்டில் . 
  • இது மிகவும் தொன்மையான ஒரு கல்வி கோட்பாடு . 
  • கல்விச் செயற்பாடுகளுக்கான திறவுக் கோள் ஆசிரியர்கள் ஆவார் . 
  • பிரபஞ்சத்தின் நடுநாயகமாக மனிதர் விளங்குகின்றார் . 
  • நல்ல பிரசைகளை உருவாக்க ஒழுக்க வளர்ச்சி , இறைபக்திஅவசியம் . 
  • உண்மை . அழகு , நன்மை ஆகியவற்றின் வழியாகவே பிரபஞ்சம் அணுகத்தக்கது . 
  • ஆசிரியரை அதீதமாக மையப்படுத்தல் . அகன்ற கற்றல் பரப்பை முன்னெடுத்தல் .


யதார்த்த வாதம் 

  • இலட்சிய வாத போக்கிற்கு எதிராக தோன்றிய தத்துவமாகும் . 
  • ஒழுங்கமைப்பின் ஒரு பகுதியே மனிதன் ஆவான் .
  •  பூரண மனிதனாக மாறுவதற்கு கல்வி தேவை . 
  • மாணவனுக்கு பொருத்தமான மகிழ்ச்சிக்கு வித்திடுகின்றது . 
  • தன்னை பராமரித்தல் , தற்துணிவு , தன்னை அறிந்துக் கொள்ளல் , இயலுமை இயலாமைகளை கண்டறிதல் , சிந்தித்து முடிவெடுக்கும் திறன் போன்றவற்றிற்கு தயார்ப்படுத்தல் வேண்டும் . 
  • உச்ச விருத்திப் பெற்ற மூளையையுடைய ஓர் உயிரி மாணவன் .
  •  திறன்களை வளர்த்துக் கொள்ளல் .


பயன்பாட்டு வாதம் 

  • பிள்ளை அனுபவத்தின் ஊடாக நிறைய விடயங்களை கற்றுக் கொள்கின்றான் . 
  • மனித வளர்ச்சி என்பது வெறும் புத்தகம் மட்டுமல்ல .
  •  தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.
  • மனிதனுடைய அறிவும் , சிந்தனையும் செயலோடு இணைந்துக் காணப்படல் வேண்டும் . 
  • எண்ணங்கள் எப்போதும் எண்ணங்களாகவே இருக்கக் கூடாது .எண்ணத்தை செயல் வடிவமாக்க வேண்டும் .
  •  பிள்ளை தனது நுண்ணறிவை பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தானே தீர்வு காண வேண்டும் .
  •  ஆசிரியர் வழிகாட்டி மற்றுமன்றி சிறந்த இயக்குனர் .


இயற்கை வாதம்

  •  இயற்கையோடு இணைந்த அனுபவங்களை அறிவாக கொள்ளுதல் . 
  • சுயபராமரிப்புத் திறன்களைக் கற்றுக் கொள்ளல் . 
  • முயன்று தவறுதல் வழியாகக் கற்றுக் கொள்ளல் . 
  • சுய அனுபவங்கள் வழியாகக் கற்றலை முன்னெடுத்தல் . ஆசிரியர் மாணவர் மீது கவனம் செலுத்த வேண்டுமேயன்றி கல்வியின் மீது கவனம் செலுத்தலாகாது . 
  • இயற்கைக்கு திரும்புதல் , இயற்கையை முதலியவை இவரின் குரல் முனைப்புகளாக இருந்தன . 


 இருத்தலியல் வாதம் 

  • நான் என்னவாக இருக்கின்றேன் , என்னவாக மாறிக் கொண்டிருக்கின்றேன் , எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன் என்ற மனித இருப்பை இக்கலைத்திட்டம் வெளிப்படுத்துகின்றது . 
  • உள்ளார்ந்த உண்மையை அறிய வைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் .
  • முழுமையான ஆளுமை
  • விஞ்ஞான , தொழிற்நுட்ப பாடங்களின் முக்கியத்துவம் 
  • சிந்தனையாளர் நீட்சே சார்ந்தன் . *


பின்நவீனத்துவ வாதம் 

  • போலோ பிறேறி . இவான் இளிச் ( புதிய நூற்றாண்டுகளுக்கு பொருத்தமானது ) பிள்ளையினுடைய சிந்தனை பரவாலாக்கப்பட்டுள்ளன . 
  • மனித கோலங்கள் பன்முகப்படுத்தப்பட்டுள்ளன
  •  ஒடுக்கப்படுவோர் என்ற கருத்துக்களை கல்விப்புலத்தில் இல்லாது ஒழித்தார்
  • உலகின் சவால்களுக்கு ஏற்ப முனைப்பு பொருந்திய செயற்பாடுகளை கற்பித்தல் .
  • சுவர்கள் அற்ற கல்வி சமூகத்தை உருவாக்கல் .
  •  சவால்களுக்கு முகம் கொடுத்து பங்காளிகளாக மாற்றி விடல் .
  • வங்கி முறை கல்வி அறிவை ஒடுங்குவோரில் வைப்பு செய்தல் . ( அவலாமான கல்வி முறையாகக் கருதினார் )  
  • முற்கவிப்பு கல்வி தனித்து பரப்பு , கருத்துக்களை மட்டும் வழங்காது சிறந்த முயற்சியாளனாக மாற்றி , கற்பவனுக்கு விழிப்புனர்வை ஊட்ட வேண்டும் .


 தத்துவவியலாளர்களின் தத்துவம் மற்றும் நூல்கள்

  1. ஜனநாயகமும் கல்வியும் - ஜோன் டூயி - பயன்கொள்
  2. சமூக ஒப்பந்தம் , எமிலி - ஜீன் ஜக்ஸ் ரூஸோ - இயற்கை
  3. குடியரசு சட்டங்கள் பிளேட்டோ -இலட்சியம் 
  4. மூலதனம் - கார்ல் மாக்ஸ் - மார்க்சியவாதம் 
  5. ஓடுக்கப்பட்டோர் கல்வி - பவ்லோ பிறேரி - பின் நவீனத்துவம் 

Philosophers' Philosophy and Texts

கலைத்திட்ட அணுகுமுறை 

கலைத்திட்ட அணுகுமுறை என்பது கலைத்திட்டம் ஒன்றை கையாளும் விதம் 


கலைத்திட்ட அணுகுமுறையின் வகைகள் : 

  1. நடத்தைசார் அணுகுமுறைகள்
  2. முகாமைத்துவ அணுகுமுறைகள் 
  3. முறைமை / தொகுதி அணுகுமுறைகள் 
  4. கல்வி சார் / புலமை சார் அணுகுமுறைகள்
  5. மனிதத்துவ அணுகுமுறைகள் 


அடிப்படை கலைத்திட்ட வடிவமைப்பின் வகைகள் 

1. பாடமையக் கலைத்திட்டம்
 2 . மாணவர் மையக்கலைத்திட்டம் 
3. பிரச்சினை மைய கலைத்திட்டம் . 


கலைத்திட்ட வடிவமைப்பின் கூறுகள் 

  1. குறிக்கோள்கள் / நோக்கங்கள் 
  2. பாட உள்ளடக்கம்
  3. கற்பித்தல் முறையியல் 
  4. மதிப்பீடு 


கலைத்திட்ட மாதிரிகள் நான்கு அவத்தைகளை கொண்டுள்ளது . 

  • கல்வித்திட்டமிடல் 
  • கல்வித்திட்ட வடிவமைப்பு 
  • கலைத்திட்ட அமுலாக்கம் 
  • கலைத்திட்ட மதிப்பீடு 



 கலைத்திட்டத்தின் இரண்டு விதமான ஒருங்கிணைப்புகள் 

நெடுங்கோட்டு ஒருங்கிணைப்பு / செங்குத்து ஒருங்கிணைப்பு( 1-13 ) தொடர்ச்சியான வலைப்பின்னலுடன் இணைக்கப்படல் ) 

அகலாங்கு ஒருங்கிணைப்பு / கிடை மட்ட உறவு ( தமிழ் , கணிதம் , விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான தொடர்பு ) 


கலைத்திட்ட வடிவமைப்பின் போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் 

  • தத்துவக்காரணிகள் 
  • சமயக்காரணிகள் 
  • சமூக்காரணிகள் 
  • பொருளாதாரக் காரணிகள்
  • அரசியல் காரணிகள் 


வகையின் அடிப்படையில் கலைத்திட்டங்கள்

1. முறைசார் கலைத்திட்டம் 
2. இணைக் கலைத்திட்டம்  
3. மறைக் கலைத்திட்டம் 
4. மையக் கலைத்திட்டம் ( பாடம் , மாணவர் ) 
5. விருப்பத்தேர்வு கலைத்திட்டம் ( Optional ) 
6. சுருளிக் கலைத்திட்டம் / சுழல் ஏணிக்கலைத்திடடம் 
7. மொடுலர் கலைத்திட்டம் : எண்ணக்கருக்களை சிறு சிறு அலகுகளாகப் பிரித்து கற்பிப்பது . மொடுல்களை அடிப்படையாகக் கொண்ட கலைத்திட்டமாகும் . ( 2023 ல் மொடூல்ஸ் கலைத்திட்டம் , ஆசிரியர்கள் ,EB )



கலைத்திட்ட விருத்தி மாதிரியுருக்கள் 

கலைத்திட்ட அபிவிருத்திச் செயல்களின் உள்ளடக்கத்தைத் தயாரிக்கும் போது கலைத்திட்டத்தில் தாக்கம் விளைவிக்கும் அம்சங்களை இனங்காண்பதற்கும் , கலைத்திட்டச் செயல்களை இலகுவாக நடைமுறைப்படுத்துவதற்கும் அவ்வம்சங்களுக்கிடையில் காணப்படும் இடைத் தொடர்புகளை அறிந்துக் கொள்ளவும் கலைத்திட்ட மாதிரி பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது .


குறிக்கோள் மாதிரி 

  1. ஆர்.டயிலரின் கலைத்திட்ட மாதிரி 
  2. ஹில்டா டாபாவின் கலைத்திட்ட மாதிரி 

சுழற்சி / சக்கர / வட்டத்தன்மைக் கொண்ட மாதிரிகைகள் 

  1.  வீலரின் கலைத்திட்ட மாதிரி 
  2. நிக்கலோஸின் கலைத்திட்ட மாதிரி 

இயங்குநிலை மாதிரி 

  1. வால்க்கரின் கலைத்திட்ட மாதிரி 
  2. ஸ்கில்பேர்க கலைத்திட்ட மாதிரி 



குறிக்கோள் மாதிரி / நேர்கோட்டு மாதிரி :

குறிக்கோளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட மாதிரிகைகளே குறிக்கோள் மாதிரி ஆகும் 

Objective Model


Objective Model


கல்வி மாற்றச் செயன்முறை 

மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வதற்கான வாழ்க்கை நீடித்த செயன்முறையே கற்றலாகும் . இதில் மிகச் சிரமமான பணி எவ்வாறு கற்பது என்பதை கற்பிப்பதாகும் . 

மாற்றம் என்பது பழையனவற்றில் அதிருப்தியடைவதும் , புதியனவற்றில் நம்பிக்கை கொள்வதுமாகும் . 

மாற்றங்கள் இரு வழிகளில் ஏற்படும் 

1. தொடர்ச்சியாகவும் உள்ளார்ந்த ரீதியாகவும் ஏற்படும் மாற்றம் ( மிக நுணுக்கமான மாற்றம் - தொழில்கல்வி )

 2. தொடர்ச்சியில்லாத வகையில் திடிரென வெளிவாரியாக ஏற்படும் மாற்றம் ( கொரானா , சுனாமி ) 

Educational change process


தலைமைத்துவ வெற்றிக்காக “ மைக்கல் புலன் ” முன்வைத்த விடயங்கள் . 

தமது உள்ளார்ந்த ஆற்றல்களுக்குரிய துறைகள் தொடர்பாக உணரும் திறனை உருவாக்கிக் கொள்ளல் .

 சிறந்த தொடர்பாடல் மற்றும் செயற்றிறனுடன் செயற்பாடுகளை நெறிப்படுத்தல் . 

பாடசாலையின் செயற்பாடுகளில் தன்னிறைவை காணல் . 

தனது நிறுவனத்தில் செயற்பாடுகளை சிறந்த முறையில் அவதானித்தல் மற்றும் செவிமடுத்தல் .

 சிறந்த தொடர்பாடலுக்காக பிரயோகித்தல் செவிமடுத்தலுடன் , ஒழுங்கமைக்கப்பட்ட தனது பேச்சாற்றலை பிரயோகித்தல் . 

பாடசாலையின் பால் அக்கறைச் செலுத்தும் தரப்பினர்கள் மற்றும் பாடசாலை உள்ளகத்தின் உப குழுக்கள் தைைலவரிகளிடம் கருத்துக்களை சேகரித்தல் 


மாற்றச் செயன்முறை விரிவுலும் பரப்புதலும் . 

  • சிறப்பான தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டிருத்தல் •
  •  உயர்ந்த விரி சிந்தனை 
  • தெளிவான பாடசாலைக் குறிக்கோள்கள்
  •  SBPTD தேவைகளை விருத்தி செய்தல் 
  • மாணவர் அடைவின் வலிவு நலிவுகளை நுணுக்கமாக நோக்குதல் . . 
  • நவீன கற்றல் கற்பித்தல் சாதனங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தல் . 

  • போதனை தலைமைத்துவப் பணிகள் . 
  • பாடசாலைக் கொள்கைகள் இலக்குகள் என்பவற்றைத் தீர்மானிப்பதில் பங்களித்தல் . 
  • பங்கேற்பு முகாமைத்துவம் 
  •  கலைத்திட்டத்தை முகாமை செய்தல் 
  • உடன்பாடான உயர் கற்றல் சூழலை உருவாக்கல் .
  •  நேரத்தை முகாமை செய்தல் 
  • ஆசிரியரின் வாண்மை விருத்திக்கு உதவுதல் . 
  • சிறந்த பாடசாலை சமூக உறவை பேணுதல்
  •  திட்டமிடல் ( நேர அட்டவணை தயாரித்தல்
  •  ஒழுங்கமைத்தல் ( தேவையான ஆசிரியர்களை தயார்படுத்தல் ) 


போதனை தலைமைத்துவம் கொண்டிருக்கவேண்டிய திறன்கள் 

  • ஆளிடைத் தொடர்பு மற்றும் தொடர்பாடல் திறன் 
  • அணி உருவாக்கும் திறன் 
  • முரண்பாட்டு முகாமைத்துவத்திறன்
  •  தீர்மானம் எடுக்கும் திறன்  
  • ஊக்குவிக்கும் திறன் 
  • நேர முகாமைத்துவத்திறன் 
  • இற்றைப்படுத்தும் திறன்


தலைமைத்துவ வகிபாகங்கள் 

ஆளிடைத் தொடர்பு வகிபாகம் 

  • பெயரளவில் தலைமைத்துவம் 
  • தலைமைத்துவ வகிபாகம் 
  • பொது நிலை வகிபாகம் 

தொடர்பாடல் வகிபாகம் . 

  • தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகிபாகம் 
  • தகவல் பரிமாற்ற வகிபாகம் 
  • செய்தி தொடர்பாடல் வகிபாகம் 

தீர்மானம் சார்ந்த வகிபாகம் 

  • தொழில் முனைவர் வகிபாகம் 
  • பிரச்சினைகளைத் தீர்க்கும் வகிபாகம் 
  • வளங்களைப் பகிரந்தளிக்கும் வகிபாகம்



பூரணத்துவமான ஒரு ஆசிரியர் 

  • பாட விடயத்தில் ஆழமான அறிவு , இற்றைப்படுத்தல்
  •  கற்பித்தல் தொழில்நுட்பங்களை பரந்த அளவில் பயன்படுத்தும் ஆற்றல் . 
  • தலைமைத்துவப் பண்பு . வாண்மை விருத்தி
  •  முன்மாதிரியாக இருத்தல் , வளங்களை வினைதிறனாக பயன்படுத்துவார் 
  • தம்மை தானே மதிப்பீடு செய்தல் 

ஆசிரியருக்கான திறன்கள் : 

  • ஊக்குவிக்கும் திறன் 
  • கற்பித்தல் தொடர்பாடல் திறன் 
  • வினவும் திறன்கள் 
  • வகுப்பறை முகாமைத்துவ திறன் 
  • மதிப்பீடு செய்யும் திறன் 



கலைத்திட்ட மதிப்பீடு

 ஏன் ? ( மாணவர்களது அடைவு ) 
எவ்வாறு ? ( வாய்மொழி மூலமா ? எழுத்து மூலமா ? ) 
எப்போது ? ( கற்கை நெறியின் தொடக்கத்தில் , பின்பற்றும் போது , தொடர்ச்சியாக பல தடவைகள் மதிப்பிட்டு கற்கை நிறைவின் போது ) 
எப்படி ? ( ஆய்வு ) 

  • இலக்குகள் மற்றும் குறிக்கோள்களை தீர்மானித்தல் . 
  • தகவல்களை சேகரித்தல் 
  • தகவல்களை ஒழுங்கமைத்தல் 
  • தகவல்களை பகுப்பாய்வு செய்தல்
  •  தகவல்களை அறிக்கையிடல் 
  • தகவல்களை மீள் சுழற்சிப்படுத்தல் 

கலைத்திட்ட மதிப்பீடு என்பது பாடசாலையில் காணப்படுகின்ற முறைசார் கற்பித்தல் மட்டுமல்லாமல் அங்கு காணப்படுகின்ற இணைந்த 43 நடவடிக்கைகளையும் மதிப்பிடப்படுவதாகும் .

 கலைத்திட்டத்தின் எல்லாப்பிரிவுகளும் விடயங்களும் மதிப்பீட்டுக்குள்ளாகும் . சகல நோக்கங்கள் எவ்வளவு தூரத்திற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்று ஆராய்தல் மதிப்பீடு ஆகும் .


 கலைத்திட்ட மதிப்பீட்டு மாதிரிகள் 

கலைத்திட்ட மாதிரி : 

  •  கலைத்திட்டம் ஒன்றை வடிவமைக்க பயன்படும் .

 கலைத்திட்ட மதிப்பீட்டு மாதிரி : கலைத்திட்ட அமுலாக்கலுடன் தொடர்பான தரவுகளை பெற்றுக் அல்லது மதிப்பீட்டொன்றை மேற்கொள்ள பயன்படுத்தப்படுவதாகும் .  


கலைத்திட்ட மதிப்பீட்டு மாதிரிகளின் வகைகள் 

  1.  டேனியல் ஸட்டப் பீம் CIPP Model 
  2. ஸ்டெக்ஸ் மாதிரி Stakes Model 
  3. டெயிலரின் மாதிரி 
  4. இலக்கற்ற மதிப்பீடு 


டேனியல் ஸட்டப் பீம் CIPP Model

 முகாமையாளருக்குச் சரியாகத் தீர்மானங்கள் எடுப்பதற்காக மதிப்பீட்டு மாதிரி முன்வைத்தார் .
 பின்வருவனவற்றை பயன்படுத்தி மதிப்பிடப்பட வேண்டும் . 
1. திட்டமிடலில் தீர்மானம் எடுப்பதற்கு 
2. வளங்களைப் பயன்படுத்தும்போது மாற்றமுறைகள் பற்றி தீர்மானம் எடுப்பதற்கு 
3. தீர்மானங்களைச் செயற்படுத்துவதற்கு உதவுகின்ற செய்கைக்கிரம மதிப்பீடு 
4. தீர்மானங்களை மீளமைப்பதற்கு உதவுகின்ற வெளியீட்டு மதிப்பீடு 
5. சமூகத்தில் வெளியீடுகளினால் ஏற்படுகின்ற செல்வாக்கை மதிப்பிடல் . 

கலைத்திட்ட மதிப்பீட்டின் பொருட்டு பல மாதிரிகள் காணப்பட்ட போதிலும் CIPP Model இம் மாதிரியை கலைத்திட்ட அபிவிருத்திக்கும் , கலைத்திட்ட மதிப்பீட்டிற்கும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது .

C - Context ( சூழ்நிலை பாடசாலை சூழல் ) 
I- Input ( உள்ளீடு வளங்கள் ) 
P- Process ( செயன்முறை கற்பித்தல் முறை நுட்பங்கள் ) 
P- Products ( உற்பத்தி மாணவர் அடைவு ) 



கலைத்திட்ட சீர்திருத்தம் 

1.கந்தெச கிராமிய கல்வித்திட்டம் ( 1932 ) : 

  • ஹந்தெஸ்ஸ கல்வி முறை ( கிராமப்புறங்களில் மட்டும்  
  • மத்திய மகா வித்தியாலயங்கள் 
  • கண்ணங்கர யுகம் . . 

2.1972 ம் ஆண்டு புதிய பாதைக் கலைத்திட்டம் . 

பாடசாலைக் கல்வி .

  • ஆரம்பக் கட்டம் 1-5 
  • கனிஸ்ட இடை நிலைக்கட்டம் 6-9 
  • சிரேஸ்ட இடை நிலைக்கட்டம்


 2007 ம் ஆண்டு புதிய மிலேனியத்திற்கான தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கல்வி

 தேர்ச்சி மைக்கலைத்திட்டம் ( செயற்பாட்டு மையக்கல்வி )
 5E முறையிலான கற்பித்தல் முறை .
 பாடக்குறிப்புக்கு பதிலாக செயற்பாட்டுத்திட்டம் .
 பொது தகவல் தொடர்பாடல் ( GIT ) அறிமுகம் .
 இடைநிலை கலைத்திட்டம் 12 பாடங்கள் அறிமுகம் . ( 6-9 ) இடை நிலை 9 பாடங்கள் ( 10-11 ) ( மையப்பாடம் -6 . தொகுதிப் பாடம் 3 ) 
  • தொகுதி 1- சமூக விஞ்ஞானத் தொகுதி 
  • தொகுதி 2- அழகியற் பாட்டுத் தொகுதி 
  • தொகுதி 3- தொழிற்நுட்ப பாடத்தொகுதி 
ஆசிரியர் வகிபாகம் நிலைமாறும் வகிபாகம்


 2015 ம் ஆண்டு மிலேனியத்தின் கலைத்திட்டம் 

  • கற்றல்பேறு
  •  ICT 6-9 
  • பொறியியல் தொழில் நுட்பம் ( Engineering Technology )
  • உயிர் முறைமைகள் தொழில்நுட்பம் ( Bio System Technology ).
  • 13 வருட உத்தரவாதம் அளிக்கப்பட்ட கல்வி 
  •  ஆசிரியர் வழிகாட்டி 
  • SBTD - SBPTD
  • தரம் -7 மாணவர்களின் தாங்கும் திற்ன திடசங்கல்பம்


செயற்றிட்டம் கற்றல் பேறு 

மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகிச் செல்லும் போது அவர்கள் சமூகத்தில் வாழ்வதற்கு தேவையான விசேட மற்றும் நீடித்து நிலவும் திறன்களின் தொகுதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் பாடசாலைக் கல்வியை வழங்குவதாகும் . ( அறிவு , திறன் , மனப்பாங்கு )

 பண்புகள் : 

  • மாணவரின் குறிப்பான செய்றபாடு அவதானிக்கப்படல் . -
  •  மாணவரின் குறிப்பான செய்றபாடு அளவிடப்படல்
  •  மாணவரின் குறிப்பான செய்றபாடுகளை உண்மையில் மாணவர்களால் மேற்கொள்ளப்படல்




 இலங்கையில் உள்ள பாடசாலைகளில் தற்போதுள்ள கலைத்திட்ட வகைகள்


 1. ஆரம்ப கலைத்திட்டம் .

3 முதன்மை நிலைகள்
  • முதன்மை நிலைகள் 1( தரம் 1,2 ) 
  • முதன்மை நிலைகள் 2 ( தரம் 3 , 4 ) 
  • முதன்மை நிலைகள் 3 ( தரம் 5 ) 
தரம் -1 மகிழ்ச்சிகரமாக உள்வாங்கல் - 16 திறன்கள் இனங்காணல்
ஒன்றிணைக்கப்பட்ட கலைத்திட்டம் ( சுற்றாடல் சார் செயற்பாடுகள் -16 கருப்பொருள் ) 
செயற்பட்டு மகிழ்வோம் . 
கட்டுறுவாக்க கலைத்திட்டம் ( நேரடியாக நிர்மாணிக்க முடியாது படிப்படியாக விருத்தி செய்தல் ) .
 GAD முறை கற்பித்தல் 


 2. இடைநிலைக் கலைத்திட்டம் 6-13 

6 - 9 தரங்களுக்கான கனிஸ்ட இடைநிலை கலைத்திட்டம்
 10-11 தரங்களுக்கான இடைநிலை கலைத்திட்டம்
 6 பிரதான பாடங்கள் ( மையப்பாடங்கள்
 3 தெரிவு பாடங்கள் ( தொகுதிப்பாடங்கள் )
  12-13 தரங்களுக்கான கலைத்திட்டம்
7 பிரிவுகள் 


கற்பித்தல் முறைமைகள் : 

  1. வகுப்பிற்கு பொதுவாக கற்பித்தல் . 
  2. குழு முறைக் கற்பித்தல்
  3.  அணி முறைக் கற்பித்தல் 
  4. பல் தரக் கற்பித்தல் . 

கற்பித்தல் முறைகள் : 

  1. விரிவுரை முறை 
  2. கண்டறி முறை 
  3. பிரச்சினை தீர்த்தல் முறை 
  4. செயற்றிட்ட முறை 
  5. ஒப்படை முறை

கற்பித்தல் நுட்ப முறைகள் 

கதை கூறல் , நடித்துக்காட்டல் , பொருட்காட்சி , முன் மாதிரி , விவாதம் .கலந்துரையாடல் , வினாக்கள் வினவுதல் ) 


கலைத்திட்ட விருத்தியுடன் தொடர்புடைய நிறுவனங்கள்

  1. தேசிய கல்வி ஆணைக்குழு 
  2. நிரல் கல்வி அமைச்சு 
  3. தேசிய கல்வி நிறுவகம்
  4.  கல்வி வெளியீட்டுத் திணைக்களம் 
  5. பரீட்சைத் திணக்களம்
  6. பாடசாலை 


முகாமைத்துவ வட்டம்

முறைசார்ந்த கலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதான கட்டங்கள் .

  1. திட்டமிடுதல் 
  2. ஒழுங்கமைத்தல் 
  3. நெறிப்படுத்தல்
  4. கட்டுப்படுத்தல் . 

வினைத்திறன் : வளங்களில் இருந்து உச்சப்பயனை பெறுவது வினைத்திறன் எனப்படும் .

 விளைதிறன் : உத்தேச நோக்கங்களை உயர்ந்த மட்டத்தில் அடைந்து கொள்வது விளைதிறன் எனப்படும் .


கலைத்திட்ட அமுலாக்கத்தில் காணப்படும் பிரச்சினைகள்

  1. ஆசிரியர் தொடர்பாக பிரச்சினைகள்
  2. மாணவர் தொடர்பான பிரச்சினைகள் 
  3. அதிபர் தொடர்பான பிரச்சினைகள் 
  4. பாடசாலை தொடர்பான பிச்சனைகள் 
  5. பெற்றோர் தொடர்பான பிரச்சினைகள்
  6.  சமூகம் சார்ந்த பிரச்சினைகள் 
  7. கலைத்திட்டம் தொடர்பான பிரச்சினைகள் 
  8. அரசியல் தொடர்பான பிரச்சினைகள்

Post a Comment

Previous Post Next Post