what are the meaning of project  in tamil


குறித்த இலக்கை அடைந்து கொள்வதற்கு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பாதீட்டுத்தொகைக்குள்ளும் வரையறுக்கப்பட்ட காலம், கிடைக்கப்பெறும் வளங்களுக்குள் அடைந்துகொள்ளும் முகமாக திட்டமிட்டு வடிவமைக்கப்படும் செயற்பாடுகள் செயற்றிட்டமாகும்.


செயற்றிட்டம் என்பது பற்றி....

  • வெந்திட்டங்கள் என்பது தற்காலிகமான ஒரு செறிபாடாகும். ( கிம் ஹெல்மன் )
  • ஒரு நிறுவனத்தின் ஒழுங்கமைந்த சொறிபாடுகளில் தொடர்இதிலையில் செயற்றிட்டங்கள் தற்காலியமான செயறியாடுகளாகும்
  • செயற்திட்டமானது செயல் ரீதியான சுற்றல் ஆரும். (ஜான் டுசி )


செயற்றிட்டத்தின் பண்புகள்...

  • தனித்தன்மை வாய்ந்தவை.
  • தற்காலிகமானவை.
  • செயற்றிட்டத்தின் இலக்குகள் அடையப்படும் நிலையில் செயற்றிட்டங்கள் முடிவுறுத்தப்படும்.

Psychology Tamil



செயற்றிட்டத்தின் வகைகள்

. தனிச்செயற்றிட்டம்
. குழுச்செயற்றிட்டம்



செயற்றிட்டத்தின் பிரதான விடயங்கள்.
  • நோக்கங்கள்
  • நியாயப்படுத்தல்
  • செயற்பாடுகள்
  • வெளியீடு
  • உள்ளீடு

செயற்றிட்டத்தின் தலைப்பினை தெரிவு செய்யும் போது !
பொருத்தமானதாயிருத்தல்
உரிய காலத்தில் நிறைவேற்றக்கூடியதாயிருத்தல்
மன நிறைவு தரக்கூடியதாயிருத்தல்
குறைந்த செலவில் அதிக பயன்
சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயிருத்தல்
வளங்களின் கிடைப்பனவு
ஏனையோரின் ஒத்துழைப்பை பெறக்கூடியதாயிருத்தல்




ஓர் செயற்றிட்டத்தை அடிப்படையாக வைத்து செயற்றிட்டம் தொடர்பான விளக்கம்....

எழு வினா- பிரச்சினையை இனங்காணல்,

1) பாடசாலையின் சுற்றாடலில் மரங்கள் குறைவாக காணப்படுகின்றமை. 
2) மாணவர்களுக்கு மரம் வளர்ப்பிலும் சுற்றாடல் நேயப்பண்பிலும் ஆர்வமில்லை.
3)பாடசாலையின் சூழல் மனதிற்கு இதமாக இல்லை 4)பாடசாலையின் சூழலில் நிழல் தரும் மரங்கள் இன்மையால் வெப்பநிலை அதிகரிப்பு.

தலைப்பு பாடசாலையின் சுற்றாடலில் பயன்தரு மரங்களை நாட்டி மாணவர்களிடையே சூழல் நேய மனப்பாங்கை ஏற்படுத்தல்

அனுமதி- பாடசாலையின் அனுமதி கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி




திட்டமிடல் 
1. பாடசாலையில் மாங்கள் நாட்டப்படுவதன் அவசியத்தை உணத்தல்
2. யரல்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை கண்டநிதம் 
3. செயற்திட்டத்திற்கான பௌதிக வளங்களை இனங்காணல்,
4. செயற்றிட்டத்திற்கான பாடசாலை சருக ஒத்துழைப்பை பெறவி 
5. மரங்களை தொடர்சியாக பராமசிப்பதற்கான எறியாடு செய்தல்

நோக்கங்கள்
1) பாடசாலையின் சுற்றுச்சூழலை அழகாக்கல்
2) மாணவர்களிடையே சூழல்நேயப்பண்பை ஏற்படுத்தல்.
3) மாணவர்களுக்கு பாடசாலையுடன் நீண்டகாலத் தொடர்பினை உள்ளார்ந்தவாறு ஏற்படுத்தல்
(4) நீண்டகால பயன்தரு மரங்களின் கழிவுகளிலிருந்து கூட்டெருதயாரித்தல்


நியாயப்பாடு
பாடசாலையில் போதியளவு நிலப்பரப்பு காணப்படுகின்ற போதும் அவை வெறுமையாகவே காணப்படுகின்றது மேலும் மாணவர்களிடையே சுற்றாடல் நேயப்பண்பும் மிக்க்குறைவாக காணப்படுகிறது. இந்நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் இப்பிரதேசங்கள் நிலக்கீழ் நீரற்ற வரட்சியான பிரதேசங்களாக மாறுவதுடன் இயற்கையுடன் இணைந்து வாழா சமூகமாகவும் உருவாகலாம் இதனை தடுப்பதற்கு எதிர்கால சந்ததியான மாணவர்களிடம் மரங்களை நேசிக்கும் மனப்பாங்கை உருவாக்கி சுற்றாடலைக் காப்போம்.


வளங்கள்
மனித வளம்
1) மாணவர்கள்
2) அதிபர். ஆசிரியர்கள்
3) பெற்றோர்கள்
4) சுற்றாடல் முன்னோடிக்குழு
5) பிரதேச விவசாயத்திணைக்களம், பிரதேச சுற்றாடல் அலுவலகம்

நிதி வளம்
(1) பாடசாலையின் நலன்விரும்பிகள்.

பௌதிகவளம்
1)பாட்சாலை நிலம்
2) பயன்தரு மரங்கள் 
3) பாடசாலையின் நீர் வளம்


காலச்சட்டகம்
செயற்றிட்டத்தின் செயற்பாடுகளை உப செயற்பாடுகளாக பிரித்து அவற்றை நிறைவேற்றுவதற்கு எடுக்கும் காலம் தொடர்பாகவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடலாகவும் இக்காலச்சட்டகம் அமைந்திருக்கும்

நடைமுறைப்படுத்தல்.
1) பாடசாலையில் மரங்களை நாட்டவேண்டிய பகுதிகளை அடையாளப்படுத்தன்.
2 .) செயற்பாட்டில் ஈடுபடும் மாணவர் தொகுதியை வரையறுத்தல்.
3) நாட்டவேண்டிய மரங்களின் வகையைத் தேர்ந்தெடுத்த
4) தெரிவு செய்கின்ற மரங்களை பெற்றுக்கொள்ளும் வழியை தேர்ந்தெடுத்தல்
5) மரங்களுக்கான நிலையான தீர்வசதியை ஏற்படுத்தல் 6
) பெற்றோர்,நலன்விரும்பிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல், 
7) பாடசாலை சமூகத்தில் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல்
8)மரங்களை தாட்டுவதற்கான திகதியை தீர்மானித்தல்.
9) மரங்களிற்கான பாதுகாப்பு ஏற்பாடு.
10) அறிக்கையிடல்.



செயற்றிட்டத்தினை நெறிப்படுத்தும் போது ....

களக்குறிப்பேட்டை பேணல்.
செவ்வை பார்த்தல் பட்டியல் பயன்படுத்தல்.
விபரணக் கோவையை பேணல்
தொடர்புகளை ஆவணப்படுத்தல்.
பிரதிபலித்தல் குறிப்புக்களை பேணல்
வேலை பகிர்வு பட்டியல் பேணல்.
சுயமதிப்பீட்டினை மேற்கொள்ளல்.




ஆசிரியர்களுக்கு செயற்றிட்டம்.....

வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளப்பழகுதல்.
செயன்முறை தகைமைகளை பெறல்
உழைப்பின் மகத்துவத்தை உணர்தல்,
தமது இயலுமையை உணர்தல்,
சுற்றாடல் வளங்களை பாதுகாத்தல்,
தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்தல்.
சுயகட்டுப்பாடு, சுயமதிப்பீடு விருத்தியடைதல்
நிதி பயன்பாடு முகாமைத்துவ விருத்தி.



உமக்கு மேற்பார்வைக்காக நியமிக்கப்பட்ட விரிவுரையாளர் மூலம் இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தலின் போது இடையிடையே விஜயம் செய்து கண்காணிப்பார்.

உமது செயற்பாடுகளுக்கு விரிவுரையாளரால் புள்ளிகள் வழங்கப்பட்டு மதிப்பிடப்படும்.

இச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட விதம், அதன் விளைவு, எதிர்கொண்ட சவால்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக முழுமையாக எம்மால் உருவாக்கப்படுகின்ற அறிக்கை இறுதி அறிக்கையாகும்.








Post a Comment

Previous Post Next Post