Learning Teaching Materials

வாண்மைத்துவத் தேர்ச்சிகளும் அதனுடன் தொடர்பான பண்புகளும் - அறிமுகம்

விளைதிறனான கற்பித்தலுக்கும் மாணவர்களது நேர்முறையான கல்வி அடைவுகளுக்கும் ஆசிரியர்களுக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டிய அறிவு, திறன்கள் மற்றும் தனிப்பட்ட குணாதிசியங்களே வாண்மைத்துவத் தேர்ச்சிகளும் அதனுடன் தொடர்பான பண்புகளும் ஆகும்.இந்த வாண்மைத்துவத் தேர்ச்சிகளும் அதனுடன் தொடர்பான பண்புகளும் பாட விடய அறிவு, கற்பித்தலியல் அறிவு (pedagogical knowledge) ஆளிடைத் திறன்கள் மற்றும் ஆசார நடத்தைகள் உட்பட்ட பல்வேறுபட்ட ஆற்றல்கள் மற்றும் பண்புகளை குறிப்பிடுகின்றது.

ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பாடவிடயத்தில் தேவையான அறிவைக் கொண்டவராக இருத்தல் வேண்டுமென்பதுடன், பல்வேறு வகையிலான கற்கும் ஆற்றலுடைய மாணவர்கள் அனைவரும் கற்கும் வகையில் கற்பித்தலை சரியாக வடிவமைக்கவும் கற்பிக்கவும் தேவையான திறன்களைக் கொண்டிருத்தல் வேண்டும். அத்துடன், சக்திமிகு வகுப்பறை முகாமைத்துத் திறன்கள் கொண்டவராகவும் மாணவர்களின் கற்றலை கணிப்பீடுசெய்யும் ஆற்றல் உடையவராகவும் இருத்தல் வேண்டும். மாணவர்களது அபிவிருத்திக்கு உதவும் வகையில் அவர்களது கணிப்பீட்டு முடிவுகளை அறிவிப்பதற்கு தரவுகளை பயன்படுத்தும் ஆற்றலும் ஆசிரியர்களுக்கு இருத்தல் வேண்டும்.


மேற்கூறிய தொழில்நுட்பத் திறன்களுக்கும் அறிவுக்கும் மேலதிகமாக, விளைதிறன்மிக்க ஆசிரியர்கள் தமது தொழிலில் வெற்றிபெறுவதற்கு மிகவும் அவசியமான தனிப்பட்டப் பண்புகள் பலவற்றையும் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். அவையாவன தொடர்பாடல் திறன்கள், ஏற்புடையதும் உதவுகின்றதுமான நடத்தை, வாண்மைத்து வளர்ச்சியலும் கற்றலிலும் அர்ப்பணிப்புடையவர் மற்றும் மாணவர்களிடையே காணப்படும் பல் கலாசார மத வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு உயர்ந்த மதிப்பளித்துச் செயலாற்றும் பண்புடையவராக ஆசிரியரிருத்தல் வேண்டும்.

ஆசாரமான நடத்தைகள் மற்றும் வாண்மைத்துவம் என்பன விளைதிறனான கற்பித்தலுக்கு மிக அத்தியாவசியமான காரணிகளாகும். மேலும் மாணவர்களின் தனிப்பட்ட விடயங்களை தாம் அறிந்திருந்தால் அவற்றை அந்தரங்கமாக வைத்திருக்கும் நேர்மையாகவும் நாணயமாகவும் நடந்துகொள்ளும் பண்பு அவரிடமிருத்தல் வேண்டும். அத்துடன் மாணவர்கள் புலமைசார் விடயங்களிலும் மற்றும் சமூகரீதியாகவும் மேம்பாடடைவதற்குத் தேவையான சூழலை உருவாக்கிக் கொடுப்பவராக ஆசிரியர் செயற்பட வேண்டும்.


சுருக்கமாகக் கூறின், மாணவர்களது வெற்றிக்கு உதவக்கூடிய வாண்மைத்துவ தேர்ச்சிகள் மற்றும் அதனுடன் தொடர்பான பண்புகள் என்பனவற்றில் ஆசிரியர்கள் விளைதிறனைக் கொண்டிருத்தல் அத்தியாவசியமானதாகும். ஆசிரியர்கள் தொடர்ச்சியாக. மேற்கூறிய தேர்ச்சிகளையும் பண்புகளையும் வளர்த்துக்கொள்தலும் புதிப்பித்துக் கொள்வதன் மூலமும் ஆசிரியர்கள் தமது வினையாற்றுகை உயர்த்திக் கொண்டு மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்தவும் ஒட்டுமொத்தமாக முழுக் கல்வி முறைமையும் மேம்பாடடைய தனது பங்களிப்பை வழங்கமுடியும்



ஆசிரியர்களுக்கான வாண்மைத்துவ விருத்திக்காக தேர்ச்சிகளின் முக்கியத்துவம் (Importance of competencies for teacher professionalism)

ஆசிரியர்கள் தமது கடமைகளையும் பொறுப்புகளையும் விளைதிறனாக நிறைவேற்றுவதற்கு தேர்ச்சிகளின் அங்கங்களான அறிவு. திறன்கள் மற்றும் நல்ல மனப்பாங்கைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். ஆசிரியர்கள் தமது தொழிலில் சிக்கலான நிலமைகளை எதிர்நோக்கும் போதும். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பணியாற்றவும். ஆற்றலுடையவர்களாக ஆசிரியர்கள் செயற்படுவதற்கு அத்தகைய தேரடச்சிகள் ஆசிரியர்களுக்கு இருத்தல் வேண்டும்.


ஆசிரியர் வாண்மைத்துவத்துக்கு ஏன் தேர்ச்சிகள் முக்கியமானவை என்பதற்கு கீழே சில குறிப்பானக் காரணங்கள் தரப்பட்டுள்ளன.

1. தரமான கற்பித்தல்: தரமான கற்பித்தல் இடம்பெறுவதை உறுதிசெய்வதற்கு தேர்ச்சிகள் மிக முக்கியமானவை. தேவையான தேர்ச்சிகளை கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அதிகளவில் தமது கற்பித்தல் செயன்முறையில் விளைதிறனானவர்களாக இருப்பதற்கும் மாணவர்களின் வகுப்பறையில் வெற்றிகரமாகக் கற்றலில் ஈடுபட உதவுபவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

2. வாண்மைத்துவ அபிவிருத்தி: வாண்மைத்துவ அபிவிருத்திக்கு ஒரு சட்டகத்தை தேர்சிகள் வழங்குகின்றது. ஆசிரியர்கள் தமது தொடரான வாண்மைத்துவ அபிவிருத்திக்கு தான் பெற்றுக்கொள்ள வேண்டுமென கருதப்படும் குறிப்பான அறிவு, திறன்கள் மற்றும் மனப்பாங்கு என்பனவற்றை இனங்காணுதல் அல்லது விருத்திசெய்து கொள்ளுதல் மூலம் அவர்கள் தம்மை வாண்மைத்துவ ரீதியில் அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.

3. வகைகூறல்: ஆசிரியர் வினையாற்றுகைக்கான தராதரங்கள் மற்றும் எதிர்பார்க்கைகள் தாபிப்பதற்கு இந்த தேர்ச்சிகள் உறுதுணையாக அமைகின்றன. ஆசிரியர்கள் இத்தகைய எதிர்பார்க்கைகளை அடைந்திருத்தலையும் தமது பணியை செய்வதில் தொடர்ச்சியாக மேம்பாடடைவதை உறுதிசெய்து கொள்வதற்கும் அவர்கள் வகைகூறலை தம்வசம் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.


4. தொழிலில் மேம்பாடடைதல்: ஆசிரியர்கள் தமது தொழிலில் மேம்பாடடைவதற்கு தேர்ச்சிகள் பிரதான இடத்தை வகிக்கின்றன. ஆசிரியர்கள் தாம் கொண்டிருக்க வேண்டிய குறிப்பான தேர்ச்சிகளில் பாண்டித்தியத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்கள் அவர்கள் பதவி உயர்வுக்கான தகுதி அடைந்துள்ளார்கள் என்பதை அல்லது பாடசாலையிலோ அல்லது தான் பணியாற்றும் கல்வி வலயத்திலோ வேறு வாய்ப்புகளைப் பெறத் தகுதியுடையவர் என்பதை நிருபிப்பவராக இருப்பார்.


சுருக்கமாகக் கூறின். தேர்ச்சிகள் ஆசியர் வாண்மைத்துவத்துக்கு மிக முக்கியமானவைகளாகும். ஏனெனில், அவர்கள் தமது பணியைச் செய்வதற்குத் தேவையன அறிவு, திறன்கள் மற்றும் நல்ல மனப்பாங்கை கொண்டவர்களாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும் தனது வகுப்பில் கற்கும் சகல மாணவர்களது தேவைகளை நிறைவேற்றவும் முடியும்.



விளைதிறனான ஆசிரியர்களின் தனிப்பட்டப் பண்புகள் (திறமையான ஆசிரியர்களின் தனிப்பட்ட பண்புக்கூறுகள்)

விளைதிறனான ஆசிரியர்கள் தமது தொழிலில் வெற்றிபெறுவதற்குத் தேவைாயன தனிப்பட்டப் பண்புகள் பலவற்றைக் கொண்டவர்களாக இருப்பர். அவைாயவன:

1. உத்வேகமும் ஆர்வமும்: விளைதிறனான ஆசிரியர்கள் தமது பாட அறிவையும் கற்பித்தலையும் ம்ேபடுத்திக் கொள்வதில் உத்வேகமுடையவராகவும் ஆர்வமுடையவராகவும் செயலாற்றுவார்.அவர்கள் தமது மாணவர்கள் கற்றலில் ஈடுபடுவதற்கான உணர்வை ஏற்படுத்துவதற்கான உகந்த கற்றல் சூழலை உருவாக்கும் ஆற்றலுடையவாக இருப்பார்

2. அர்ப்பணிப்பு: விளைதிறனான ஆசிரியர்கள் தமது தொழில் மற்றும் மாணவர்களது மேம்பாட்டிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவார். அவர்கள் மாணவர்கள் வெற்றியடைவதற்குத் தேவையான உதவிகளை அர்ப்பணிப்புடன் செய்வதுடன் தன்னாலான சகல உதவிகளையும் செய்பவராக இருப்பார்

3. பொறுமை: ஒவ்வொரு மாணவனும் வெவ்வேறு வேகத்தில் கற்பவர் என்பதை ஏற்றுக் கொண்டு பொறுமையுடன் செயற்படுபவராக ஆசிரியர்கள் இருப்பர். மாணவர்கள் தமது உள்ளாற்றல்களை விருத்திசெய்து கொள்வதற்காக பொறுமையுடன் தனிபட்ட வகையில் ஒவ்வொரு மாணவனுக்கும் தனிப்பட்ட வகையில் கற்பித்தலில் ஈடுபடுபவாக இருப்பர்.

4. நெழும்தன்மையுடையவராக இருத்தல்: விளைதிறனான ஆசிரியர்கள் தமது மாணவர்களின் கற்றல் தேவைகளைக் கருத்தில் கொண்டு நெகிழும் தன்மையுடையவராகவும் பல்வேறு நிலமைகளுக்கு ஏற்ப தம்மை இசைவாக்கிக் கொளபவராகவும் இருப்பர். தமது மாணவர்களுக்கு உதவுவதற்காக கற்றலுக்கு புதிய யோசனைகளையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்துவர். அவற்றைப் பரீட்சித்துப்பார் மற்றும் புதிய செயலுபாயங்களை உருவாக்குவர்.

5. பரிவுணர்வு (Empathy விளைதிறனான ஆசிரியர்கள் மாணவர்கள் மீது கருணையும் பரிவும் கொண்டவர்களாக இருப்பர். மாணவர்கள் தமது தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து வைத்திருந்து அதற்கேற்ப அவர்கள் மாணவர்கள் மீது கருணைக் காட்டுபவர்களாக மற்றும் பரிவுணர்வுடையவர்களாக செயற்படுவர்.மாணவர்கள் மரியாதையுடன் நடத்தப்படல் வேண்டுமென்பதை உணர்ந்து அவர்கடைய பெறுமதியிறிந்து அதற்காக பாதுகாப்பானதும் உகந்ததுமான கற்றல் சூழலை உருவாக்குவர்

6. தொடர்பாடல் திறன்கள்: விளைதிறனான ஆசிரியர்கள் வாய்மொழி மற்றும் எழுத்து மொழி மூலத் திறன்களை உடையவராக இருப்பர். தமது மாணவர்கள் சிக்கலானஎண்ணக்கருக்களைக் கூட இலகுவில் விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் மொழிப்பிரயோகங்களை மேற்கொள்ளக்கூடியவராக இருப்பர். அத்துடன் பெற்றார். சக நண்பர்கள் மற்றும் நிருவாகிகளுடன் திறந்த மனதுடன் உரையாடக்கூடியவர்களாக இருப்பர்.

ஒழுங்கமைப்புத் திறன்கள்: விளைதிறனான ஆசிரியர்கள் தமத நேரத்தை விளைதிறனாக செலவு செய்யும் வகையில் ஒழுங்குபடுத்தியும் முகாமைசெய்தும் வருவர்.தமது வகுப்பறையை முகாமை செய்வதற்கு முன்கூட்டியே திட்டமிட்டுக் கொண்டும். நேர்த்தியான பதிவுகளை மேற்கொண்டும் தனது வகுப்பறை முகாமைத்துவப் பணிகளை முன்னெடுத்துச் செல்வர். சுருக்கமாக தொகுத்துக் கூறின், விளைதிறனான ஆசிரியர்கள் தமது மாணவர்களது தனிப்பட்ட மட்டங்களைக் கவனத்தில் கொண்டு அவர்கள் கற்றுக் கொள்வதற்குத் தேவையான கற்றல் சூழலை உருவாக்குவதற்கும் அவர்கள் கல்வியில் வெற்றிபெறுவதற்கு உதவும். அவசியமான தனிப்பட்டப் பண்புகள் பலவற்றைக் கொண்டவராக இருப்பபர்.



21ம் நூற்றாண்டுத் திறன்களும் ஆசிரியர் வாண்மைத்துவமும் (21st Century Skills and Teacher Professionalism)

தொழிநுட்ப வளர்ச்சி. பூகோள பொருளாதாரத்தில் மாற்றங்கள் சமூக கலாசார நியமங்களில் மாற்றங்கள் உட்பட பல்வேறு துரித மாற்றங்கள் ஏற்பட்டுள்ள ஒரு காலகட்டமாக 21ம் நூற்றாண்டு அமைதந்துள்ளது. இந்த மாற்றங்களுக்குத் துலங்களைக் காட்டும் வகையிலும் 21ம் நூற்றாண்டில் வெற்றிகரமான ஒரு வாழ்க்கையை கொண்டு நடாத்தவும் ஒவ்வொரு தனியாளும் அடையாளப்படுத்தப்பட்ட தேர்ச்சிகள் மற்றும் திறன்கள் தொகுதி ஒன்றைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். அத்தகையத் திறன்களே 21ம் நூற்றாண்டுத் திறன்கள் என அழைக்கப்படுகிறன்றது. இவை நுண்ணாய்வுச் சிந்தனைத் திறன்கள். பிரச்சினைத் தீர்க்கும் திறன்கள் இணைந்து செயற்படும் திறன்கள், தொடர்பாடல், ஆக்கத்திறன்கள், எண்மான எழுத்தறிவு (digital literacy) மற்றும் பூகோள விழிப்புணர்வு போன்றத் திறன்கள் இவற்றில் சிலவாகும்.

கல்வித்துறையில்,மாணவர்கள் மத்தியில் 21ம் நூற்றாண்டின் திறன்கள் வபற்றிய ளர்க்கப்படல் வேண்டும் என்பதும் மற்றும் ஆசிரியர் வாண்மைத்துவம் மீது இதனுடைய தாக்கம் வலியுறுத்தல்கள் அதிகரித்து வந்துள்ளது. மாணவர்களுக்கு 21ம் நூற்றாண்டின் திறன்களை வழங்குவதற்கு ஆசிரியர்களும் 21ம் நூற்றாண்டுத் திறன்களை வளர்த்துக் கொள்வதுடன் தமது வாண்மைத்து அபிவிருத்தியின் மீது கவனம் செலுத்துபவர்களாக இருத்தலின் தேவை உணரப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்கள் கல்வித் துறையில் சமகால போக்குகள் கல்வியிலும் தொழிநுட்பத்திலும் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி என்பனவற்றைக் கற்றுக்கொள்ளும் மற்றும் தொடர்ச்சியாக தமது அறிவையும் திறன்களையும் இற்றைப்படுத்திக் கொள்ளும் தேவையும் அதற்காக ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டிய தேவையும் முன்னெப்போதும் இல்லதவாறு எழுந்தள்ளது. இறுதியாக. இந்த 21ம் நூற்றாண்டில் மாணவர்கள் வெற்றிகரமாக தமது வாழ்க்கையை கொண்டு நடாத்துவதற்கு ஏற்ற வகையில் அவர்கள் 21ம் நூற்றாண்டு திறன்களை தம்வசமாக்கிக் கொள்ளும் வகையில் அவர்களை தயார் செய்யும் பொறுப்பு ஆசிரியர்கச்ை சார்ந்ததாகும்.


பாடசாலைகளில் சிறந்த நடைமுறைகளுக்காக பிரயோகித்தல் 216 நூற்றாண்டுத் திறன்களைப் (பள்ளிகளில் சிறந்த நடைமுறைகளுக்கு 21 ஆம் நூற்றாண்டின் திறன்களின் பயன்பாடு)

பாடசாலைகளில் 21ம் நூற்றாண்டுத் திறன்களைப் பிரயோகித்து சிறந்த நடைமுறைகளை மேற்கொள்ளும் போது அது மாணவன் கற்றலில் வெற்றி பெற உதவியாக அமையும். பாடசாலைகளில் 21ம் நூற்றாண்டுத் திறகளை எவ்வாறு பயன்படுத்தி சிறந்த நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பதற்கு உதாரணங்கள் சில கீழேத் தரப்பட்டுள்ளது.

1. நுண்ணாய்வுச் சிந்தனையும் பிரச்சினைத் தீரத்தலும்: மாணவர்கள் நுண்ணாய்வு ரீதியாக சிந்திக்க வைப்பதற்கும் சிக்கலான பிரச்சளைகளைத் தீர்ப்பதற்கும் வாய்பளிக்கும் வகையில் சவாலான செயற்பாடுகளை மாணவர்களுக்கு வழங்குதல். தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல் மற்றும் வியாக்கியாணம் கூறல், வாதங்களையும் சான்றுகளையும் மதிப்பிடல் மற்றும் யதார்த்த உலகிலுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை இனங்காணல் என்பனவற்றை உள்ளடக்கிதாக இருத்தல் வேண்டும்.

2. இணைந்தும் அணியாகவும் பணியாற்றல்: குழுச் செயற்பாடுகளில் ஈடுபடல் மற்றும் சகபாடிக் கற்றல் செயற்பாடுகள் போன்ற கற்பித்தல் முைைறகளை ஆசிரியர்கள் வடிவமைத்து மாணவர்களை அதில் ஈடுபடுத்துவதன் மூலம் மாணவர்கிடையே இணைந்து செயற்படும் மற்றும் அணியாக செயற்படும் திறன்களை மாணவர்களில் ஏற்படுத்தலாம். அத்துடன் இது ஆளிடைத் தொடர்புத் திறன்களையும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் திறன்களையும் மாணவர்களிடம் அபிவிருத்திசெய்யும்.

3. தொடர்பாடல்: மாணவர்களுக்கு பொது இடங்களில் உரையாற்றவும். எழுதுவதற்கும் மற்றும் முன்வைப்புகளை மேற்கொள்ளவும் சந்தர்ப்பங்களை ஆசிரியர்கள் உருவாக்குவதன் மூலம் மாணவ்கள் விளைதிறான தொடர்பாடல் திறன்களை படிப்படியாக வளர்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன் தனது கருத்துகளை மற்றும் அபிப்பிராயங்களை ஏனையவர்களுக்கு எவ்வாறு தெளிவாகவும் பவ்வியமாகவும் வழங்குதென்ற திறன்களை விருத்திசெய்து கொள்ள முடியும்.

4. ஆக்கத்திறனும் புத்தாக்கமும்: மாணவர்கள் புதிய அணுகுமுறைகளுடன் மற்றும் புதிய சிந்தனைகளுடன் கண்டறிதல்களிலும் பரிசோதனைகளிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்கும் போது மாணவ்கள் ஆக்கத்துக்கும் புத்தாக்கத்துக்கும் தூண்டப்படுவர். மாணவர்கள் யதார்த்த உலகில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கும் திறன்களை வளர்க்க செயற்றிட்ட அடிப்படையிலான கற்றல் வடிவங்களை உருவாக்கி மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

5. எண்மான எழுத்தறிவு (Digital literacy)மாணவர்கள் எண்மான எழுத்தறிவுத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு ஆசிரியர்கள் தமது கற்பித்தல் செயன்முறையில அதிகளவிற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் வேண்டும். ஆய்வுக்காக. இணைந்து செயற்படுவதற்காக மற்றும் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்காக எண்மானக் கருவிகளைப் பயன்படுத்துதலை இது உள்ளடக்கும்

6. பூகோள விழிப்புணர்வு: பல்வேறு வகையிலான கலாசார நோக்குகளை மாணவர்களுக்கு வெளிப்படுத்துவதன் மூலம் அதற்கான செயற்பாட்டை விரிவாக்குவதன் மூலம் மாணவர் மத்தியில் பூகோள விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். பூகோளமயக் கற்றல். கலாசார பரிமாற்ற நிகழ்ச்சிகள் மற்றும் உலகின் பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்தல் போன்ற செயற்பாடுகள் இதிலடங்கும்.


மாணவர்கள் 210 நூற்றாண்டில் வெற்றிபெறுவதற்கு தேவையான திறன்களை அபிவிருத்திசெய்ய உகந்த போதன வடிவங்களை அமுலாக்கும் செய்வதும் சூழலை உருவாக்குவதும் அதை சாத்தியமாக்கும். இத்தகைய திறன்களை நன்றாக அபிவிருத்தி செய்து அவற்றை தம்வசமாக்கிக் கொண்ட மாணவர்கள் வேகமாக மாற்றமடைந்து வரும் உலகில் வெற்றிபெறவும் தனது சமூக வளர்ச்சிக்கும் பூகோள ரீதியிலான வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்யக்கூடிய மாணவர்கள் உருவாக்குப்படுவார்கள்.



Post a Comment

Previous Post Next Post