கற்றல் கற்பித்தலின் போது மாணவர்களின் விருத்தியை இனங்கண்டு அதற்காகப் பயன்படுத்தக் கூடிய உபகரணங்கள் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்கமைத்து முன்னெடுக்கும் வேலைத்திட்டம்


மாணவரை இனங்காண்பதற்கான வழிமுறைகள்

 • மேற்பார்வை
 • பரிசோதனை
 • அடைவு
 • எழுத்து
 • வாய்மொழிப் பரீட்சை
 • நேர்முகப் பரீட்சை
 • பிரதிபலிப்பு அறிக்கை.

Identify the student in tamilகுழுச் செயற்பாடு - நடத்தைக் கோலங்கள்

சமீர் தரம்-3 மாணவனாவான் அவன் அடுத்த பிள்ளைக்கு தொந்தரவு செய்வதற்கு விருப்பமுடையன். புத்தகங்கள் பற்றிக் கவனமில்லை. தாள்களை கிழித்து அவற்றினால் விமானங்கள் செய்து நண்பர்களுக்கு எறிவான். ஆசிரியரின் அறிவுறுத்தலைக் கேட்பதில்லை. ஆசிரியர்களிடம் எப்போதும் தண்டனை பெறுவான். அது அவனுக்கு பழக்கப்பட்டது. ஆசிரியர்கள் பற்றி அக்கறையில்லை. அவதானமாகச் செயற்படுவதில்லை. சித்திரம் வரைதலில் விருப்புடையவன். எனினும் அதற்கான உபகரணங்கள் இல்லை.

பாத்திமா தரம்8 இல் கல்வி பயில்கின்றாள். பாடசாலையின் வெளி விடயங்களில் எதவி செய்ய விருப்பமுடையவள். ஆசிரியருக்கு மரியாதை செலுத்துபவள். புத்தகம் வாசிக்க விருப்பமுடையவள். கற்பதற்கு ஆர்வம் உண்டு. எனினும் அடுத்த பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்வாள். விருப்பமான பாடம் ஆங்கில மொழியாகும்.மாணவர் வளர்ச்சி மற்றும் விருத்தி

விருத்தி என்பது

'அனுபவம், முதிர்ச்சியின் விளைவாக படிமுறையாகவும் எதிர்வு கூறக்கூடியதுமான வடிவமைப்பில் ஏற்படும் முன்னேற்றகரமான மாற்றங்களின் தொடர்ச்சியே விருத்தியாகும்" hurlock, e.b.1959

"முதிர்ச்சி,சூழலின் இடைத்தாக்கம் போன்றவற்றால் வளர்ச்சி, திறமையில் காலத்திற்கு காலம் நிகழும் மாற்றங்களின் செயன்முறையாகும்" Robert m.liber 1979

ஆகவே விருத்தியின் அடிப்படைக் கூறுகள். இது பிள்ளையிலன் சகல விடயங்களிலும் சீராக இடம் பெறவேண்டும்

1. உடல் விருத்தி
2. உளவிருத்தி
3.உணர்ச்சி விருத்தி
4 சமூக விருத்திவளர்ச்சி என்பது

வளர்ச்சி என்பது உடல் பருமனிலான மாற்றம் ஆகும். இது ஒவ்வொரு பிள்ளையின் தன்மைக்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டிருக்கும். சில பிள்ளைகள் உடல் பருமனில் சாதாரண வளர்ச்சிப் போக்கினைக் கொண்டிருப்பார்கள் இன்னும் சிலர் அதிக உடல் பருமனைக் கொண்டிருப்பர்.

மாணவரை விளங்கிக் கொள்வதற்கான மனோவியல் கோட்பாடுகள்:
 • Psycho analytic theory- உளப்பகுப்புக் கொள்கை சிக்மண்ட் பிராய்ட்
 • maslow's hierarchy of needs- தேவைக் கொள்கை மாஸ்லோ
 • Motivation theory= இயல்பூக்கக் கொள்கை மக்டூகல்
 • Cognitive development theory= அறிகைவிருத்திக் கொள்கை - பியாஜே

Psychology Tamil


உளப்பகுப்புக் கொள்கை

ஒரு மனிதனின் நடத்தைகளுக்கும், அன்றாட செயற்பாடுகளுக்கும் பிரதானமாக உள்ளம் செல்வாக்குச் செலுத்துவதாக sygmund freud குறிப்பிடுகின்றார்.

சிக்மண்ட் உள்ளத்தின் செயற்பாட்டை பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்.
 • நனவு மனம் conscious mind
 • நனவடி மனம்- subconscious mind
 • நனவிலி மனம் unconscious mindநனவு மனம் conscious mind
 • வெளிமனம். அண்மைக்காலத்தில் நடந்தவைகளை ஞாபகத்தில் வைத்திருக்கும். இது மிகக் குறுகிய கால ஞாபகமாகும். உதாரணம்:- நேற்று என்ன வேலை செய்தேன்
நனவடி மனம்- subconscious mind
 • இடைமனம். ஞாபகத்தில் இருந்து தூரமாகிய பகுதியாகும். நீண்ட கால ஞாபகம் அல்ல. பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்து நினைவில் கொண்டு வர முடியும். ஊதாரணமாக:- ஒரு கிழமைக்குள் நடந்தவை

நனவிலி மனம் unconscious mind
 • ஆழ்மனம். ஞாபகத்தில் இருந்து மீண்டும் நினைவுக்கு கொண்டு வருதல் சிரமமான பகுதி அதாவது ஞாபகத்தில் இருந்து துாரமாகி மறைந்து கொண்டிருக்கும் பகுதி. இதனுள் ஒருவரின் நிறைவேறாத ஆசைகள், எண்ணங்கள், சம்பவங்கள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.


ஆளுமையின் பிரிவுகள்

It - இட்
Ego -தான், அகம்பாவம்
Super ego - அதியகம்ஆளுமை பற்றிய வகைகள் 

வாய்வழி இன்பம் - oral stage
குதவழி இன்பம் - anal stage
பால் உறுப்பு இன்பம் - phallic stage
மறைநிலை இன்பம் - latent stage
இனவிருத்தி இன்பம் - genital stagemaslow's hierarchy of needs ( தேவைக் கொள்கை )
 • இக்கோட்பாட்டினை Maslow முன்வைத்துள்ளர். பிள்ளை விருத்தி சிறுபிராயத்தில் இருந்தே தேவைகள் நிறைவேறுவற்கேற்ப உண்டாவதாகக் கூறுவர்.
 • மனித தேவைகளுக்கு ஒரு வரிசையே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்
 • ஒவ்வொரு தேவைகளும் ஒவ்வொன்றாகவே நிகழுகின்றது என்பர்
 • ஒரு தேவை முடிந்தவுடனே அடுத்த தேவை எழுகின்றது என்பர்
எனவே பிள்ளைகளின் தேவைகளை இனங்காண்பதில் ஓர் ஆசிரியர் அதிக கரிசனை காட்டவேண்டியுள்ளதுMotivation theory ( இயல்பூக்கக் கொள்கை )
 • மனித நடத்தைக்கான காரணத்தை இயல்பூக்கத்தின் அடிப்படையில் விளக்குகிறார் madugall
 • இயல்பூக்கங்கள் எனப்படுபவை பிறப்பின் போது நாம் பெறுபவை
 • 14-18 வகையான இயல்பூக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளர்
 • ஒவ்வொரு இயல்பூக்கத்திற்கும் ஒரு மனவெழுச்சி உண்டு
 • இயல்பூக்கம் ஒவ்வொருவருக்கும் அளவில் வித்தியாசம் உண்டு
 • இயல்பூக்கம் அடக்கப்பட்டால் பிறழ்வான நடத்தை உருவாகும்
எனவே இயல்பூக்கங்களை நன்னெறிப்படுத்தல் வேண்டும்


Psychology TamilCognitive development theort ( அறிகைவிருத்தி கொள்கை )
 • இக் கோட்பாட்டினை jean piaget என்பவர் முன்வைத்தார்.
 • பிள்ளையின் வயதுடன் சிந்தனை விருத்தியடையும் என்பர்
 • சூழலோடு போராடுவதால் சிந்தனை விருத்தியடையும்
 • உளவளர்ச்சியடையும் செயற்பாட்டினை நான்காக விளக்கியுள்ளர்
 • ஒவ்வொரு பருவங்களிலும் சிந்தனை வளர்ச்சியடைகின்றது

அறிவாற்றல் நிலை

புலனியக்கப் பருவம்:- 0 - 2
துால சிந்தனைக்கு முற்பட்ட பருவம் :- 2-7
துால சிந்தனைப் பருவம்:- 7 - 11
நுயம சிந்தனைப் பருவம்:- 11- 15மாணவரை இனங்காண்பதன அவசியம்
 • மாணவரை விளங்கிக் கொள்ளல்
 • ஆசிரியர் மாணவர் உறவைப் பலப்படுத்தல்
 • மாணவர் அடைவை ஏற்படுத்தல்
 • பிள்ளைக்க கல்வி பெறும் உரிமையுண்டு
 • பிள்ளைக்கு தொடச்சியாக கல்வியை வழங்குதல
 • ஐ.நா.சபை -1959 "ஆரம்பக் கல்வியை பெறுவது பிள்ளையின் உரிமை"
 • உலக சிறுவர் ஆண்டு 1979
 • ஐ.நா.சபை- சிறுவர் சமவாயம் 1989
 • 1945 இலவசக் கல்வி அறிமுகம் - C.w.w.கன்னங்கரா
 • 1998 புதிய சல்விச் சீர்திருத்தம்


ஓர் ஆசிரியருக்கு மாணவரை இனங்காணலின் அவசியம்
கற்றல் கற்பித்தலை திட்டமிடுவதற்கு
தனியாள் வேறுபாடுகளை விளங்கி செயற்படுவதற்கு
தனது தொழில் வாண்மையை விருத்தியை செய்தல்
கல்விச் சட்டங்களையும் உயவியல்சார் கோட்பாடுகளையும் விளங்கிக் கொள்ளல்
பிள்ளையுடன் அன்பாக நடந்து கொள்ளல்
விசேட தேவையுடைய மாணவர்கள்

வகுப்பறையில் சாதாரண பிள்ளைகளைவிட மாறுபட்ட விசேட பிரச்சினைகள் உள்ள பிள்ளைகள்


விசேட தேவையுடைய மாணவர்களின் வகைகள்
 1. உடல் குறைபாடு
 2. உளக் குறைபாடு
 3. கட்புல குறைபாடு
 4. செவிப்புல குறைபாடு
மீத்திறன் கூடிய பிள்ளைகள்
மீத்திறன் குறைந்த பிள்ளைகள்உதவும் வழிமுறைகள்
 • அன்பையும் அதரவையும் பெற்றுக் கொடுத்தல்
 • சகல பிள்ளைகளையும் சமமாக மதித்தல்
 • மாணவர்களது ஆற்றலை உச்ச நிலைக்கு கொண்டு வருதல்
 • விசேட இயல்புகளுக்கு ஏற்ப கற்றல் செயற்பாடுகளை தயாரித்தல்
 • தியாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுதல்


Post a Comment

Previous Post Next Post